Published:Updated:

பூலோகம் - சினிமா விமர்சனம்

பூலோகம் - சினிமா விமர்சனம்

பூலோகம் - சினிமா விமர்சனம்

பூலோகம் - சினிமா விமர்சனம்

Published:Updated:

ரு கீரைக்கட்டில் இருந்துகூட கொள்ளை லாபம் எடுக்கும் கார்ப்பரேட் சூழ்ச்சியை, ‘பாக்ஸிங் ரிங்’கில் வைத்துப் பின்னியெடுக்கிறது ‘பூலோகம்’.

பொழுதுபோக்கு, தேசப்பற்று, ஆரோக்கியம் என ஒவ்வொன்றையும் கார்ப்பரேட்களின் லாபவெறிக் கண்ணி எப்படி இறுக்கிப் பிடித்திருக்கிறது என்பதை பொளேர் பாக்ஸிங் பன்ச்களுடன் வெகுஜனத்துக்குக் கடத்தியிருக்கிறார் இயக்குநர் கல்யாணகிருஷ்ணன்.

பாக்ஸிங் விளையாட்டில் பரம்பரைப் பகையாளிகள், வடசென்னையின் நாட்டு மருந்துப் பரம்பரையும் இரும்பு மனிதர் பரம்பரையும். இந்தத் தலைமுறையில் பூலோகம் (ஜெயம் ரவி) எதிர் முகாமின் ராஜேஷை வீழ்த்த நினைக்க, அதை `டி.ஆர்.பி டிரெண்டிங்’காக மாற்றி கோடிகளைக் குவிக்கத் திட்டமிடுகிறார் தனியார் டி.வி சேனல் உரிமையாளர் பிரகாஷ்ராஜ். திடுக் திருப்பங்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் இருந்து ஒரு ‘கில்லர்’ பாக்ஸர் போட்டியில் பங்கேற்கிறார். லாபத்துக்காக பாக்ஸிங் ரிங்கில் வைத்து ரவியைக் கொல்லத் திட்டமிடுகிறார் பிரகாஷ் ராஜ். அமெரிக்க பாக்ஸரையும்,  கார்ப்பரேட் வெறியையும் ரவி ஒருசேர எப்படிச் சமாளித்தார்?

பூலோகம் - சினிமா விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முரட்டு பாக்ஸராக மிரட்டுகிறார் ரவி. திமில் உடலும் திமிர் கோபமுமாக ருத்ரதாண்டவம். தொழில் முறை பாக்ஸர் போல ரிங்குக்குள் நுழைவதற்கு முன்னரே வெறியேற்றிக் கொள்வது, படபடவென நடனமாடிய படியே பன்ச் களைப் பறக்கவிடுவது என ஒவ்வொரு ரவுண்டிலும் டிஸ்டிங்ஷன்.

ஒரு காட்சியில் ஆங்கிலம் பேச, பல காட்சிகளில் டாட்டூ காட்ட... மட்டுமே பயன்பட்டுள்ளார் த்ரிஷா. பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மற்றும் பலரும் பக்கா. மொழி, இனம், வறுமை, தேசபக்தி என அனைத்தையும் பணமாக்கும் கார்ப்பரேட் களவாணித்தனங்களை உரித்து உப்புக்கண்டம் போடுகின்றன எஸ்.பி.ஜனநாதனின் வசனங்கள்.

ஆனால், அதிகம் படிக்காத பூலோகம், திடீரென உலக அரசியல் பேசும் அதிபுத்தி சாலியாக மாறுவது

பூலோகம் - சினிமா விமர்சனம்

எப்படி? `மயான கொள்ளை’ பாடலில் உக்கிரம் காட்டும் ஸ்ரீகாந்த் தேவா, பின்னணி இசையில் குழந்தையாகி விடுகிறார். சதீஷ்குமாரின் கேமரா, பாக்ஸிங் ரிங்குக்குள் துள்ளி விளையாடுகிறது.

கைதட்டி ரசிக்க மட்டும் அல்ல... கைகட்டி யோசிக்க வைத்ததில் ஈர்க்கிறான் ‘பூலோகம்’.

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism