Published:Updated:

“விஜய் அண்ணாவை இயக்கணும்!”

“விஜய் அண்ணாவை இயக்கணும்!”

கார்க்கிபவா

“விஜய் அண்ணாவை இயக்கணும்!”

கார்க்கிபவா

Published:Updated:
“விஜய் அண்ணாவை இயக்கணும்!”

```விகடன் விருது’ மதிக்கத்தக்க விருது. வருஷாவருஷம் இதை ஃபாலோ பண்ணிக்கிட்டே இருப்பேன். `ஒரு தடவையாவது நானும் வாங்கணும்'னு ஒவ்வொரு வருஷமும் ஆசைப்படுவேன். இந்தத் தடவை கிடைச்சிருக்கு. அப்படி ஒரு சந்தோஷம். 2015-ம் ஆண்டு, எனக்கு ரொம்ப முக்கியமான வருஷம். இந்த விருதுக்காக நான் அதிகம் உழைச்சிருக்கேன். அந்த உழைப்பை அங்கீகரிச்ச எல்லோருக்கும் நன்றி” - நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் ஜெயம் ரவி!

`` `பூலோகம்' உங்களின் கம்ஃபர்ட் ஸோனைவிட்டு வெளியே வந்து பண்ண படம்... இந்த வெற்றியை எதிர்பார்த்தீர்களா?''

`இயக்குநர் கல்யாணகிருஷ்ணன் முதலில் கதை சொன்னப்ப, என்கூட அந்தக் கதையைக் கேட்ட அண்ணன், அப்பா எல்லாருமே கொஞ்சம் யோசிச்சாங்க. ஆனா, நான் மட்டும் இதைப் பண்ணணும்னு தெளிவா இருந்தேன். இதுவரை ஸ்கிரீன்ல பார்க்காத ஒரு கேரக்டர். அதுக்கு உயிர் கொடுக்கணும்னு நினைச்சேன். `படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் எல்லாத்தையும் ஒண்ணா வெச்சுக்கோங்க. பாடியை ஏத்திக்கிட்டு வர்றேன்'னு சொன்னேன். ‘இல்லை சார். எனக்கு முதல் சீன்ல இருந்தே `பூலோகம்'கிற கேரக்டர் தெரியணும். அப்பவே உடம்பு ஏறி இருக்கணும்'னு சொன்னார் இயக்குநர். மூணு மாசம் டைம் வாங்கி, அதுக்கான ட்ரெய்னிங் எடுத்துக்கிட்டு ரெடி ஆனேன். ரொம்பக் கஷ்டமான பயிற்சிகள். ஆனா, ஸ்கிரீன்ல பார்க்கிறப்ப அந்த வலி எல்லாம் மறைஞ்சிருச்சு. ரிலீஸுக்கு ஒன்றரை வருஷம் ஆகிருச்சு. அதுதான் என்னை ரொம்பப் பாதிச்சது. இப்ப அதெல்லாம் போயிருச்சு. என் நடிப்பை, இதுவரைக்கும் யாரும் இப்படி எல்லாம் பாராட்டினது இல்லை; விகடன் விருது வரை கூட்டிட்டு வந்திருச்சே... வேற என்ன வேணும்?!''

 “விஜய் அண்ணாவை இயக்கணும்!”

`` `பூலோகம்' படத்தில் வரும் அக்ரிமென்ட் சீன், அதிகமாக அப்ளாஸ் அள்ளியது. அதற்கு எப்படித் தயார் ஆனீர்கள்?''

``என் ஃபேவரிட் சீனும் அதுதான். `தனி ஒருவன்'ல வில்லனும் ஹீரோவும் சண்டையே போடலைன் னாங்க. `பூலோகம்' படத்துல அதை நாங்க நாலு வருஷத்துக்கு முன்னாடியே பண்ணிட்டோம். வில்லன், ஹீரோவை மீட் பண்ற ஒரே சீன் அதுதான். அதை ஸ்பெஷலா செய்வோம்னு நினைச்சு டயலாக் கேட்டா, 15 பக்கம் கொடுத்தாங்க. `அவ்ளோ டயலாக்ஸ் ஒரு சீனுக்குத் தாங்குமா?'னு யோசிச்சோம். ரெண்டு பேரும் மீட் பண்ற ஒரே சீன். 25 பக்கம் இருந்தாலும் தாங்கும்னு டிஸ்கஸ் பண்ணோம். அந்த சீன்ல பல எமோஷன்ஸ் இருக்கும். பாடிலாங்வேஜ்ல வித்தியாசம் இருக்கும். நான் ரசிச்சு ஹோம்வொர்க் பண்ணி நடிச்ச சீன் அது.''

