2015 ஸ்பெஷல்
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பா.ஜான்ஸன்

சைஸ் ஸீரோ’ என ஜிம்மில் எடுத்த ஹாட் வொர்க்அவுட் செல்ஃபிக்களை ஸ்ரேயா வெளியிட, பத்திக்கிச்சு பரபரப்பு. ‘படத்துல நடிக்கிறேனோ இல்லையோ, ஷேப்பை மெயின்டெயின் பண்றதுல நான் ரொம்பக் கவனமா இருப்பேன். ரசிகர்கள் என்னைக் கொஞ்சம் மறந்திருந்த நிலையில், இந்த செல்ஃபிக்கள் மூலம் ட்ரெண்ட் ஆனதில் நான் ரொம்ப ஹேப்பி’ என, ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் ஸ்ரேயா!

பிட்ஸ் பிரேக்

தமிழில் நயன்தாரா என்றால், இந்தியில் கம்பேக் ராணி ப்ரியங்கா சோப்ரா. ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் அடக்கமான மனைவியாக நடித்த ப்ரியங்கா,  ‘ஜெய் கங்காஜல்’ படத்தில் அதிரடி போலீஸாக  மிரட்டியிருக்கிறார். பிரகாஷ் ஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம், மார்ச் மாதம் ரிலீஸ். ரெளடிகளை ஓட ஓட விரட்டும் என்கவுன்டர் போலீஸாக செம ஃபிட் ப்ரியங்கா. கால்களைச் சுழற்றிச் சுழற்றி அடிக்கும் காட்சிகளுடன் படத்தின் டிரெய்லர் யு-டியூபில் வியூஸ் எகிற, ரசிகர்களுக்கு சல்யூட் அடிக்கிறார் ப்ரியங்கா!

பிட்ஸ் பிரேக்

‘ ‘தாரே ஜமீன் பர்’ படம்தான் எனக்கு நம்பிக்கையையும் மன வலிமையையும் அளித்தது’ - இளம் வயதிலேயே முதுமை அடையும் ‘ப்ரோஜிரியா’ எனும்  நோயால் பாதிக்கப்பட்ட (‘பா’ படத்தில் அமிதாப் பச்சனுக்கு இருக்கும் நோய்) 14 வயது சிறுவன் நிஹில் பிட்லா, அமீர் கானைச் சந்தித்துச் சொன்ன வார்த்தைகள் இவை. அமீரின் தீவிர ரசிகரான இவர், தான் வரைந்த விநாயகர் ஓவியம் ஒன்றை அமீருக்குப் பரிசளிக்க, கலங்கிய கண்களுடன் நிஹிலைக் கட்டியணைத்திருக்கிறார் அமீர்!

பிட்ஸ் பிரேக்

தமிழிலும் தெலுங்கிலும் ஜஸ்ட் ஹீரோயினாக வலம்வரும் காஜல் அகர்வால், இந்தியில் பெர்ஃபாமன்ஸ் நடிகை. 2011-ம் ஆண்டு வெளியான ‘ஆல்வேஸ்’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் ‘தோ லஃப்ஸோன் கி கஹானி’ என்ற இந்திப் பட நடிப்பில், செம ஸ்கோர் செய்திருக்கிறார். படத்தில் காஜலுக்கு பார்வைக் குறைபாடுள்ள பெண் கேரக்டர். காஜலுக்கு ஜோடி, ரந்தீப் ஹூடா. பிப்ரவரி 14-ம் தேதி படம் ரிலீஸ்!

பிட்ஸ் பிரேக்

அக்‌ஷய் குமாருக்கு 2016-ம் ஆண்டு ரொம்ப ஸ்பெஷல். ரஜினிகாந்துடன் ‘2.0’ படத்தில் இணைந்திருக்கும் இந்த நேரத்தில், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘ஏர் லிஃப்ட்’ படத்துக்காகக் காத்திருக்கிறார் அக்‌ஷய். 1990-ம் ஆண்டு குவைத் மீது ஈராக் போர் தொடுக்க, அங்கே 1,70,000 இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்டுவர ராணுவ விமானங்களைப் பயன்படுத்த முடியாத நிலையில், `ஏர் இந்தியா’ விமானங்கள் மூலம் இரண்டு மாத காலத்தில் மக்களை மீட்டுவந்த த்ரில்லிங் சம்பவம்தான் `ஏர் லிஃப்ட்’. அதிக எண்ணிக்கையிலான மக்களை மீட்டுவந்ததால், இந்த நிகழ்வு அப்போது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது!

பிட்ஸ் பிரேக்

21-21. கிரிக்கெட் மேட்ச் இல்லை பாஸ்... டிசம்பர் 21-ம் தேதி, 21 வயதை எட்டியிருக்கிறார் நஸ்ரியா. இவரின் பிறந்த நாளும், அவரது சகோதரர் நவீன் நசீமின் பிறந்த நாளும் ஒரே தினம் என்பதால் இருவரும் ஒரே தினத்தில் கேக் வெட்டிக் கொண்டாட, அதை ஃபஹத்பாசில் தன் ஃபேஸ்புக்கில் பதிந்திருக்கிறார். பதிவிட்ட சில மணி நேரத்தில்  வைரல் தீ பற்றிக்கொண்டது. நஸ்ரியாவை மிஸ் பண்ணுறவங்க எல்லாரும் கை தூக்குங்க!