`அன்பானவர்களில் ஒருவர் கொலை செய்யப்பட, இன்னொருவர் ஆடும் ருத்ரதாண்டவம்’ எனப் பழகிய பாலா டெம்ப்ளேட் படம்.
`நாகரிகமான விக்ரம்’ சசிகுமார், ஒரு தாரை தப்பாட்டக் குழு நடத்துகிறார். அதில் `பொம்பளை சூர்யா’ வரலட்சுமி ஸ்டார் டான்ஸர். சசி மீது வரூவுக்கு அப்படி ஒரு காதல். ஆனால், வரலட்சுமியைத் திருமணம் செய்ய வரூ அம்மாவிடம் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கிறார் ஆர்.கே.சுரேஷ். ஆட்டக்காரிக்கு வந்த அதிர்ஷ்டம் என அம்மா சசியிடம் கெஞ்ச, அவரும் வரலட்சுமியைத் திருமணத்துக்குச் சம்மதிக்கவைக்கிறார். ஆனால், சுரேஷோ, முடி வளர்ந்த `நான் கடவுள்’ ராஜேந்திரன். அவரால் வரலட்சுமி சித்ரவதை செய்யப்பட, ஆரம்பிக்கிறது சசிகுமாரின் வெறியாட்டம். ஃபர்ஸ்ட் ஹாஃப் காமெடி, செகண்ட் ஹாஃப் டிராஜடி என அப்படியே `பிதாமகன்’தான். ஆனால், திரைக்கதை செம சாதாமகன் ஆனதுதான் சோதனை.
`தொப்புள்ள ஸ்டார் போடு மாமா’ என ராவான ரொமான்ஸ்... `அக்காங் மாமா... அக்க்க்க்க்காங் மாமா’ என மயக்கும் மாடுலேஷன்... `கல்யாணம் பண்ணிக்கோ’ என்னும் சசியின் முதுகில்விடும் லாங் ரன்னிங் லெக் கிக்... என வரலட்சுமி சுற்றிச் சுற்றி அடிப்பதெல்லாமே கொலக்குத்து கோல்கள். ஆட்டக்கலைஞிக்கே உரிய உடலும் உடல்மொழியும் என அட்டகாச லட்சுமி. சன்னாசியாக சசிகுமார்... அடங்கி, அடங்கி க்ளைமாக்ஸில் எகிறுகிறார். வேலை ரொம்ப கம்மி. சாமிபுலவராக இந்தப் படத்திலும் ஜி.எம்.குமாருக்கு வெயிட் கேரக்டர். தனக்கான சாராயத்தை தானே சம்பாதித்த சந்தோஷத்தில் செத்தாலும் மனதில் நிற்கிறார். இவர்களைத் தாண்டி கூட்டத்தில் நமக்கு ஹைஃபை சொல்வது வில்லன் ஆர்.கே.சுரேஷ் மட்டுமே. முரட்டுத் தோற்றமும் மிரட்டல் குரலுமாக செம என்ட்ரி.

வழக்கம்போல மகிழ்ச்சியையும் வலியையும் அப்படியே ஆடியன்ஸுக்குக் கடத்துகிறார் இயக்குநர். முதல்முறை சரக்கடிக்க வரும் சசியிடம் மூடியில் ஊற்றி, `நீயே குடுறா... இந்தப் பாவத்துக்கு நான் ஆளாக மாட்டேன்’ எனச் சொல்வதெல்லாம் அக்மார்க் பாலா அதகளம். அந்த காமெடி ஏரியா மட்டும்தான் ஒரே ப்ளஸ். அதிகம் அறிந்திடாத இன்னொரு களத்தை எடுத்துக்கொண்டது ஓகே. ஆனால், அதன் டீட்டெயிலில் இவ்வளவு அலட்சியமா?
கரகாட்டம், குத்தாட்டமாக மாறிவிட்டதே என்ற ஜி.எம்.குமாரின் கவலைகூட ஓகே. ஆனால் குத்தாட்டம், சினிமா கவர்ச்சியாக மாறிவிட்டது என கவலை கொள்ளும் சசிகுமாரின் லாஜிக் என்ன? இடைவேளை ட்விஸ்ட் என்ன ஆனது என அடுத்த முக்கால் மணி நேரம் பேசாதது திரைக்கதைக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழகா? இரண்டு கோடி ரூபாய் புராஜெக்ட்டுக்கு அரசு மருத்துவமனையையா பிடிப்பார்கள்... நியாயமாரே? வாடகைத் தாய்க்கு ஏன் இத்தனை கொடூர பில்டப்? ஆறு மாதங்களாக அம்மாவின் கண்ணில்படாத வரலட்சுமியின் முன், அடுத்த சீனிலேயே சசி வந்து நிற்பது என்ன மெடிக்கல் மிராக்கிள்? கேள்விகள் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சென்னை டு தஞ்சாவூர் வரை நீள்கின்றன. `மாமன் பசி தீர்க்க அம்மணமாக்கூட ஆடுவேன்’ என்ற வைராக்கிய வரூ, அடுத்த சீனிலேயே யாரையோ கல்யாணம் பண்ண காம்ப்ரமைஸ் ஆகும் இடத்திலேயே படம் படுத்துவிடுகிறது.
`பாலா’ படங்கள் முடியும்போது மனதில் ஒரு வலி தரும். ஆனால், `தாரை தப்பட்டை' இது பாலா படமா என வலிக்கிறது. அவ்வளவு பழைய படம்!
- விகடன் விமர்சனக் குழு