`` `தனி ஒருவன்', மோகன் ராஜாவின் நேரடியான தமிழ் படம். அதில் நடிக்க பயம் இருந்ததா?''

``அண்ணன்கூட அஞ்சு ரீமேக் படம்  பண்ணி யிருக்கேன். எல்லாமே ஹிட். இந்தக் கேள்வியை எல்லோரும் கேட்டாங்க. ஆனா, நீங்க எல்லாரும் பார்க்கிற மோகன் ராஜா வேற... நாங்க பார்க்கிற மோகன் ராஜா வேற. அவர் D.F.T படிச்சப்ப, ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருந்தார். அந்தப் படத்தை இப்பக்கூட இன்ஸ்டிட்யூட்டுல பாடமா வெச்சிருக்காங்க. அந்த ஷார்ட் ஃபிலிம் மூலமா அவர் யாருங்கிறது எங்க ஃபேமிலிக்குத் தெரியும். அது மக்களுக்கும் தெரியணும்னு நினைச்சேன். 2015-ம் ஆண்டில் அது நடந்தது. `தனி ஒருவன்' படத்துக்கு நிறைய ஷூட் பண்ணினார். நிறைய டயலாக்ஸ். `ஒரு சீனுக்கு, இவ்ளோ டயலாக்ஸ் தாங்குமா?'னு பயமா இருந்தது. ஆனா, அதை ஸ்கிரீன்ல பார்க்கும்போதும், தியேட்டர்ல அப்ளாஸ் வாங்கும்போதும் அதுதான் சரினு புரிஞ்சது.''

``வெற்றிகளை எல்லாம் தாண்டி, நான்கு படங்களும் வேற வேற ஜானர். உங்க கதைத் தேர்வில் ஏதாவது மாற்றம் கொண்டுவந்தீர்களா?''

``நிச்சயம் மாற்றம் இருந்தது. முந்தைய வருஷங் கள்ல சக்சஸ் கம்மி, படமே வரலை. `தோல்வியில்தான் நிறையக் கத்துக்க முடியும்'னு சொல்வாங்க. எப்படி எல்லாம் ஸ்கிரிப்ட் செலெக்ட் பண்ணக் கூடாதுனு அப்ப கத்துக்கிட்டேன். வெரைட்டியான படம் பண்ணணும்னு நினைச்சாலும், நான் ஜானர் பற்றி கவலைப்பட மாட்டேன். என் ஒரே குறிக்கோள், அந்த  ஸ்கிரிப்ட் ரசிகர்களுக்கு ரீச் ஆகுமாங்கிறது தான். அப்படி ஒரு கதை வந்தால் ஓ.கே சொல்லிடுவேன்.''

``2015-ம் ஆண்டில் பெர்சனலா உங்களுக்குப் பிடிச்ச படம்?''

 `` `பூலோகம்'தான் ஸ்பெஷல். அதிக ரெஃபரன்ஸ் இல்லாத ஒரு கேரக்டர். பெர்சனலா என் பெர்ஃபார்மன்ஸ் எனக்கே பிடிச்ச படம். ரொம்பத் திருப்தி கொடுத்த படம்னா, `தனி ஒருவன்'. நான் பார்த்த மத்தவங்க படத்துல என் ஃபேவரிட் `காக்கா முட்டை'.''

`` `மிருதன்' பட ட்ரெய்லருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கே?''

`` `மிருதன்' படம் ஸோம்பிகள் பற்றிய கதை. அதை தமிழுக்கு அழகா மாத்தியிருக்கார் இயக்குநர் ஷக்தி செளந்தர்ராஜன். ரெண்டு பேருக்கும் பிடித்த படத்தை ஆரம்பிச்சோம். நிறையப் பேர் பயந்தாங்க. இப்ப ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி, நல்ல ஃபீட்பேக் வாங்கி யிருக்கு. நம்ம முடிவு சரிதான்னு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு. இமான் சார் மியூஸிக், படத்துக்குப் பெரிய பலம். நானும் லட்சுமி மேனனும் முதல் தடவையா ஜோடி சேர்ந்திருக் கோம். இது பேய் படம் இல்லை. நாம இயற்கைக்கு எதிரா எது பண்ணாலும், அது நமக்கே திரும்பி வரும்கிற மெசேஜ் இந்தப் படத்துல இருக்கு.''

