Published:Updated:

“சிம்புனு ஒரு நடிகர் இருக்காரா?”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: தி.ஹரிஹரன், தி.குமரகுருபரன்.

“கொஞ்ச நாளைக்கு முன்ன ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில் சொல்லியிருந்தாரே... அதானே! கேளுங்க. ஆனா, என்னை ரொம்பக் கலாய்ச்சுடாதீங்க” - வேண்டுகோளுடன் தயாராகிறார் `இந்து முன்னணி' தலைவர் ராமகோபாலன்.

“என் ஃபியான்சி பாபி சிம்ஹா, எங்க ரெண்டு பேருக்குமான காதல்... அதை மட்டும் கேக்காதீங்க. மத்தபடி நீங்க எந்தக் கேள்வி கேட்டாலும் டக்கு டக்குனு பதில் சொல்றேன்” - உஷாராக உற்சாகமாகிறார் நடிகை ரேஷ்மி மேனன்.

“இளையராஜா, பத்திரிகையாளரைச் சந்தித்தபோது நடந்த கூத்தைப் பாத்தீங்களா? பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னா, அதைச் சொல்லிட்டுப் போயிருக்கலாம். அதுக்கு ஒரு நிருபரை இப்படியா போட்டுத் தாக்குறது? சரி, நம்ம ஜாலி கேள்விக்குப் போவோம்” - வான்டடாக வண்டியில் ஏறுகிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

“நான் பத்தாவதுல மூணு சப்ஜெக்ட் பாஸானதே பக்கத்துல இருந்த பையனாலதான் தல. அப்பவும் ரெண்டு சப்ஜெக்ட் ஃபெயில். அப்புறம் படிப்பையே ஷட்டர் போட்டு க்ளோஸ் பண்ணிட்டேன். இப்ப உங்க பரீட்சையிலயும் கன்ஃபர்மா நான் ஃபெயில்தான்'' - தலைமுடியை கோதிப் பேசத் தொடங்குகிறார் காமெடி நடிகர் யோகி பாபு.

 “சிம்புனு ஒரு நடிகர் இருக்காரா?”

``ஜெயலலிதா அண்மையில் யாரை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கி, மீண்டும் உடனே சேர்த்தார்?’’

பதில்: நட்ராஜ், தமிழ்நாடு காவல் துறை முன்னாள் டி.ஜி.பி. 

ராமகோபாலன்: கேள்வியை இரண்டு முறை கேட்டவர், “நட்ராஜ்தானே? அது அவங்க கட்சியோட உரிமை. யாரை வேணும்னாலும் நீக்கு வாங்க... யாரை வேணும்னாலும் சேர்த்துக்குவாங்க. அதை நாம எப்படித் தட்டிக்கேட்க முடியும்?”

ரேஷ்மி மேனன்: திடுக்கிட்டு, “என்னங்க முதல் கேள்வியே பாலிட்டிக்ஸா இருக்கு? எல்லா கேள்வியுமே இப்படித்தான் இருக்குமா? எங்க அம்மாவுக்குத்தான் பாலிட்டிக்ஸ்ல ஆர்வம். அவங்களைக் கூப்பிட்டுப் பக்கத்துல உட்கார வெச்சுக்கிறேன். அப்படி எல்லாம் செய்யக் கூடாதா? நான் சின்னப் பொண்ணுங்க. நான் ரொம்பக் கம்மியான மார்க் வாங்கினா நல்லாவா இருக்கும்?” என்றவர் விடாப்பிடியாக தன் அம்மாவிடம் பதிலைக் கேட்டு, “தி ஆன்ஸர் இஸ் நட்ராஜ். எனக்கு பாதி மார்க்காச்சும் குடுத்துடுங்க'' எனச் சிரிக்கிறார்.

 சாரு நிவேதிதா: “முன்னாள் டி.ஜி.பி ஆர்.நட்ராஜ். நீக்கிட்டாங்கனு தெரியும். திரும்பவும் சேர்த்துக்கிட்டாங்களா? அது தெரியாதே எனக்கு!”

 யோகி பாபு: “தல.... எனக்கே விவூதி அடிக்கிற பாத்தியா? சினிமாவைப் பத்தி கேட்டாலே என் டப்பா டப்பங்குத்து டான்ஸ் ஆடும். இதுல அரசியல் வேறயா..? என்னைத்தான் சில படங்கள்ல கால்ஷீட் இல்லேனு நீக்கிட் டாங்க. ஆனா, மறுபடியும் சேர்த்துக்கலை!”

 “சிம்புனு ஒரு நடிகர் இருக்காரா?”

`` ‘கபாலி’ படத்தில் ரஜினி ஜோடி யார்?’’

பதில்: ராதிகா ஆப்தே

ராமகோபாலன்: சின்னதாகச் சிரித்தவர் “ரஜினி நல்ல மனிதர். இப்ப ‘கபாலி’ங்கிற படத்துல நடிச்சுட்டு இருக்காரா என்ன? நல்லது. ஆனால், ரஜினி நடித்த ஒரு படத்தைக்கூட நான் இதுவரை பார்த்ததே இல்லியே தம்பி. இதுல யார் அவர்கூட ஜோடி சேர்ந்து நடிக்கிறார்னு எனக்கு எப்படித் தெரியும்?”

ரேஷ்மி மேனன்: “சூப்பர் கேள்வி... சூப்பர் ஸ்டார் ஹீரோயின் ராதிகா ஆப்தே.''

