Published:Updated:

கதகளி - சினிமா விமர்சனம்

கதகளி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கதகளி - சினிமா விமர்சனம்

கதகளி - சினிமா விமர்சனம்

கதகளி - சினிமா விமர்சனம்

கதகளி - சினிமா விமர்சனம்

Published:Updated:
கதகளி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கதகளி - சினிமா விமர்சனம்

ண்ணன் மீதான ஆத்திரத்தில் குடும்பத்தைக் கெடுத்த வில்லனை, காத்திருந்து பழிதீர்க்கும் இன்னொரு தம்பியின் கதை.

`தம்பாவைக் கொன்றது யார்?’ - என்பதுதான் ஒன்லைன். கடலூரையே தன் மீசைக்குள் புதைத்து  வைத்திருக்கும் முரட்டு வில்லன் தம்பா. விஷால் குடும்பம், முன்னாள் எம்.எல்.ஏ., தொழிலதிபர்... என தெருவுக்கு நான்கு எதிரிகள். கூலிப்படை ஒன்று தம்பாவை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிவிட, வெறியாட்டம் ஆடுகிறது அவனது கும்பல். நான்கு நாட்களில் விஷாலுக்குத் திருமணம். இந்தச் சூழலில் போலீஸ், விஷாலை பலியாடு ஆக்க நினைக்கிறது. விஷால் தப்பிப்பதும், உண்மைக் கொலைகாரன் யார் என்ற ட்விஸ்ட்டுமே கொலவெறி கதகளி!

யூ.எஸ் ரிட்டர்ன் பாலீஷ் விஷால்... கேத்ரீன் தெரெசாவுடன் லவ்வுவது, அண்ணனுக்கு ஹெல்ப்புவது, நண்பர்களுடன் டான்ஸுவது... என எல்லாமே தெரிஞ்ச ஸ்டேட்டஸ்தான். இருந்தாலும் லைக்ஸ் போடலாம். கொஞ்சம் குண்டாகி வந்திருக்கிறார் ‘மெட்ராஸ்’ கேத்ரீன் தெரெசா. அண்ணனாக மைம் கோபியும், அந்த டெரர் இன்ஸ்பெக்டரும் நச் நடிப்பு. மெசேஜ் சொல்வதற்காகவே நேந்து விடப்பட்ட சமுத்திரக்கனிக்கு இப்போது வில்லன் அவதார சீஸன்போல. இதில் தம்பாவுக்கு டப்பிங் தந்து மிரட்டுகிறார்.

கதகளி - சினிமா விமர்சனம்

மதுரைக்கு பதில் கடலூர். ஆனாலும் கடலூரின் முதுகிலும் அரிவாளைச் செருகியிருக்கிறார்கள். ரொமான்ஸ் ரூட்டில் போகும் படம், இடைவேளைக்கு முன்னர் டேக் ஆஃப் ஆகிறது. தம்பாவின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதகளி - சினிமா விமர்சனம்

கொலை, விஷாலைத் துரத்துவது என எமோஷனலாகவும் ஆக்‌ஷனாகவும் பக்கா இன்டர்வல் ப்ளாட். ஆனால், தெறிக்கவேண்டிய இடைவேளைக்குப் பின்னரான இரண்டாம் பாதியைப் போகிபோல எரிக்கவாவிடுவது? ஒருகட்டத்தில் நாமே சென்று ஸ்கிரீனில் யாரையாவது அடிக்கலாமா என யோசிக்கும் அளவுக்குப் பேசியே கொல்கிறார்கள். முதல் முறையாக ஆக்‌ஷன் கதை எடுத்த பாண்டிராஜுக்கு, இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை.

இரண்டே பாடல்கள் என்பதால், `கதகளி' தீமில் மட்டுமே ஓவர்டைம் பார்த்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. திரைக்கதையில் இல்லாத பதற்றத்தை பாலசுப்ரமணியெமின் கேமரா தந்துவிடுகிறது.
பஸ் ஏறி பிரச்னை செய்த விஷாலை, குடும்பத்துக்காகப் பழிதீர்க்கும் விஷால் மாற்றினார். இப்போது இந்த விஷாலை மீட்க இன்னொருவர் வந்தே ஆக வேண்டும்!

- விகடன் விமர்ச்னக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism