2015 ஸ்பெஷல்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: சுரேஷ்

ஜோக்ஸ் - 1

 ‘‘ ‘நிவாரணப் பணிகளை  சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கணும்’னு  தலைவர் எதுக்காகச் சொல்றாரு?’’

‘‘ஸ்டிக்கர் தீர்ந்திருச்சாம்!’’

- அஜித்

ஜோக்ஸ் - 1

 ‘‘எனக்குன்னு சொந்தபந்தம் யாரும் இல்லை!’’

‘‘தலைவரே, அப்போ உங்களோட 15,000 கோடி ரூபாய் சொத்தையும் தமிழக மக்களுக்குத் தாரைவார்த்துடுங்க!’’

- சி.பி.செந்தில்குமார்

ஜோக்ஸ் - 1

 ‘‘சொன்னா கேளுங்க தலைவரே, கட்சித்தாவலுக்குத்தான் கார் தருவாங்க...

வாட்ஸ்அப் குரூப் தாவினதுக்கு எல்லாம் தர மாட்டாங்க!’’

- பெ.பாண்டியன்

ஜோக்ஸ் - 1

‘‘தலைவரே, கூட்டணியில் நமக்கு ஒரே ஒரு தொகுதி.

அதுவும் நிபந்தனையோட ஒதுக்கியிருக்காங்க.’’

‘‘என்ன நிபந்தனை?’’

‘‘அதுல நீங்க நிற்கக் கூடாதாம்!’’

- பர்வீன் யூனுஸ்