Published:Updated:

ரஜினிமுருகன் - சினிமா விமர்சனம்

ரஜினிமுருகன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினிமுருகன் - சினிமா விமர்சனம்

ரஜினிமுருகன் - சினிமா விமர்சனம்

ரஜினிமுருகன் - சினிமா விமர்சனம்

ரஜினிமுருகன் - சினிமா விமர்சனம்

Published:Updated:
ரஜினிமுருகன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினிமுருகன் - சினிமா விமர்சனம்

ஸ்வீட் ராஸ்கல் சினா கானாவின் வருத்தப்பட வைக்காத ஜாலி கேலி சினிமா!

தாத்தா ராஜ்கிரணுக்குச் சாப்பாடு கொடுக்கும் நேரம் தவிர, மற்ற நேரம் எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு கீர்த்தி சுரேஷோடு ரொமான்ஸும், சூரியோடு காமெடியும்தான். உருப்படாத பையன் என எதிர்ப்பு எக்குத்தப்பாகக் கிளம்ப, வாழ்க்கையில் செட்டில் ஆக தாத்தாவிடம் குடும்பச் சொத்தை விற்று ஷேர் கேட்கிறார் சிவா. வெளிநாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த ஷேர்ஹோல்டர்களும் இதற்காக இந்தியா வர, `எனக்கும் ஒரு ஷேர் உண்டு, நானும் ராஜ்கிரணின் பேரன்தான்’ என ஆட்டையைக் கலைக்கிறார் லோக்கல் ரெளடி சமுத்திரக்கனி. குடும்பமே ஷாக் ஆக, `ரஜினிமுருகன்' எனப் பெயர் வைத்துக்கொண்டு இதைக்கூடவா சமாளிக்க மாட்டார் சிவா?

சிட்டி சில்மிஷங்கள் மறந்து, மீண்டும் மினி பஸ்ஸில் உற்சாக விசில் அடித்து ஏறியிருக்கிறார் சிவா. ஆடி காரை ஆட்டி ஆட்டி ஓட்டுவதும், வருங்கால மாமனாரை வம்புக்கு இழுப்பதும், ஓவர்லாப்பில் ஒபாமா வரை வசனத்தில் கலாய்ப்பதும் என, 360 டிகிரி காமெடியில் கலக்குகிறார். ஓப்பனிங் சாங்குக்கு கைக்குழந்தையே தியேட்டரில் இறங்கி ரெண்டு குத்துபோடும் அளவுக்கு குழந்தைகளின் ஃபேவரிட் சிவா. சுளீரென விறைப்பதும் பளீரெனக் கலாய்ப்பதுமாக, `இந்த நிமிஷம் இந்த ரியாக்‌ஷன்தான் கொடுப்பார் மனுஷன்’ எனச் சொல்ல முடியாமல் நிமிஷத்துக்கு நிமிஷம் ஜாலி கெத்து. முறைப்பதும், முகம் திரும்பியதும் குழைவதும் என சூடான ஜில் ஐஸ்க்ரீமாக கீர்த்தி சுரேஷ். அதுவும் எறும்பு ஊரும் கீர்த்தியின் இடுப்பில் வழுக்கிவிழுகிறார்கள் வாலிபர்கள். எல்லா எக்ஸாமுமே அரியர் என இருந்த சூரிக்கு, இதில் டிஸ்டிங்ஷன். ராஜ்கிரணும் காமெடியில் இறங்க, கெத்தாக நின்று ஸ்கோர்செய்கிறார் சமுத்திரக்கனி. அசால்ட் மதுரை உடல்மொழியும், முரட்டுத் தமிழும், தோளில் கிடக்கும் அந்தக் குட்டித்துண்டும்... அந்தர் பண்ணிட்டீங்க கனி!

ரஜினிமுருகன் - சினிமா விமர்சனம்

`வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஹேங்ஓவர் என்றாலும், அதையே க்ளைமாக்ஸ் ஜாலி ட்விஸ்ட்டாகவும் வைத்து சமாளித்துவிட்டார் இயக்குநர் பொன்ராம். காமெடி மசாலா முதல் பாதியில் தீர்ந்ததும், பஞ்சாயத்து, குடும்ப சென்டிமென்ட்... என ரூட் பிடித்து அடித்துப் பந்தாடுகிறார் சவாரியை. அதிலும் முதல் பஞ்சாயத்துக்கு ஆள் திரட்டுவதும், அந்தப் பஞ்சாயத்து அதகளங்களும் பவர் ப்ளே பட்டாசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஜினிமுருகன் - சினிமா விமர்சனம்

மேக்ஸிமம் காமெடி வெடித்தது சரி. ஆனால், ஒரு சினிமாவுக்கான சில மினிமம் சம்பிரதாயங்கள்கூட இல்லையே. படத்தின் எந்த 20 நிமிடங்களை எங்கே உருவினாலும் அது படத்தை எந்த விதத்திலும் பாதிக்காத ஒரு ‘கலக்கப்போவது யாரு?’ பாணி ஸ்டேஜ் ஷோவே சினிமாவாகி விடுமா? கழுத்து சுளுக்கும் அளவுக்குச் சிரித்துவிட்டு வெளியே வந்தால், ஃப்ளாஷ் கட்டில் எல்லாமே மறந்தும்போகிறதே!

இமானுக்கும், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெனுக்கும் முந்தைய படத்தில் செய்த அதே வேலைதான். அப்படியே ரிப்பீட் ஹிட்.

இதே மாதிரியே அடுத்த படமும் அமைந்தால் ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?’ எனக் கேட்கத் தோன்றும். அதுவரைக்கும் நம்பி போய் சந்தோஷமா வரலாம்!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism