இணைய இளசுகளின் டார்லிங் `மஞ்சிமா மோகன்'. பாலக்காட்டில் பிறந்த இவர், படித்தது சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில். மலையாளத்தில் `ஒரு வடக்கன் செல்ஃபி' படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர், இரண்டாவது படத்துக்கே கௌதம் மேனன் அழைக்க திக்குமுக்காடிப் போனார். சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் `அச்சம் என்பது மடமையடா' இன்னும் ரிலீஸே ஆகவில்லை; அதற்குள் எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிவிட்டார்.
வெல்கம் கண்ணு!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
`ப்ளேபாய்’ இதழின் உரிமையாளர் ஹியூ ஹெஃப்னருக்குச் சொந்தமான `ப்ளேபாய் மேன்ஷன்' விற்பனைக்கு வந்திருக்கிறது. விலை 1,300 கோடி ரூபாய். இந்த மேன்ஷன் இதுவரை காஸ்ட்லி பார்ட்டிகள், பத்திரிகைகளுக்கான போட்டோ ஷூட் என பயன்படுத்தப்பட்டது. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த மேன்ஷனை 1971-ம் ஆண்டில் வாங்கினார் ஹெஃப்னர். அப்போது இதன் விலை வெறும் 7.5 கோடி ரூபாய்.
போட்டோ ஷூட்... விடு ஜூட்!
பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின், கவனம் ஈர்க்கும் கவிதைகள் எழுதுபவர். மும்பை இலக்கிய விழா ஒன்றில் இவர் வாசித்த கவிதை வைரலாகி லைக்ஸ் அள்ளியது. பெண்களுக்கு எதிரான வன்முறைச் செய்திகளை மாஸ் மீடியா எப்படிக் கையாள்கிறது என்பதை விமர்சித்து இவர் எழுதிய கவிதைக்கு நடனம் அமைத்து வீடியோவாக யூ-டியூபில் அப்லோட, இதற்கும் அதிக வரவேற்பு... அதிகப் பாராட்டுக்கள்.

பொயட்டு... பொயட்டு... மிரட்டு... மிரட்டு..!
வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=JF0_dGYeSEkSEk

ஷாரூக் கான், அமீர் கான்... இப்போது சல்மான் கானுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார் அனுஷ்கா சர்மா. `சுல்தான்' படத்துக்காக இந்த ஜோடி இணைகிறது. படத்தில் குத்துச்சண்டை வீராங்கனை கதாபாத்திரம் பெற்ற அனுஷ்கா, அதற்கான தீவிரப் பயிற்சியில் இருக்கிறார்.
`கிக்' பாக்ஸர்!