சாரு நிவேதிதா: “ராதிகா ஆப்தே. இந்த நடிகையின் தென்இந்திய ரசிகர் மன்றத் தலைவரே நான்தான். சிறந்த நடிகை. ஆனா, அவங்களையும் தமிழ் சினிமாவில் கலர் டிரெஸ் போட்டு கன்னாபின்னா டான்ஸ் ஆட விட்டுடுவாங்க.”

யோகி பாபு: “ரஜினி சார் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் படத்துல சின்ன கிராஸிங் சீன்ல வந்தாக்கூட அது என் பிறவி பாக்கியம் சார். அந்த வாய்ப்புகாகத்தான் வெயிட்டிங்” என்றவரிடம், ``பதிலைச் சொல்லுங்க'' என்றால் “பதில் தெரிஞ்சா முன்னாடியே சொல்லியிருக்க மாட்டனா தல?'' என்றவரிடம் பதிலைச் சொன்னதும். `என்னது... ராதிகா ஆஃப் ஆகிடுச்சா? என்னங்க பேரு இது?” எனச் சிரிக்கிறார்.

 “சிம்புனு ஒரு நடிகர் இருக்காரா?”

``சிம்பு, கடைசியாக நடித்து ரிலீஸான படத்தின் பெயர் என்ன?’’

பதில்: வாலு

ராமகோபாலன்: “ `ஔவையார்’, `ராஜராஜ சோழன்’ படங்கள்தான் கடைசியாக நான் பார்த்த படங்கள். இப்ப நீங்க சொன்ன பையன் பெயரையே இப்பத்தான் கேள்விப்படுறேன். சிம்புனு ஒரு நடிகர் இருக்காரா?” என எதையோ யோசித்தவர், “ஏதோ இப்பக்கூட ரொம்பச் சர்ச்சையான பாட்டு பாடினார்னு பேப்பர்ல பார்த்தேன். அந்தப் பையனா இவரும்?” என சிம்புவைப் பற்றி டீட்டெய்ல் கேட்டுக்கொண்டார். 

ரேஷ்மி மேனன்: “இப்படியே கேட்டீங்கன்னா... செமயாக இருக்கும். பதில்... `வாலு’.”

சாரு நிவேதிதா: “ஏதோ சுவத்துல இருந்து கை வெச்சுத் தாண்டுறது மாதிரி ஸ்டில் வரும். அதுதான் சிம்பு நடிச்ச கடைசிப் படம். அடுத்து லேட்டஸ்ட்டா ரிலீஸானது ‘பீப்’ படம். என்ன அநியாயம் பண்றாங்க? திட்டமிட்டே அராஜகம் பண்றாங்க” எனச் சூடாகிறார்.

 “சிம்புனு ஒரு நடிகர் இருக்காரா?”

யோகி பாபு: “ வாலு... வாலு... வாலு... ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன். நாங்க எல்லாம் அஞ்சு கேள்விக்கு ஒரு பதில் சொன்னாலே அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ணிட்டோம்னு அர்த்தம்!”

“எல் நினோ என்றால் என்ன?”

பதில்: சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பசிபிக் கடல் மட்டத்தின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால் உலக அளவில் பருவநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. பசிபிக் கடல்நீர் மட்டத்தின் வெப்பம் அதிகரிப்பதை ‘எல் நினோ’ என்கிறார்கள்.

ராமகோபாலன்: “ஏதோ ஜப்பான் வார்த்தை மாதிரி தெரியுது. பதில் தெரியலைப்பா!”

ரேஷ்மி மேனன்: சந்தேகமாக... “Climate change?”

சாரு நிவேதிதா: “ஏதோ பருவநிலை மாற்றம் சம்பந்தமான வாக்கியமா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா அதுதான் அப்பப்போ கொஞ்சம் புரியாத வார்த்தை மாதிரியே இருக்கும்!”
யோகி பாபு: “எல் என்றால் சாப்பிடும் எள்ளு,  நினோ என்றால் நில்லு. ரெண்டையும் சேர்த்தால் `எள்ளை நின்றுகொண்டே சாப்பிடு'னு அர்த்தம் வருது. கரெக்ட்டா தல? கொஞ்சம் சுமாரான ஜோக்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!''

`` ‘தங்கமகன்’ படத்தில் தனுஷின் பெயர் என்ன?’’

பதில்: தமிழ்

ராமகோபாலன்: “ஹா.. ஹா... எனக்கு பதில் தெரியாதுனு உங்களுக்குத் தெரியும். பத்திரிகையில இந்தப் படத்தோட விளம்பரம் பார்த்தேன். வாழ்த்துகள்!''

ரேஷ்மி மேனன்: “தமிழ்... படத்தோட டிரெய்லர்லயே சும்மா தெறிக்கவிட்டாரே!”

சாரு நிவேதிதா: “ம்ஹூம்... தெரியாது!”

யோகி பாபு: “டிரெய்லர்ல அவர் பேரு சொல்வாரே... இப்ப ஞாபகம் வரலை” பதிலைச் சொன்னதும்... “ஒரு சின்ன ஹெல்ப் தல... இந்தக் கேள்விக்கு மட்டும் நான் ‘தமிழ்’னு சரியான பதில் சொன்னது மாதிரி எழுதிடுங்க, ப்ளீஸ்...  தனுஷ் சாரைப் பார்க்கப்போனா ஹெல்ப்பிங்கா இருக்கும். என்ன டீல் ஓ.கே-வா?”