``அண்ணன் ராஜாவோட அடுத்த படம் எப்போ?''

``மூணு கதை மனசுல வெச்சிருக்கார். `தனி ஒருவன் - 2' ஐடியாகூட இருக்குது. சிவகார்த்திகேயன் கூட ஒண்ணு கமிட் ஆகியிருக்கார். இந்தியில் ஒரு படம் கமிட் ஆகியிருக்கார். மூணுமே வரும். அதுல எது ஃபர்ஸ்ட்னுதான் தெரியலை.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 “விஜய் அண்ணாவை இயக்கணும்!”

``நீங்க வொர்க் பண்ண விரும்பும் இயக்குநர்கள்?''

``மணி சார் படத்துல நடிக்கணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை இருக்கு. இப்ப லிஸ்ட் பெருசா ஆகிருச்சு. ஷங்கர் சார், பாலா சார், கெளதம் மேனன் சார், கே.வி.ஆனந்த் சார்... தெலுங்குல ராஜமெளலி சார், அப்புறம் பூரி ஜெகன்னாத்கூடவும் படம் பண்ணணும்.''

``தொடர்ந்து மக்கள் அரசியல் பேசும் படங்களா பண்றீங்க. உங்க அரசியல் பார்வை?''

``சமூகம் வேற, அரசியல் வேற இல்லை. ஒரு நாட்டின் குடிமகனா இருந்தாலே, நாம அரசியல்லதான் இருக்கோம். ஓட்டு போட்டாலே அது அரசியல்தான். சினிமாங்கிற மாஸ் மீடியாவுல இருக்கோம். அந்த மாஸுக்கு ஏறுகிற மாதிரி ஒரு விஷயம் சொன்னாலே அது நல்ல விஷயம். `சந்தோஷ் சுப்ரமணியம்' வீட்டைச் சுத்தம் பண்ற படம். `பேராண்மை' மாதிரியான படங்கள் நாட்டைச் சுத்தம் பண்ண நினைக்கிற படம். நான் இதை விரும்பிப் பண்றேனானு தெரியலை. ஆனா, ஆடியன்ஸுக்குப் பிடிக்குது.''

``கிடைச்ச ஸ்பெஷல் பாராட்டு?''

 ``ரஜினி சார் `தனி ஒருவன்' படம் பார்த்துட்டு போன் பண்ணார், `ரவி... ரவி... ரவி... வாட் எ ஃபிலிம்!'னார். அவர் பேசறதைக் கேட்டாலே சந்தோஷம். என்னைப் பாராட்டினது ரொம்ப சந்தோஷம். அப்புறம் பாலா சார் பேசினார், `இனி நீ `ஜெயம்' ரவி இல்லை. `தனி ஒருவன்' ரவி'னு சொன்னார்'. இன்னும் நிறையப் பாராட்டுக்கள். ஒவ்வொரு பாராட்டுமே எனக்கு ஸ்பெஷல்தான்.''

``நயன்தாரா - ஹன்சிகா - த்ரிஷா... யார் உங்களுக்கு சரியான ஜோடி?''

``அதை நீங்கதாங்க சொல்லணும்.''

``உங்களுக்கும் அண்ணனைப்போல இயக்குநர் ஆகும் ஆசை இருக்கிறதா?''

 ``ஒரு ஓரத்துல கொஞ்சம் அதிகமாவே இருக்கு. ரெண்டு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கேன். ஒரு கதை அண்ணணுக்கு. அவர் என் உயிரை ஸ்பாட்ல வாங்கிற மாதிரி, அவரை நடிக்கவெச்சு அவர் உயிரை நான் வாங்கணும். அடுத்த ஸ்கிரிப்ட், நம்ம விஜய் அண்ணனுக்குத்தான் சரியா இருக்கும். அவரை டைரக்ட் பண்ணணும் பாஸ்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism