Published:Updated:

கங்கைக் கரை கவிதை!

இர.ப்ரீத்தி

##~##

ரிச்சா கங்கோபாத்தியாய்... உச்சரிக்கக் கொஞ்சம் சிரமமான பெயர். ஆனால், ரசிப்பதற்கு... செம 'ரிச்சா’ன ஃபிகர். தமிழில் 'மயக்கம் என்ன’ படத்தின் மூலம் அறிமுகம் ஆக இருக்கிறார்.

 ''அது என்னங்க கங்கோபாத்தியாய்?''

''அது என் தாத்தாவுடைய பெயர். அதுக்கு, 'கங்கைக் கரையில் பாடம் நடத்துபவர்’னு அர்த்தம். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? என்னுடைய நிஜப் பெயர் ஆந்த்ரா. அப்படின்னா, 'பாடலோட பல்லவி’னு அர்த்தம். ஆனா, நான் கவிதை மாதிரி அழகா இருக்கிறேன்னு, அம்மா என்னை ரிச்சானு கூப்பிட ஆரம்பிச்சிட் டாங்க. கன்ஃப்யூஸ் ஆகாதீங்க. ரிச்சான்னா, வேதத்தில் 'கவிதை’னு அர்த்தமாம்!''

''ஏதோ உங்க புண்ணியத்தில் மூணு நல்ல வார்த்தைகள் கத்துக்கிட்டேன். ஆமா, எப்படித் தமிழ்ப் பக்கம் வந்தீங்க?''

''டைரக்டர் செல்வராகவன்,  தெலுங்கில் ஒரு படம் பண்றதா இருந்தார். அந்தப் படத்துக்கு என்னை ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ணி இருந்தார். திடீர்னு 'தமிழ்ப் படம் பண்ணப்போறேன். நீ நடிக்கிறியா?’னு கேட்டார். 'மயக்கம் என்ன?’ கதை சொன்னார். அஞ்சே நிமிஷம் அவர் சொன்ன கதையில் இம்ப்ரெஸ் ஆகிட்டேன். 'மயக்கம் என்ன’ படம்... ஒரு ரெகுலர் காதல் கதை கிடையாது. மூணு நண்பர்களைச் சுத்திப் பின்னப்பட்ட கதை. பயணங்களில்தான் கதை நகரும். படத்தில் எனக்கு மேக்கப் கிடையாது ஷூட்டிங் அப்போ என் நடிப்பை மானிட்டரில் பார்க்கவே இல்லை. படம் ரிலீஸ் ஆனதும் பார்க்கலாம்னு இருக்கேன். செம த்ரில்லிங்கா இருக்கு!''

கங்கைக் கரை கவிதை!

''தனுஷ§ம் செல்வராகவனும் ஸ்பாட்டில் எப்படி?''

''ஹைய்யோ! ரெண்டு பேரும் வெவ்வேறு துருவங் கள். ஆனா, செல்வா என்ன யோசிப்பார்னு கரெக்டா தனுஷ் கணிச்சிருவார். ஒரு ஷாட் முடிஞ்சதுமே, 'செல்வா ரீ-டேக் போகச் சொல்வாரு பாரேன்’னு தனுஷ் மெதுவா சொல்வார். அதே மாதிரி நடக்கும். ஒரு நாள் தனுஷ், செல்வா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிச்சேன். ரெண்டு பேருமே தமிழ் சினிமாவோட முக்கியமான வி.ஐ.பி-ங்க. ஆனா, அந்த அடையாளமே இல்லாம சாதாரணமா இருந்தாங்க. இந்தக் காலத்திலும் கூட்டுக் குடும்பமா, அவ்வளவு ஒற்றுமையா இருக்காங்க. எனக்கு ஆச்சர்யமா இருந்தது!''

''சிம்புவோட 'ஒஸ்தி’, தனுஷோட 'மயக்கம் என்ன’னு ஒரே நேரத்தில் ரெண்டு பேருக்கும் ஜோடியா நடிக்கிறீங்க. ரெண்டு பேருக்கும் 'கோல்டு வார்’ இருக்கிறது தெரியுமா?''

''கேள்விப்பட்டேன். ஆனா, ரெண்டு பேரும் அவங்கவங்க வேலையில் சின்சியரா இருக்காங்க. வேலையில்தான் போட்டி இருக்கும்னு நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் மனஸ்தாபம் எதுவும் இருக்கிற மாதிரி தெரியலை. எப்படியோ, எனக்கு ரெண்டு படங்களுமே நல்ல படங்களா அமைஞ் சிருச்சு!''

''ரிச்சாவோட ரோல் மாடல் யார்?''

''எங்க அம்மா. அமெரிக்காவின் ஹென்றி ஃபோர்டு மியூஸியத்தில் கல்வித் துறை இயக்குநரா இருக்காங்க. கடின உழைப்பாளி. நல்லாப் பாடுவாங்க. அவங்ககிட்ட இருந்து நானும் பாடக் கத்துக்கிட்டேன். நடிகைகளில் என் ரோல் மாடல் ஜோதிகா. தெலுங்கில் 'நாகவள்ளி’ பண்ணும்போது பி.வாசு சார், ஜோதிகா நடிச்ச 'சந்திரமுகி’யைப் பார்க்கச் சொன்னார். சான்ஸே இல்லைங்க... அவங்க கண்ணே அவ்வளவு பேசுது. அவங்களை நேரில் பார்க்க ஆசையா இருக்கு. இதுவரைக்கும் நேரம் அமையலை!''

கங்கைக் கரை கவிதை!

''அழகு ரகசியம் ப்ளீஸ்...''

''நான் இயற்கை விரும்பி. முகத்துக்கு தேன், தக்காளினு எதையாவது தடவிட்டே இருப்பேன். நான் ஒரு நியூட்ரீஷியன் மாணவி. தண்ணீரோட மகத்துவம் தெரியும். அதனால், எப்போதும் என் பையில் தண்ணீர் பாட்டில் இருக்கும். தண்ணி குடிச்சுட்டே இருங்க. தண்ணியால் முகத்தைக் கழுவிட்டே இருங்க. ரிச்சா மாதிரி ஆகிரலாம்!''