Published:Updated:

“நானும் கேடிதான்!”

 “நானும் கேடிதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“நானும் கேடிதான்!”

பா.ஜான்ஸன்

“நானும் கேடிதான்!”

பா.ஜான்ஸன்

Published:Updated:
 “நானும் கேடிதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“நானும் கேடிதான்!”

சிவகார்த்திகேயனுடன் `ரஜினிமுருகன்', தனுஷுடன் ஒரு படம், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என கீர்த்தி சுரேஷ் செம பிஸி. ` `ரஜினிமுருகன்’ நல்ல ரெஸ்பான்ஸ், தனுஷ் படம் ஷூட் ஓவர், தெலுங்கில் நடித்த முதல் படம் ஹிட். நான் ரொம்ப ஹேப்பி!' என ஸ்டேட்டஸ் தட்டிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷிடம் பேசினேன்.

`‘ `இது என்ன மாயம்’ படத்தில் சிட்டி கேர்ள், ‘ரஜினிமுருகன்’ படத்தில் மதுரைப் பொண்ணு. எப்படி இருந்தது அனுபவம்?''

``மதுரைப் பொண்ணா நான் நடிக்கிறது இதுதான் முதல் முறை. இந்த கேரக்டர் எந்த மாதிரி இருக்கும்னு ஒரு குழப்பம் இருந்தது. சிவகார்த்திகேயன், சூரி எல்லாரும் நடிக்கிறதைப் பார்த்து எப்படி எக்ஸ்பிரஷன் கொடுக்கணும், அந்த லுக் எப்படி கொண்டுவரணும்னு மெள்ள மெள்ளக் கத்துக்கிட்டேன். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மூட்லதான் இந்தப் படமும் இருக்கும்னு சொன்னதால, அந்தப் படத்தை ஒருமுறை பார்த்தேன். ஒரு ஐடியா கிடைச்சது. அப்புறம் மதுரைப் பொண்ணாவே வாழ்ந்தாச்சு. `ரஜினிமுருகன்'ல என் கேரக்டர் பேரு கேடி... (கார்த்திகா தேவி) நிஜத்துல நானும் ஒரு கேடிதான்.''

``சிவா-சூரி-பொன்ராம்னு `ரஜினிமுருகன்' செட் முழுக்க செம ஜாலியான ஆட்களா இருந்திருப்பாங்களே... எப்படிச் சமாளிச்சீங்க?''

``செட்ல ஒவ்வொரு நாளுமே காமெடிதான். ஆரம்பத்தில் கேரளா பொண்ணு, தமிழ் தெரியாதுனு நினைச்சு என்னைக்  கலாய்ச்சாங்க. ஆனா, ஒருநாள் நான் தமிழில் திருப்பிக் கலாய்க்க, மிரண்டுட்டாங்க. காரைக்குடியில் ஷூட்டிங் நடந்தப்ப, நான்வெஜ் மெஸ்ல இருந்து சாப்பாடு வரும். நான் மட்டும்தான் அங்க வெஜிட்டேரியன். நான்வெஜ் சாப்பிடும்போது விதவிதமான சத்தம் எழுப்பி, என்னை வெறுப்பேற்றுவார் சிவகார்த்திகேயன். சிவா-சூரி ஒரு டீம்னா, நானும் பொன்ராம் சாரும் ஒரு டீம். ஷூட்டிங் செம ஜாலியாப் போச்சு.''

 “நானும் கேடிதான்!”

``சிவகார்த்திகேயனோடு மறுபடி ஒரு படம் எப்படி அமைஞ்சது?''

``சிவா ரொம்ப சிம்பிள். ஷாட்ல ஏதாவது தப்பு பண்ணா ‘நீ இப்போ பண்ணது நல்லா இல்லை. இதைச் சரி பண்ணு’னு முகத்துக்கு நேராவே சொல்லி சரிபண்ணுவார். அவரோட அடுத்த படத்திலும் நடிக்க, நான் ஒரு நிமிஷம்கூட யோசிக்கலை. இது `ரஜினிமுருகன்' கேரக்டர்ல இருந்து முழுக்க முழுக்க வித்தியாசமா இருக்கும்.’’

 ``பிரபுசாலமன் படத்துல, தனுஷ்கூட நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?''

``தனுஷ் சார் பெரிய பெர்ஃபாமர்னு எல்லாருக்குமே தெரியும். இந்த ஷாட்ல எப்படி பெர்ஃபார்ம் பண்றதுனு யோசிச்சிட்டு இருக்கும்போதே, அதை ரொம்ப ஈஸியா செஞ்சிட்டுப் போயிடுவார். ஷூட்டிங் ஆரம்பிச்ச நாலாவது நாள், ‘பரவாயில்லை... நல்லா நடிக்கிறீங்க’னு சொன்னார். எனக்குப் பிடிச்ச ஒரு நடிகர்கிட்ட இருந்து வந்த அந்தப் பாராட்டை மறக்கவே முடியாது.''

``மறக்க முடியாத ரசிகர்?''

``ஃபேஸ்புக்ல ‘கீர்த்தி சுரேஷ் ஸ்மைலிங் ஸ்டார்’னு ஒரு ஃபேன் குரூப் இருக்கு. ஒவ்வொரு வருஷமும் என் பிறந்த நாளுக்கு வீட்டுக்கு வந்து கிஃப்ட் கொடுத்துட்டுப் போவாங்க. என் படத்தின் டிரெய்லர், டீஸர் எது வந்தாலும் நான் பார்க்கிறதுக்கு முன்னாடியே எனக்கு அனுப்பிடுவாங்க. சினிமாவுல இன்னும் எதுவும் பெருசா பண்ணலை. அதுக்கு முன்னாலயே இப்படி ஃபேன்ஸ் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.''

``உங்க குடும்பம் பற்றி சொல்லுங்க?''

``அப்பா சுரேஷ் மலையாள பட தயாரிப்பாளர். அம்மா மேனகா நடிகை. அவங்க நாகர்கோவில் என்பதால் வீட்ல தமிழ், மலையாளம் ரெண்டுமே பேசுவோம். அக்கா ரேவதியும் சினிமாவுல இருக்காங்க. `ரா.ஒன்’, `கிரிஷ் 3’ படங்களில் சிஜி வொர்க் பண்ணியிருக்காங்க. இப்ப கேரளாவுல `ரேவதி கலாமந்திர்’னு ஒரு ஃபிலிம் அகாடமி நடத்திட்டு இருக்காங்க. நாங்க ஒரு சினிமா குடும்பம்.’’

``உங்க நெருங்கிய தோழி மஞ்சிமா மோகன், கௌதம் மேனன் படம் மூலமா தமிழ்ல அறிமுகம் ஆகுறாங்க. நடிப்புக்கு ஏதாவது டிப்ஸ் கொடுத்தீங்களா?''

``அவளும் நானும் சின்ன வயசுல இருந்தே  ஃப்ரெண்ட்ஸ். அவங்க அப்பா விபின் மோகன் கேமராமேன். அவர் ஒளிப்பதிவு செய்த படத்துல என் அம்மா மேனகா நடிச்சிருக் காங்க. அதனால ரெண்டு குடும்பங்களும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். நடிப்புல அவளுக்கு நான்தான் சீனியர். அவளுடைய முதல் படம் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ நடிச்சிட்டிருந்தப்போ, நிறைய விஷயங்கள் கேட்பா. கௌதம் சார் படத்துல நடிக்கிறது ஹீரோயினுக்குப் பயங்கர மைலேஜான விஷயம். மஞ்சிமா நல்ல பெர்ஃபாமரா நிச்சயம் பேர் வாங்குவா!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!