Published:Updated:

“பாலா ஸ்கூல்ல படிக்கப் போறேன்!”

“பாலா ஸ்கூல்ல படிக்கப் போறேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்சன்

“பாலா ஸ்கூல்ல படிக்கப் போறேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்சன்

Published:Updated:
“பாலா ஸ்கூல்ல படிக்கப் போறேன்!”

“ஆர்யா, என் நெருங்கிய நண்பன்; பாபி சிம்ஹா, எங்க ஊர் ஆளு; ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் இயக்குநர் ‘பொம்முரில்லு’ பாஸ்கர், என் தோஸ்த்... இப்படி படத்தில் எல்லாருமே எனக்குப் பரிச்சயமான கேங். அதனால ஷூட்டிங் செம ஜாலியா இருந்தது. ஆர்யா எப்பவுமே ஷூட்டிங் ஸ்பாட்ல ஏதாவது காமெடி பண்ணிட்டிருப்பான்; சீரியஸ் ஷாட்லகூடச் சிரிக்க வெச்சிடுவான். வாழ்க்கை செம ஜாலியாவும் கொஞ்சம் பிஸியாவும் போயிட்டிருக்கு” என ரகளை கிளப்பும் ராணா,  நமக்கு `பாகுபலி' பல்வாள் தேவனாகப் பரிச்சயம்.

“ `பாகுபலி’ முதல் பாகமே பிரமாண்டமாக இருந்தது. `பாகுபலி-2’ என்ன ஸ்பெஷல்?”

“ `பாகுபலி’ முதல் பாகம் மூலமா எனக்கு நிறைய பேர், புகழ் கிடைச்சது. `பாகுபலி-2’ வந்ததும் `பாகுபலி’ முதல் பாகம் ஒரு சின்னப் படம் மாதிரி தோணும்.  ‘பாகுபலி' இப்போ ஒரு பெரிய பிராண்ட். இரண்டாம் பாகம் அதை இன்னும் அழுத்தமாகப் பதிவுசெய்யும். இப்போ நான் இன்னும் 25 கிலோ எடை கூட்டணும். என்ன பண்ணினாலும் ரசித்துச் செய்றேன். ட்ரெயினிங் எல்லாம் முடிஞ்சதும் மார்ச் மாசம் ஷூட்டிங் ஆரம்பம். ஆர்வமாக் காத்திருக்கேன்.”

“பாலா ஸ்கூல்ல படிக்கப் போறேன்!”

“ `பாகுபலி’யில் மிரட்டல் வில்லன்... ‘பெங்களூர் டேஸ்’ல ஃபஹத் பாசில் நடிச்ச ஒரு சாஃப்ட் ரோல்... எப்படி உணர்றீங்க இந்த வித்தியாசத்தை?”

“நான் ஹைதராபாத்ல இருந்தப்போ ‘பெங்களூர் டேஸ்’ பார்த்தேன். அப்பவே ஃபஹத் ரோல் எனக்குப் பிடிச்சிருந்தது. என்கிட்ட இந்த ரோல் பண்ண சொன்னதுமே ரொம்ப சந்தோஷமா ஒப்புக்கிட்டேன். உருவத்தைவெச்சு கேரக்டரை முடிவுபண்ண முடியாது. அப்படிப் பார்க்கும்போது, நிஜத்தில் என் குணம் பல்வாள் தேவனைவிட `பெங்களூர் நாட்கள்’ ஷிவ்தாஸ்கூடத்தான் அதிகம் பொருந்தும்.”

“நீங்க இயக்குநர் பாலா படத்தில் நடிக்கப்போறதா சொல்றாங்களே?”

“ஆமாம்.... பாலா சார்கூட வொர்க் பண்ண ரொம்பவும் ஆசையா காத்திருக்கேன். அவர் என்னைக் கூப்பிட்டு கதை சொன்னப்போ,  சிலிர்த்துப்போயிட்டேன். என்ன கதை, என்ன கேரக்டர்னு இப்போதைக்கு எதுவும் சொல்ல மாட்டேன். எப்போ ஷூட் ஆரம்பிக்குதுனு தெரியலை. ஆனா, இப்பவே நான் ரெடியாகிட்டு இருக்கேன். பாலா சாரோட `பிதாமகன்’ என் ஆல் டைம்  ஃபேவரிட். ராஜமௌலி சாரா இருக்கட்டும், `பெங்களூர் டேஸ்’ இயக்குற பாஸ்கர் சாரா இருக் கட்டும்... எல்லா இயக்குநர்களும் புதுசா ஒண்ணு கத்துக்கொடுப்பாங்க. அதேபோல பாலா சார் ஸ்கூலிலும் கத்துக்க ஆர்வமா இருக்கேன்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பாலா ஸ்கூல்ல படிக்கப் போறேன்!”


“த்ரிஷாவுடான காதல்...” தொடங்கும்போதே குறுக்கிட்டவர்...

“இது ஒரு நல்ல கேள்வி... பட், அடுத்த கேள்விக்கு வாங்களேன்.”

“ஓ.கே உங்களுக்கு எப்போ கல்யாணம்?” 

“அட... நான் பார்க்கத்தான் இவ்வளவு பெரிய ஆளாத் தெரியறேன். ஆனா, வயசு ரொம்ப கம்மி. கல்யாணத்துக்கு இன்னும் டைம் இருக்கு பாஸ்.”

“பாலா ஸ்கூல்ல படிக்கப் போறேன்!”

“சரி... நீங்களாவது சொல்லுங்க... கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?”சிரித்தவர்... “இதுக்கு நான் பதில் சொன்னா, `ராஜமௌலி ஏன் ராணாவைக் கொன்றார்?'னு அடுத்ததா ஒரு கேள்வி வரும்.  உங்க கேள்விக்கான பதிலைத் தெரிஞ்சுக்க `பாகுபலி- 2’ வர்ற வரைக்கும் நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும்.”

“பாலா ஸ்கூல்ல படிக்கப் போறேன்!”

புல்லட் கேள்விகள்

``நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா?’’

``தெரியலயேப்பா!’’

``சினிமாவில் ரொம்பப் பிடிச்ச ஜோடி யார்?’’

``கமல் - ஸ்ரீதேவி.’’

``தமிழ் சினிமாவில் பெஸ்ட் ஃப்ரெண்ட்?’’

``ஆர்யா.’’

``உங்க கனவு?’’

``நிறைய வித்தியாசமான ரோல்கள்ல   நடிக்கணும்.’’

``தமிழில் பிடித்த பாடல்?’’

``தனுஷ் பாடின எல்லா பாடல்களும்.’’

தமிழில் பிடித்த படம்?

``நாயகன்.’’

``பிடித்த இயக்குநர்?’’

 ``மணிரத்னம், பாலா, அமீர்...னு  பெரிய லிஸ்ட் இருக்கு.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism