சினிமா
Published:Updated:

“சென்டிமென்ட்டை உடைக்கணும்!”

 “சென்டிமென்ட்டை உடைக்கணும்!”
News
“சென்டிமென்ட்டை உடைக்கணும்!”

அதிஷா

`பிச்சைக்காரன்’ ரிலீஸுக்கு ரெடி. அடுத்து `சைத்தான்’, `எமன்’, `ஹிட்லர்’ என, இரண்டு வருடங்களுக்கு விஜய் ஆண்டனி பிஸி. சவுண்டு இன்ஜினீயராக வாழ்க்கையைத் தொடங்கியவர், இசையமைப்பாளராக சக்சஸ் ரவுண்டு முடித்து, இப்போது முழுநேரமும் நடிப்புதான்.

`` `பிச்சைக்காரன்’, `சைத்தான்’, `எமன்’, `ஹிட்லர்’, `திருடன்’னு ஏன் இவ்ளோ கொலைவெறி டைட்டில்ஸ்?’’

`` `பிச்சைக்காரன்’ என்கிற அந்த டைட்டில் மேல எனக்கு ஒரு பெருமை இருக்கு. சமயத்துல எனக்கே தோணும் ‘என்னடா இண்டஸ்ட்ரியில் யாருமே வைக்காத பெயரை வைக்கிறியே... இண்டஸ்ட்ரியில் தனியா போய்க்கிட்டு இருக்கியே’னு. ஆனா, அதைத்தான் வைக்கணும்னு மனசு சொல்லும். எனக்குள்ள இருக்கிற கோபம், சின்ன வயசுல நான் கடந்துவந்த துன்பங்கள், சந்தித்த மனிதர்கள்னு நிறையக் காரணங்கள் இதுக்கு இருக்கு. பாரதியார் மாதிரி கவிஞர்கள் கவிதைகள் மூலமாக தங்களுடைய வலியை, கோபத்தை வெளிப்படுத்திருவாங்க. அது மாதிரி நான் இந்த டைட்டில்கள் மூலமாக வெளிப்படுத்துறேன். இன்னொரு விஷயம் இந்த டைட்டில்கள் ஈஸியா கிடைக்குது. `பிச்சைக்காரன்’னு டைட்டில் வெச்சா தயாரிப்பாளர் பிச்சைக்காரன் ஆகிடுவார், `எமன்’னு பேரு வெச்சா யாராவது செத்துடுவாங்கனு நிறைய சென்டிமென்ட்ஸ் உள்ள இண்டஸ்ட்ரி இது. `அந்த சென்டி மென்ட்ஸை உடைச்சுப்பார்த்தா என்ன?’னு ஒரு மைண்ட்செட்... அவ்ளோதான்.’’

 “சென்டிமென்ட்டை உடைக்கணும்!”

`` `பிச்சைக்காரன்’ பற்றி?’’

``இயக்குநர் சசியோடு இது எனக்கு ரெண்டாவது படம்; ஹீரோவா முதல் படம். `ரோஜா கூட்டம்’ படத்துலயே சசி சார் உழைப்பைக் கவனிச்சிருக்கேன். திருப்தியா இல்லைனா விட மாட்டார். ஒரு படம் பண்ணும்போதே இன்னொரு படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிட்டு நிறையப் பணம் சேர்க் கணும்னு நினைக்கிற ஆள் இல்லை அவர். ரொம்ப ரொம்ப டெடிகேட்டட் மனுஷன். உழைப்பு...  உழைப்பு... உழைப்பு. அது மட்டும்தான் சசி. அவர் என்னோட `சலீம்’ படம் பார்த்துட்டு, `ரொம்ப நல்லா பண்ணியிருந்தீங்க’னு பாராட்டினார். அப்பவே, `சார்... உங்களோடு வொர்க் பண்ணணும்’னு என் ஆசையை வெளிப்படுத்தினேன். கொஞ்ச நாள்லயே என்னைக் கூப்பிட்டு `பிச்சைக்காரன்’ படக் கதையைச் சொன்னார். நான் எதிர்பார்க்கவே இல்லை, இப்படி ஒரு கதையைச் சொல்வார்னு. கேட்கும்போதே விக்கி விக்கி அழுதுட்டேன். அப்படி ஒரு பிரமாதமான சப்ஜெக்ட். ஹீரோ- ஹீரோயின் ரெண்டு பேரும் லவ் பண்றாங்கங்கிற மாதிரி ரெகுலர் கதை இல்லை இது. முழுக்கவும் வேற மாதிரியான படம். இந்தப் படம் எனக்குக் கிடைச்சதுக்காக ரொம்ப ரொம்பப் பெருமைப் படுறேன். இதுவரை நான் பண்ணின படங்களை விடவும் இந்தப் படம் எனக்கு ரொம்ப முக்கியமான, மனசுக்கு நெருக்கமான படம்.’’

