Published:Updated:

“துல்கர் என்னைவிட ஸ்மார்ட்!”

 “துல்கர் என்னைவிட ஸ்மார்ட்!”
பிரீமியம் ஸ்டோரி
“துல்கர் என்னைவிட ஸ்மார்ட்!”

கார்க்கிபவா

“துல்கர் என்னைவிட ஸ்மார்ட்!”

கார்க்கிபவா

Published:Updated:
 “துல்கர் என்னைவிட ஸ்மார்ட்!”
பிரீமியம் ஸ்டோரி
“துல்கர் என்னைவிட ஸ்மார்ட்!”

ரும்புபோல உடம்பை முறுக்கேற்றிக் கொண்டு நிற்கிறார் மிஸ்டர் ஹேண்ட்ஸம் மாதவன். `இறுதிச்சுற்று' படத்தில் பாக்ஸிங் பயிற்சியாளராக மிரட்டியிருக்கும் மாதவனைச் சந்தித்தேன்.

 ``தமிழ் சினிமாவுக்கு ஏன் இந்த திடீர் பிரேக். நாலு வருஷமா எங்க போனீங்க?''

``இந்த கேள்விக்கு எல்லோரும், `நல்ல சப்ஜெக்ட்டுக்காகக் காத்திட்டிருந்தேன்’னு சொல்வாங்க. என் விஷயத்துல அது  100 சதவிகித உண்மை. ஒவ்வொரு படமும் வித்தியாசமா செய்யணும்கிற எண்ணம் கொண்டவன் நான்.  இது ஸ்மார்ட் ஜெனரேஷன். நாம அப்டேட் ஆகலைன்னா, மக்கள் தூக்கி எறிஞ்சிருவாங்க. முன்னாடி எல்லாம் `ரஜினி சார் மாதிரி ஸ்டைல் பண்ண முடியாதா, கமல் சார் மாதிரி அழகாக முடியாதா?’னு ஸ்கிரீன்ல அவங்களை எல்லாரும் ஆச்சர்யமா பார்த்தாங்க. இப்ப அப்படி இல்லை. எல்லோருமே உடம்பு ஏத்துறாங்க; ஸ்டைலா இருக்காங்க; ஸ்மார்ட் ஆகுறங்க. அதனால அவங்க ஸ்கிரீன்ல எதிர்பார்க்கிறது வேற லெவல். அதை நாம சரியா செய்யணும். `என்னடா காட்டப்போற'ங்கிற மனநிலையோடதான் ரசிகர்கள் தியேட்டருக்கு வர்றாங்க. அவங்களுக்கு ஸ்பெஷலா ஏதாவது செய்யணும். அதான் இவ்ளோ டைம் எடுத்துக்கிட்டேன்.’’

 “துல்கர் என்னைவிட ஸ்மார்ட்!”

`` `இறுதிச்சுற்று' படம் அவ்வளவு டைம் எடுத்துக்கிச்சா?''

`` `வேட்டை’ படத்துக்குப் பிறகு நான் நடிச்ச படங்களில் சேலஞ்சே இல்லாத மாதிரி ஃபீல். எல்லாமே எனக்கு ஈஸியாக் கிடைக்கிற மாதிரி தோணுச்சு. சாக்லேட் பாய் இமேஜை வெச்சுக்கிட்டு ரொம்ப நாளைக்கு ஓட்ட முடியாதுனு எனக்குத் தெரியும். அதனால அடுத்த கட்டத்துக்கு எப்படிப் போகலாம்னு யோசிச்சேன். அந்தச் சமயத்துலதான் இயக்குநர் சுதா, பாக்ஸிங் பத்தின ஸ்கிரிப்ட் ஒண்ணு தந்தாங்க. `பெண் இயக்குநர்... ஆனா, ஸ்கிரிப்ட் பாக்ஸிங்கா!’னு முதல்ல கொஞ்சம் ஆச்சர்யமாத்தான் இருந்தது. ஸ்கிரிப்ட்டை வாங்கிப் படிச்சதும் மிரண்டுட்டேன். இந்தக் கதைக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செஞ்சு, பெண் பாக்ஸர்களைச் சந்திச்சு, அவங்க பிரச்னைகளைக் கேட்டு, அந்த ஸ்கிரிப்ட் பண்ணியிருந்தாங்க. அவங்க பண்ண ரிசர்ச் வீடியோ எல்லாம் பார்த்தேன். படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இவ்ளோ உழைப்பைப் போட்டிருக்காங்கன்னா, நானும் அதைச் செய்யணும்னு நினைச்சேன். எனக்கு 45 வயசு ஆகுது. சட்டுனு உடம்பை ஏத்தி இறக்கினா, வயசான மாதிரி தெரியும். முடி கொட்டும். அதனால  ஒன்றரை வருஷம் டைம் கேட்டு, என் உடம்பை பில்ட் பண்ண ஆரம் பிச்சேன். அமெரிக்காவுக்குப் போய் இதுக்காக ஸ்பெஷல் டிரெய்னிங் எடுத்து, ரிட்டையர்டு ஆன ஒரு பாக்ஸர் மாதிரி என்னை நானே தயார் பண்ணிக்கிட்டேன். அப்புறம் ஷூட்டிங்... அதான் இந்த பிரேக். இப்ப படம் ரிலீஸுக்கு ரெடி. சந்தோஷமாவும் திருப்தியாவும் இருக்கு.’’

``இறுதிச்சுற்று ட்ரெய்லர் ரிலீஸ் ஆனதும் சோஷியல் மீடியாவுல பெரிய  ரெஸ்பான்ஸ்... குறிப்பா உங்க லுக்ஸ்...''

