Published:Updated:

தவறுகளின் பட்டியல்!

தவறுகளின் பட்டியல்!

ச.ஆனந்தப்பிரியா, லோ.சியாம் சுந்தர்

தவறுகளின் பட்டியல்!

ச.ஆனந்தப்பிரியா, லோ.சியாம் சுந்தர்

Published:Updated:
தவறுகளின் பட்டியல்!

ஹிட்டான படமோ, மொக்கை வாங்கின படமோ... பாரபட்சமே இல்லாம சின்னச்சின்னத் தவறுகளையும் சிதறாம நோட் பண்ணி, அதை ஃபேஸ்புக், ட்விட்டர்ல போட்டு படம் எடுத்தவனை உரி உரினு உரிக்கிறது சிலரோட வேலை!

`முதல் ஷாட்ல ஹீரோயின் கையில் இருந்த வளையல், அடுத்த ஷாட்ல எங்க சார் போச்சு?’னு கன்டினியூட்டி பார்க்கும் அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் வாழ்க்கையில் பம்பரம்விட்டு விளையாடுறதுல இவங்க கில்லிகள். லாஜிக் மிஸ்டேக் மட்டுமே கண்டுபுடிச்சிக்கிட்டு இருந்தவங்க, இப்போ அறிவியல், பொருளாதாரம், சமூகவியல், வணிகவியல்னு பல மிஸ்டேக்குகளையும் கண்டுபிடிச்சு கதிகலங்க வைக்கிறாங்க!

சமீபத்தில் ஹிட் அடிச்ச தமிழ்ப் படங்கள்ல அவங்க கண்டுபிடிச்ச அரிய தவறுகளின் பட்டியல்தான் இது!

வேலையில்லா பட்டதாரி

தவறுகளின் பட்டியல்!

அமலா பால், அம்சமா `ஹாய்’ சொல்ற சீன்ல புக்கை தலைகீழாவெச்சுப் படிச்சுக்கிட்டு இருப்பாங்க. அடுத்த சீன்லயே நேராவெச்சு படிப்பாங்க. இதுல முக்கியமான சந்தேகம் என்னன்னா, புக்கை நேராகூட வெச்சு படிக்கத் தெரியாத அவங்களுக்கு, எப்படி ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கிடைச்சது?(!) நம்ம தனுஷ், அம்மா இறந்த சோகத்துல பாட்டு பாடிக்கிட்டே கீழே உட்காந்திருப்பாரு. நிக்கிறப்ப ஷூ போட்டிருப்பார்், உட்கார்றப்ப ஷூ போடாம இருப்பார். அம்மா இறந்த சோகத்துலகூட, போய் ஷூ போட்டுட்டு வந்து அழற கடமை உணர்ச்சியை என்ன அவார்டு கொடுத்துப் பாராட்டுறதுனு தெரியலை. அதுக்கு அடுத்து வர்ற ஒரு பக்கா மாஸ் சீன்தான் தாடி வளர்க்கிறது. அம்மா இறந்த சோகத்துல தாடி வளர்த்த தனுஷ், அவரோட சேலையை பீரோவில் இருந்து கட்டிலுக்கு மாத்தும் கொஞ்ச நேரத்துலயே தாடி  இல்லாம படுத்துத் தூங்குவாரு. மீண்டும் காலையில தாடியோடு இருப்பாரு. அது எப்படி சாரே?

பாபநாசம்

படத்துல ஓர் இடத்துல `மொத்த சம்பவங்களும் 26 நாள்ல நடக்கும்'னு சொல்றாங்க. நம்ம நாட்டுல எல்லாம், நாலுக்கு நாலு பில்டிங்க கட்டவே நாப்பது நாள் எடுத்துக்கிறாங்க. அதுக்கே நாக்கு தள்ளுது. அவ்ளோ பெரிய போலீஸ் ஸ்டேஷனை எப்படிய்யா 26 நாள்ல கட்டினாங்க? படத்தோட மொத்த க்ளைமாக்ஸும் முக்கியமா நம்பி இருக்கிறது, அந்த போலீஸ் ஸ்டேஷனை தான். இதுகூட ஓ.கே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனா, படத்துல சுயம்புலிங்கம் `அஞ்சான்’ படத்தை ஆகஸ்ட் 3-ம் தேதி பார்க்கப்போறதா கதை சொல்வாரு. பட், அந்த அபூர்வப் படம் ரிலீஸ் ஆனதே ஆகஸ்ட் 15-ம் தேதி தான். இதைக் கண்டுபிடிச்சு இருந்தா, படம் அப்பவே முடிஞ்சிருக்குமே. இதைக்கூடக் கண்டுபிடிக்கத் தெரியாத போலீஸா நம்ம தமிழ்நாடு போலீஸ்?

தனி ஒருவன்

தமிழ் சினிமாவோட டெக்னிக்கலான புத்திசாலி வில்லன்னு பேர் எடுத்த சித்தார்த் அபிமன்யூ நடிச்ச படத்துல, அவருக்கே தெரியாம சிலர் தப்பு பண்ணிட்டாங்க. வெளிநாட்டுல இருக்கிற மருந்து கம்பெனியில உள்ளவருக்கு 1,500 கோடி ரூபாய் கொடுத்து அவங்க கம்பெனியை வாங்க ட்ரை பண்ணுவாரு நம்ம சித்தார்த். பட் அவர் இருட்டுல  இருக்கிற நேரமா பார்த்து யாரோ அதை 1,300 கோடி ரூபாயா மாத்தியிருக்காங்க. அட பணத்தோட மதிப்பு அதுல மட்டும் மாறாம, ஜெயம் ரவியோட சீக்ரெட் ரூம்லயும் மாறியிருக்கு. இந்தியா லெவல்ல சிவில் சர்வீஸஸ்ல ஃபர்ஸ்ட்டா வர்றாரு நம்ம ஜெயம் ரவி. ஆனா, தான் வெளியில பேசினதை பக் டிவைஸ் மூலமா சித்தார்த் ஒட்டுகேட்டதுக்கு, வீட்டுக்குள்ள வந்து மைக் இருக்கானு தேடுவாரு. இவ்வளவு படிப்பு படிச்சு என்ன புண்ணியம் மிஸ்டர் மிருதன்?

பாகுபலி

தவறுகளின் பட்டியல்!

ஓப்பனிங் சீன்ல மூச்சைப் பிடிச்சுக்கிட்டு கையில குழந்தையோட முழு நதியையும் கடந்து வருவாங்க நம்ம ரம்யாகிருஷ்ணன்... ஸாரி சிவகாமி. அது எப்படி அரசி, மொத்த நதியையும் கையில குழந்தையோடு ஆக்ஸிஜன் சிலிண்டர்கூட இல்லாம கடந்தீங்க... மூச்சு வாங்குது. அடுத்து கீழே விழுற நூறு அடி சிலையை தனி ஆளா தாங்குறது, ஒரு மரக்கிளையைப் பிடிச்சு ஜம்ப் பண்ணி ஆகாயத்துக்குப் போயிட்டு வர்றதுனு எல்லாமே தெலுங்குப் பட லாஜிக் மிஸ்டேக்குகள். அடுத்தபடியா நம்ம தமன்னா போராளியிலேர்ந்து பெண்ணா மாறுற சீன் தியேட்டர்ல செம அப்ளாஸ் வாங்குனது. ஆனா, அந்த சீன் ஆரம்பிக்கும்போது தமன்னா டிரெஸ்ஸுக்கு முடிச்சே இருக்காது. அடுத்த சீன்ல எப்படி டிரெஸ்லேருந்து முடிச்சை அவிழ்க்கிறாங்க? தயவுசெஞ்சு இந்த முடிச்சை மட்டும் கொஞ்சம் அவிழ்த்திடுங்க பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism