Published:Updated:

ஆபரேஷன் சக்சஸ்... ஆட்டத்துக்கு ரெடி!

ஆபரேஷன் சக்சஸ்... ஆட்டத்துக்கு ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபரேஷன் சக்சஸ்... ஆட்டத்துக்கு ரெடி!

ஆறு மாத ஓய்வுக்குப் பிறகு...அஜித் on the way அதிரடிம.கா.செந்தில்குமார்

ஆபரேஷன் சக்சஸ்... ஆட்டத்துக்கு ரெடி!

ஆறு மாத ஓய்வுக்குப் பிறகு...அஜித் on the way அதிரடிம.கா.செந்தில்குமார்

Published:Updated:
ஆபரேஷன் சக்சஸ்... ஆட்டத்துக்கு ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபரேஷன் சக்சஸ்... ஆட்டத்துக்கு ரெடி!

‘அதெல்லாம் கிடைக்கணும்னா இதெல்லாம் தாங்கித்தான் ஆகணும்’- ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் சேர்ந்தபோது அருகே இருந்த சங்கம் தியேட்டரில் ‘வேதாளம்’ ரசிகர்களின் சரவெடிக் கரவொலிக்கு அஜித்திடம் இருந்து வந்த ரிப்ளை ரியாக்‌ஷன் இது. இந்த நேர்மறை எண்ணம்தான் அஜித் ஸ்பெஷல்.

`அடுத்த அஜித் படம் என்ன?’ என்ற கேள்வி எழுந்தபோது, ‘அது... இது...’ என அலையடித்தன ஏகப்பட்ட தகவல்கள். ஆனால் அவரோ ‘நெக்ஸ்ட்... ரெஸ்ட்’ என்றார். ஆமாம்... அது, ‘ஆரம்பம்’ படப்பிடிப்பில் பட்ட அடி. அதே அடிபட்ட காலுடன்தான் ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’ படங்கள் பண்ணினார். ‘வேதாளம்’ டான்ஸில் ஒரு மூவ்மென்ட் அதிக வேலை வாங்க, தாங்கமுடியாத வலியால் துடித்தவருக்கு நிற்கக்கூட முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து நடித்து ‘வேதாளம்’ படத்தை முடித்துக்கொடுத்தார்.

‘ ‘பேக்கப் பண்ணிடலாம் சார்’னேன். ‘வேணாம் நடிக்கிறேன்’னு சொல்லி தொடர்ந்து நடிச்சார். அதுக்குக் காரணம், சொன்னா அதைச் செஞ்சிடணும்கிற நம்பிக்கை. ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தணும் என்ற கமிட்மென்ட் - இதுதான் அஜித் சார் ஸ்பெஷல்’ என்பார் இயக்குநர் சிவா.

ஆபரேஷன் சக்சஸ்... ஆட்டத்துக்கு ரெடி!

ஆபரேஷனுக்காக பல நாட்கள் காத்திருந்த கால்வலியை இந்த முறை அஜித்தால் தள்ளிப்போட முடியவில்லை. அந்த அளவுக்குப் பொறுக்கமுடியாத வலி. வலது கை, வலது கால் இரண்டிலும் ஆபரேஷன் பண்ணவேண்டிய சூழல். தவிர இடது காலில் இருந்து சதையை எடுத்து வலது காலுக்குப் பொருத்த வேண்டியதால் மூன்று ஆபரேஷன் கணக்கு. ‘வேதாளம்’ நவம்பர் 10-ம் தேதி ரிலீஸ்; நவம்பர் 11-ம் தேதி அஜித்துக்கு ஆபரேஷன்.

இவர் ஆபரேஷனுக்காக அட்மிட் ஆன மருத்துவமனைக்கு அருகிலேயே சங்கம் தியேட்டர். ரசிகர்களின் ஆரவாரம் மருத்துவமனையில் இருந்த அஜித்துக்குத் தெளிவாகக் கேட்டிருக்கிறது. அதுவும் ‘ஆலுமா டோலுமா’வுக்கு ரசிகர்கள் பிரித்தெடுக்க, பொறுக்கமுடியாத அந்த வலியிலும், ‘கைதட்டல் கிடைக்கணும்னா வலி தாங்கணும்’ எனச் சிரித்திருக்கிறார் அஜித்.

‘இரவு 9 மணிக்கு ஆபரேஷன். மூன்று நாட்கள் கண்டிப்பாக ஐ.சி.யூ-வில் இருந்தே ஆகணும்’ - அஜித்துக்கு மருத்துவர்கள் இட்ட அன்பு கட்டளை இது. ஆபரேஷன் முடிந்தது. ஐ.சி.யூ-வில் அவருக்கான படுக்கையும் தயாரானது. அதற்குள் அரசல்புரசலாக அஜித் ஆபரேஷன் விஷயம் ரசிகர்களுக்குக் கசிய ஆரம்பித்தது. நம்மால் மற்றவர்களுக்கு ஏன் சிரமம் என நினைத்த அஜித் மறுநாள் காலையிலேயே டிஸ்சார்ஜ் செய்யுமாறு வலியுறுத்தினார். மருத்துவர்கள் மறுக்க, இவர் பிடிவாதம் பிடிக்க... கடைசியில் வெற்றி அஜித்துக்கே. வீட்டுக்குச் செல்லத் தயாரானார். ஆம்புலன்ஸை ரெடி செய்தது மருத்துவமனை நிர்வாகம். அதையும் தவிர்த்துவிட்டு கை, கால்கள் என மூன்று கட்டுகளுடன் தன் காரிலேயே வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

நவம்பர் 12-ம் தேதியில் இருந்து இப்போது வரை எளிய உடற்பயிற்சி, கடுமையான டயட்... என முழு ஓய்வில் இருக்கிறார் அஜித். மேலும் இரண்டரை மாதங்கள் ஓய்வுக்காக விரைவில் லண்டன் செல்கிறார். இதற்கு இடையில், ‘அஜித்தின் அடுத்த படம் என்ன?’ என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் மீண்டும் அலையடிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், அதற்கான பதில் ஏற்கெனவே இறுதிசெய்யப்பட்டுவிட்டது. ‘வேதாளம்’ ரிலீஸ் சமயத்தில் இயக்குநர் சிவாவிடம் பேசியபோது, ‘அஜித் சாரைப் பொறுத்தவரை நடிக்கிற தொழில்ல மட்டும்தான் அவரது கவனம். அழகாகப் படம் எடுக்கிறது, பிரச்னை இல்லாம அதை ரிலீஸ் பண்றது, படம் சம்பந்தப்பட்டவங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... இதுதான் அவர் எண்ணம்’ என்றார்.

ஆமாம்... அது உண்மைதான். ‘வீரம்’, ‘வேதாளம்’ தந்த அதே சிவாதான், அஜித்தின் அடுத்தப் படத்தையும் இயக்குகிறார். எல்லாமே கறார் கமர்ஷியலாகிவிட்ட சினிமாவில் தனக்கென நற்பெயரை இன்னும் தக்கவைத்துள்ள ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம்தான் தயாரிக்கிறது. மே மாத இறுதியில் படப்பிடிப்பு.

யெஸ், அஜித் ஆன் தி வே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism