Published:Updated:

ரஜினி - ஷாரூக் ஷுட்டிங்!

சஸ்பென்ஸ் கலைக்கும் செளந்தர்யாம.கா.செந்தில்குமார்

##~##

ஜினிகாந்த் - ஷாரூக் கான் ஆகியோரை இணைத்து இயக்கி,  திருமணத்துக்குப் பிறகான தனது செகண்ட் இன்னிங்ஸை மிகவும் ஆரவாரமாகத் துவக்கி இருக்கிறார் சௌந்தர்யா அஸ்வின்!  

இந்திய அளவில் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கும் 'ரா-ஒன்’ படத்துக்காக ஷாரூக் - ரஜினி இருவரையும் இயக்கித் திரும்பிய சௌந்தர்யாவைச் சந்தித்தேன்.

''ரஜினி - ஷாரூக்... எப்படி சாத்தியமாச்சு?''

''அப்பா - ஷாரூக் ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். 'ரா-ஒன்’ படத்தில் ஷாரூக் ரோபோ. ஏற்கெனவே 'எந்திரன்’ படத்தில் ரோபோவா நடிச்ச அப்பாவுக்கு படத்தில் மரியாதை செய்யணும்னு ஷாரூக் ஆசைப் பட்டார். 'ராணா’ தயாரிக்கும் ஏராஸ் கம்பெனிதான் ஷாரூக்குடன் சேர்ந்து 'ரா-ஒன்’ பண்றாங்க. 'படத்தில் ஒரு சீக்வென்ஸ் இருக்கு. ரஜினி சார் பண்ணா நல்லா இருக்கும்னு ஷாரூக் விரும்புறார்’னு சொன்னாங்க. ஒரு ரஃப் ரெஃபரன்ஸ் போர்ஷனும் ஷூட் பண்ணி அனுப்பினாங்க. அதைப் பார்த்துட்டு நானும் அப்பாகிட்ட பேசினேன். 'ரா-ஒன்’னில் அப்பா 'சிட்டி’யாவே வந்தா நல்லா இருக்கும்’னு பேசினோம். 'கரெக்ட். நீ பேசிடு’னு அப்பா சொன்னார். ஷாரூக்கிடம் பேசினேன். மூணு நாள் டிஸ்கஷனுக்குப் பிறகு என் ஸ்டுடியோவில் ஒரு ஸ்டோரி போர்டு பண்ணேன்.

ரஜினி - ஷாரூக் ஷுட்டிங்!

நானும் அப்பாவும் போன வாரம் மும்பை போனோம். அந்த ஃபுல் போர்ஷனையும் நானே டைரக்ட் பண்ணினேன். ஆர்ட் டைரக்டர் சாபு சிரில், சவுண்டு இன்ஜினீயர் ரசூல் பூக்குட்டினு எல்லார் கூடவும் வேலை பார்த்தது பெரிய அனுபவம். அப்பா ஒன்றரை மணி நேரம் ஸ்பாட்ல இருந்தார்!''

''ஷாரூக் எப்படிப் பழகினார்?''

''ஜெம் ஆஃப் எ ஜென்டில்மேன். ஷூட்டிங் முடிஞ்சு திரும்பியதும் 'அப்பா வரும் போர்ஷனை எடிட் பண்ணும்போது நானும் கூட இருக்கலாமா’னு கேட்டேன். 'வித் பிளஷர். வீட்டுக்கு வாங்க’னு கூப்பிட் டார். மும்பையில் ஷாரூக் வீட்டில் ஒரு ஃப்ளோர் முழுக்க ஸ்டுடியோ. அவர் மனைவி கௌரி, பிள்ளைகள் சுஹானா, ஆர்யன்னு ரொம்ப அருமையான ஃபேமிலி. எடிட்டிங்கில் ஒரு சில கரெக்ஷன்ஸ் சொன்னேன். எடிட்டிங் முடியும் வரை ஷாரூக்கும் கூடவே இருந்தார். எடிட் முடிஞ்சு ப்ளே பண்ணதும் அப்பா வர்ற ஸீன்ல மொத்த டீமும் கைதட்டிப் பாராட்டினாங்க. டைட்டில்ல இருந்து க்ளைமாக்ஸ் வரை 'ரா-ஒன்’ செம த்ரில்லிங்கா இருக்கும் என்பதற்கு நான் கியாரன்டி. 'ரா-ஒன்’ தமிழ் வெர்ஷனுக்கு  அப்பாவே டப்பிங் பேசி இருக்கார்!''  

ரஜினி - ஷாரூக் ஷுட்டிங்!

'' 'சுல்தான் தி வாரியர்’ என்ன ஆச்சு?''

''இனி, அது 'சுல்தான் தி வாரியர்’ இல்லை. கதை முதல் தலைப்பு வரை எல்லாமே மாறி இருக்கு. கே.எஸ்.ரவி குமார் அங்கிள் கதை, வசனம் எழுதி இருக்கார். அப்பாவின் கேரக்டர் பெயர்தான் படத்தின் பெயரும். ரொம்பவே வித்தியாசமான பெயர். அதுலயே ஒரு பவர் இருக்கும். 'பெர்ஃபார்மன்ஸ் கேப்சர்’ டெக்னாலஜியைப் பயன்படுத்தி இருக்கோம். இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி வரும் முதல் இந்திய அனிமேஷன் படம். அதனால் ரொம்பவே கவனமா இருக்கோம்!''

'' 'ராணா’ எந்த ஸ்டேஜ்ல இருக்கு?

''பீரியட் ஃபிலிம். அப்பாவுக்கு மூணு ரோல்னு ரொம்பவே வேலை வாங்குற ஸ்டோரி. அதனால், ரவிகுமார் அங்கிள் ஷெட்யூலை ரீ-வொர்க் பண்ணிட்டு இருக்கார். இந்தப் பேட்டி மூலமா  அப்பாவின் ரசிகர்கள், நலம் விரும்பிகள், விகடன் வாசகர்கள் எல்லாருக்கும் சொல்லிக்கிறேன்... தலைவர் இப்போ பக்கா. சீக்கிரமே 'ராணா’ படப்பிடிப்பு துவங்குவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்!''

ரஜினி - ஷாரூக் ஷுட்டிங்!

''அப்பா திரும்ப நார்மலுக்கு வந்துட்டாரா?''

''பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்! என் அனிமேஷன் பட வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்த்துட்டு இருக்கார். குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுறார். அக்கா பசங்க யாத்ரா, லிங்காகூட விளையா டிட்டே இருப்பார். என் கணவர் அஸ்வின்கூட சினிமா தவிர, அரசியல், ஸ்போர்ட்ஸ்னு எல்லா விஷயங்களும் பேசுவார். தனுஷ் கூட சினிமா பத்திப் பேசிட்டு இருப்பார். இந்த கஷ்டமான நாட்களில் அவ்வளவு வலியைச் சுமந்ததும் என் அம்மாதான். வீடு, ஸ்கூல், என் ஆபீஸ்னு எல்லா இடத்தையும் நிர்வாகம் பண்ணிட்டே இருந்தாங்க. அதுக்கு நடுவுல தேவை இல்லாத வதந்திகளுக்கும் பதில்

ரஜினி - ஷாரூக் ஷுட்டிங்!

சொல்லிட்டு இருந் தாங்க. அவங்க பட்ட கஷ்டத்தைவார்த்தை யால் சொல்ல முடியாது!''

''உங்க கல்யாண வாழ்க்கை எப்படிப் போயிட்டு இருக்கு?''

''திரும்பிப் பார்த்தா ஒரு வருஷம் போயிடுச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கோம். அஸ்வின் ரொம்பவே சிம்பிள். பார்க்குற எல்லாரும் 'அஸ்வின் நீயே நடிக்கலாமே’னு சொல்றாங்க. அவர் ஆசைப்பட்டாலும் நான் விட மாட்டேன். ஆனா, அவருக்கே சினிமாவில் இன்ட்ரஸ்ட் இல்லை. அவர் தன் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியைப் பெருசா எடுத்துட்டுப் போகணும்னு கடுமையா வேலை பார்த்துட்டு இருக்கார். இப்போதைக்கு எங்களுக்குச் செல்லம் நாங்க வளர்க்குற நாய்க் குட்டி பப்பிதான். அஸ்வின், நான், பப்பினு... லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!''