சினிமா
Published:Updated:

“வேற லெவல் ஹாரர்!”

 “வேற லெவல் ஹாரர்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“வேற லெவல் ஹாரர்!”

பா.ஜான்ஸன்

``ஆக்‌ஷன், காமெடி படங்களை ரசிக்க ஒரு கூட்டம் இருக்கிற மாதிரி, ஹாரர், த்ரில்லர் படங்களை ரசிக்கவும் இங்கே ஒரு பெரும் கூட்டமே இருக்கு. அதுல ஒருத்தன்தான் நான். அப்படி பார்த்து, ரசிச்ச த்ரில்லர் படங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதலான விஷயங்களைச் சேர்த்து படம் பண்ண ஆசை. அந்த மாதிரி ஒவ்வொரு நிமிஷமும் ஆடியன்ஸைப் பதறவைக்கும் படம்தான் இந்த
‘சதுரம்' '' - டெரர் அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.

`` `சதுரம்' ஒரு இங்கிலீஷ் படத்தோட கதைனு சொன்னாங்களே?’’

``ஆமாம்... இங்கிலீஷ்ல வந்த ‘சா’ படத்தின் தழுவல்தான் ‘சதுரம்’. முறையா கிரெடிட்ஸ் கொடுத்துப் பண்ணியிருக்கோம். மிரட்டல் கொலைகள், படபடக்கும் த்ரில்னு இது வேற மாதிரியான ஹாரர் படம். இதுவரை ஏழு பாகங்கள் வந்திருக்கு. வீடியோ கேம்ஸ், குறும்படங்கள்னு எல்லா இடங்களிலும் அதிர்வுகளை உண்டாக்கிய படம்.''

 “வேற லெவல் ஹாரர்!”

``படத்தோட இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுறீங்களே... ஏன்?''

``இந்தப் படத்தைத் தொடங்கும்போது ரெண்டு பாகங்கள் எடுக்கும் ஐடியாவே இல்லை. ஆனா, ஷூட் ஆரம்பிச்சதும் இதுக்கு ஒரு சீக்குவல் எடுத்தா இன்னும் நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அதே நேரம் இந்த சீக்குவல் பார்த்தாதான் முதல் பாகமே புரியும். அதனால்தான் இரண்டாவது பாகத்தை முதலில் வெளியிடுறோம். இந்த ரெண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தால், இந்த இரண்டுக்கும் இடையில் நடந்த மாதிரியான ஒரு கதை இருக்கு. அதை மிட்க்குவலா எடுக்கவும் திட்டம் இருக்கு. படத்தில் பாட்டு கிடையாது. படம் வெறும் 93 நிமிடங்கள்தான். இன்டர்வெல்கூட இல்லாம திரையிடலாம்னு பேசிக்கிட்டிருக்கோம். இதை ரசிகர்கள் ஏத்துப்பாங்கனு நம்பிக்கை இருக்கு.''

``அப்படி என்ன கதை?''

``வாழ்க்கை, எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுக்காது. ஆனா சிலர், எல்லாமே இருந்தும் வாழ்ற காலத்தை சரியா பயன்படுத்திக்க மாட்டாங்க. அப்படி இருக்கிறவங்க ஒருமுறை மரணத்தின் விளிம்பு வரை போயிட்டுவந்தால், இந்த வாழ்க்கையின் மதிப்பு என்னனு புரிஞ்சுப்பாங்க. அப்படி ஒரு அனுபவத்தை, நாலு சுவர்களுக்குள் நடக்கும் விஷயங்கள் கொடுக்குது. அந்த நாலு சுவர்களைக் குறிப்பிடத்தான் படத் தலைப்பு ‘சதுரம்’னு வெச்சிருக்கோம்.''