 “சென்டிமென்ட்டை உடைக்கணும்!”

``முழுநேர இசையமைப்பாளரா இருந்துட்டு இப்போ முழுநேர நடிகர்..?’’

``பெரும்பாலான இசைக்கலைஞர்கள் 24 மணி நேரமும் இசையோடவே வாழ்வாங்க. டிராஃபிக் சிக்னல்ல நின்னாக்கூட அங்கு இருந்து இசையைக் கண்டுபிடிப்பாங்க. ஆனா, என்னால அப்படி இருக்க முடியலை. ஏன்னா, நான் ஒரு சாதாரண மனுஷன். எனக்கு இசையைத் தாண்டி நண்பர்கள், குடும்பம், குழந்தைகள், உணவு, கொண்டாட்டம்னு நிறைய இருக்கு. ஒரு கம்பெனிக்காரன், நகைக்கடையும் வெச்சிருக்கான்; துணிக்கடையும் வெச்சிருக்கான். அப்படி இருக்கும்போது ஒரு இசையமைப்பாளர் நடிக்கிறதும் அதுமாதிரிதான். நான் யதார்த்தமா, உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். அதுக்காக இசையையும் விட்டுடலை. என் படங்களுக்கு நான்தான் இசையமைக்கிறேன். நடிப்போ இசையோ நான் வேலைசெய்யலை; எனக்கான வாழ்க்கையை முழுமையா வாழ்றேன் அவ்ளோதான். நாளைக்கே கிராமத்துக்குப் போய் விவசாயம் பண்ணணும்னு தோணிச்சுன்னா, எல்லாத்தையும் அப்படியே தூக்கிப்போட்டுட்டுக் கிளம்பிடுவேன்.’’

 “சென்டிமென்ட்டை உடைக்கணும்!”

``நீங்கள் நடிக்காத படங்களுக்கு இசையமைத்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. மறுபடியும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை எப்போது பார்க்கலாம்?’’

 “சென்டிமென்ட்டை உடைக்கணும்!”

``சீக்கிரமே... நான்கு வருஷம்கிறது பெரிய கேப். ஆனா, அதை இப்போதான் ரியலைஸ் பண்றேன். ஏன்னா, டோட்டலா தனித்தீவாகிட்ட மாதிரி ஓர் உணர்வு. கூடவே நான் இயல்புலேயே மாஸ் படங்களுக்கு இசையமைக்கக்கூடியவன். ஓப்பனிங் சாங், குத்து சாங்னு நான் நடிக்கக்கூடிய படங்கள்ல போடுறதுக்கான வாய்ப்பு ரொம்பக் குறைவு. ஆனா, எனக்கு அப்படிப்பட்ட பாடல்கள் போடுறது ரொம்பப் பிடிக்கும். அதுக்காக வருஷத் துக்கு ஒரு படமாவது நல்ல மாஸ் ஹீரோவுக்குப் பண்ணணும்னு முடிவு பண்ணியிருக்கேன்.’’