``ஆமாங்க... இயற்கையா ஏத்தின உடம்பு இது. ஃபைட் பண்றவங்களுக்கு நரம்பு எல்லாம் தெரியும். ஆனா கோச் பாடி, கொஞ்சம் பல்க்கா இருக்கணும். நடந்தா மலைபோல தெரியணும். காஸ்மெட்டிக் மஸல் பில்டிங் பண்ணலாம். ஆனா அப்படி பண்ணா, நடக்கிறப்ப அந்தப் பலம் தெரியாது. அதனால ஒவ்வொரு தசையா எடுத்துக்கிட்டு, ஸ்பெஷலா கவனம் செலுத்தி பில்ட் பண்ணோம். நார்மல் டயட்தான். இரவு 7 மணிக்கு மேல எதுவும் சாப்பிட மாட்டேன். தினமும் 45 நிமிஷம்தான் வொர்க் அவுட். ஆனா பிச்சிடும்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 “துல்கர் என்னைவிட ஸ்மார்ட்!”

``யாருங்க அந்த நடிகை... டிரெய்லர்லயே மிரட்டுறாங்களே?''

``இந்தக் கதைக்கு நடிப்பைவிட பாக்ஸிங் நல்லா தெரியணும்; இந்தி, தமிழ் பேசணும்; என் பொண்ணு மாதிரி இருக்கணும்; அழகா இருக்கணும்னு இத்தனை பாக்ஸை டிக் அடிக்கிற மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்னு நினைச்சேன். அப்ப கிடைச்சவங்கதான் ரித்திகா சிங். மும்பையில் என் நண்பர் ராஜ்குந்த்ராவோட வீட்டு நிகழ்ச்சிக்குப் போனப்பதான் ரித்திகாவைப் பார்த்தேன். உண்மையிலேயே அவங்க ஒரு பாக்ஸர். நம்ம கதைக்கு செட் ஆகிற ஆளாச்சேனு கேட்டப்ப, ரொம்ப வெட்கப்பட்டாங்க. ரித்திகாக்கிட்ட நான் தெரிஞ்சிக்கிட்ட ஒரு முக்கியமான விஷயம், நடிப்புங்கிறது கத்துக்க முடியாது. அது கூடவே பொறக்கணும். “எங்கய்யா புடிச்சீங்க இந்தப் பொண்ணை, இப்படி நடிக்கிறா... நாம ரொம்பவே உஷாரா இருக்கணும்”னு நாசர் சார் சொன்னார். ஒரு ஷாட்லகூட ரித்திகா ரீடேக் போகலை. இந்தப் படத்துல எல்லோரோட பெர்ஃபார்மென்ஸ் லெவலையும் அவங்கதான் செட் பண்ணாங்க. சான்ஸே இல்லை.''

 “துல்கர் என்னைவிட ஸ்மார்ட்!”

`` `சண்டைக்காரா...' பாட்டு செம ஹிட். எப்படி வந்திருக்கு சந்தோஷ் நாராயணன் இசை?''

`` பாட்டு ஐ-ட்யூன்ஸ்ல முதல் இடத்துக்கே வந்திருச்சு. படத்தின் இசைக்கு இந்தியில் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. அவர் அதை முழுசா திருப்திப்படுத்திட்டார்.''

``கார்த்திக் - மாதவன் - துல்கர்னு இன்னும் அப்டேட்டா இருக்காரே மணி சார்?''

``மனசுக்குள்ள மணி சார் எப்பவுமே இளைஞர்தான். பயங்கர அப்டேட்டா இருப்பார். `ஓ காதல் கண்மணி'யில லேசா ‘அலைபாயுதே’ டச் இருந்தது. ஆனா, படத்துல துல்கர் என்னைவிட ஸ்மார்ட்டா இருந்தார்.''

``அடுத்து என்ன படம் பண்றீங்க?''

``ரசிகர்கள் இப்ப என்கிட்ட என்ன எதிர்பார்க்கி றாங்கனு முதல்ல தெரிஞ்சுக்கிறேன். கோயம்புத்தூர் போயிருந்தப்ப அங்க எனக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ், என்னை அவசரப் படுத்தலை. அக்கறையாத்தான் இருக்கச் சொன்னது. அதனால யோசிச்சுத்தான் அடுத்த கதை ஓ.கே பண்ணணும்.''

 “துல்கர் என்னைவிட ஸ்மார்ட்!”

``உங்க மகன் வேதாந்த் எப்படி இருக்காரு... யாரோட ஃபேன்?''

``நான் கேட்கிறப்ப என் ரசிகன்னு சொல்றான். ஆனா, அக்‌ஷய் குமாரும் சூர்யாவும் அவனுக்கு ரொம்பப் புடிக்கும். இப்ப 10 வயசு ஆகுது. ஆனா, எனக்கு 20 வயசுல இருந்த மெச்சூரிட்டி இப்ப அவனுக்கு இருக்கு.  இந்த ஜெனரேஷன் நாம பேசினா கண்ணைப் பார்த்தே என்ன சொல்ல வர்றோம்னு புரிஞ்சிக்கிறாங்க. அதுக்கு அப்புறம் சும்மா மரியாதைக்குத்தான் நாம என்ன சொல்றோம்னு கேட்டுக்கிறாங்க. உண்மையைச் சொல்லணும்னா நம்மளை அவங்க டாலரேட் பண்ணிக்கிறாங்க அவ்ளோதான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism