Published:Updated:

நீங்கள்.. நான்... பின்னே தமிழ் சினிமா!

இர.ப்ரீத்தி, க.நாகப்பன்

##~##

ண்ணீர்தான் கொடுக்க மாட்டார்கள். ஆனால், தங்கத் தமிழ்நாட்டுக்கு ஹீரோயின் பஞ்சம் வரும்போது எல்லாம் அள்ளிக் கொடுப்பது கேரளாதானே! அந்த அன்புக்கு நன்றி செலுத்தவே இந்த நாலு பக்க பேட்டிகள்!

 நித்யா மேனன்... திராட்சை விழி அழகி. கன்னடத்தில் கலக்கிக்கொண்டு இருக்கும் கேரளக் கிளி.

''படிப்பு..?''

''ஜர்னலிஸம். நானும் பல நடிகைகளை இன்டர்வியூ எடுப்பேன்னு நினைச்சுட்டு இருந்தா, நானே நடிகை ஆகிட்டேன்.''

நீங்கள்.. நான்... பின்னே தமிழ் சினிமா!

''முதல் அறிமுகம்..?''

'' 'ஹனுமன்’கிற ஆங்கில சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனேன். அது கெஸ்ட் ரோல்தான்.''

''எதிர்பாராத சம்பவம்..?''

''நடிக்க வந்ததுதான். ப்ளஸ் டூ படிக்கும்போது, டூரிஸம் மேகஸீனில் என் ஃபோட்டோ பப்ளிஷ் ஆச்சு. அதைப் பார்த்து 'ஆகாஷா கோபுரம்’ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடி ஆக்கிட்டாங்க!''

''வாங்கிய விருதுகள்..?''

''கன்னடாவில் 'ஜோஷ்’ படத்துக்காக ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகை விருதுக்கு நாமினேட் ஆனேன். 'அல மோடலைன்டி’ படத்துக்காக நந்தி விருது வாங்கிட்டு, தமிழுக்கு வந்துட்டேன். தமிழ் சினிமா எனக்கு தேசிய விருது வாங்கிக் கொடுக்கும்தானே?''

''நித்யாவின் ப்ளஸ் பாயின்ட்..?''

''சுருள் முடியும் பல்பு கண்களும். கன்னடத்தில் எல்லாரும் என்னைக் 'குட்டி சௌந்தர்யா’னு கூப்பிடுறாங்க!''

''நித்யாவின் குணம்..?''

''யாராவது எனக்குப் பிடிக்காததை செஞ்சா, கோபத்தில் கொந்தளிச்சிருவேன். அந்தக் குணத்தைக் குறைக்கிற ஐடியாவில் இருக்கேன்!''

நீங்கள்.. நான்... பின்னே தமிழ் சினிமா!

ப்போது 'எங்கேயும் எப்போதும்’ அனன்யா ஃபீவர்தான். 'இரவும் பகலும்’ படத்தில் நடித்துவரும் அனன்யாவின் ஒரு சிட் சாட் இன்டர்வியூ!

''உங்க குடும்பம்..?''

''அப்பா, கோபாலகிருஷ்ணன். பத்திர எழுத்தர். அம்மா,   பிரதீபா. அனன்யானு அழகுப் பொண்ணு ஒண்ணு. அவளுக்கு அர்ஜுன்னு சுமாரான தம்பி ஒண்ணு!''

''சமீபத்திய பாராட்டு..?''

'' 'ஷிகார்’ படத்துல மோகன்லால் சார்கூட நடிச்சிருக்கேன். 'தைரியமான பொண்ணா இருக்கிறே... மலையாள விஜயசாந்தி நீதான்’னு பாராட்டினார். கராத்தே கத்துக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்!''

''எதிர்பார்க்காமல் நடந்த விஷயம்?''

''பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் படிச்சேன். மீடியாவில் இருப்பேன்னு தெரியும். ஆனா, நடிகை ஆவேன்னு நினைக்கலை!''

''நண்பர்கள்..?''

''என் க்ளோஸ் ஃப்ரெண்ட் நஜீமா நசீர். அவ எனக்கு கிஃப்டா கொடுத்த நோக்கியா மொபைலும் குழந்தை இயேசு பொம்மையும் எப்பவும் என்னுடன் இருக்கும்!''

''பிடிச்ச விஷயம்..?''

''பிள்ளையார்... நான் சேர்த்துவெச்சிருக்கிற பிள்ளையார் பொம்மைகளை வெச்சு கண்காட்சியே நடத்தலாம்!''

''உங்களைப்பத்தி தெரியாத விஷயம்?''

''நான் ஆர்ச்சரி சாம்பியன். ஸ்கூல் படிக்கும்போது நேஷனல் லெவல் போட்டிகளில் கலந்துக்கிட்டேன். இப்போகூட அம்பு விட்டா, டார்கெட் மிஸ் ஆகாது!''

ர்ச்சனா கவி... 'அரவான்’ மூலம் அறிமுகம் ஆகும் கேரளக் கவிதை. ''என் அப்பா ஒரு ஜர்னலிஸ்ட். அம்மா, ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் ஸ்டாஃப். அண்ணன் ஜோஸ் கவி, சென்னையில் மார்க்கெட்டிங் வேலை பார்க்கிறான். கடைசியா ஒரு ஹைக்கூ பிறந்தது. அது நானேதான்!''

நீங்கள்.. நான்... பின்னே தமிழ் சினிமா!

''எப்படிக் கிடைச்சது வாய்ப்பு?''

''டெல்லியில் ப்ளஸ் டூ முடிச்சுட்டு கோட்டயத்தில் பி.பி.ஏ., படிக்க வந்தேன். ஆர்.ஜே. ஆக ஆசைப்பட்டேன். வி.ஜே. ஆனேன். என் ஆல்பம் பார்த்துட்டு நடிக்கக் கூப்பிட்டாங்க!''

''உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்?''

''ரீமா கல்லிங்கல் எனக்கு ரொம்ப க்ளோஸ். நாங்க மூணு வருஷ ஃப்ரெண்ட்ஸ். அடிக்கடி பார்த்துக்கலைன்னாலும் சாட்டிங்ல பேசிப்போம்!''

''பிடித்த இயக்குநர்..?''

''இப்போதும் எப்போதும் மணிரத்னம். அவர் படத்தில் வர்ற எல்லா டயலாக்ஸும் எனக்கு அத்துப்படி!''

''அர்ச்சனா கவியோட கேரக்டர் என்ன?''

''ரொம்பப் பிடிவாதம். கேட்டது கிடைக்கணும். இல்லைன்னா... வீடு ரெண்டாயிடும்!''

''பிடித்த விஷயம்..?''

''சமையல்... சூப்பரா சமைப்பேன். ஆனா, யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க!''

''சமீபத்திய சந்தோஷம்..?''

'' 'அரவான்’ படத்துக்காக மதுரையில் சுத்திட்டு இருந்தேன். அந்த ஊர் மக்கள் என்னை அவ்வளவு அன்பாப் பார்த்துக்கிட்டாங்க. அவங்க அன்புக்கு நான் அடிமை!''

ழகு ஓவியா இப்போது 'மெரினா’வில் இருக்கிறார். திருச்சூர் தீபாவளியிடம் கொஞ்ச(ல்) நேரம் பேசியதில் இருந்து...

நீங்கள்.. நான்... பின்னே தமிழ் சினிமா!

'' 'மெரினா’வில் என்ன கேரக்டர்?''

''பேரைக் கேட்டாலே ச்சும்மா சிரிப்பீங்க... என் கேரக்டர் பேரு சொப்பன சுந்தரி. ஹலோ! சிரிக்காதீங்க... எனக்குக் கோபம் வரும். சொப்னானு ஸ்வீட்டாக் கூப்பிடுங்க!''

''சமீபத்திய சந்தோஷம்..?''

''வெற்றிகரமா பி.ஏ. இங்கிலீஷ் முடிச்சாச்சு. 'களவாணி’ ரீ-மேக் கன்னடத்தில் ரிலீஸாகி, 100 நாள் தாண்டி ஓடிட்டு இருக்கு. ஹீரோயினா எனக்கு நல்ல ரெஸ்பான்ஸ். டபுள் சந்தோஷம்!''

''குடும்பம்..?''

''அப்பா நெல்சன் பிசினஸ்மேன். அம்மா ஜான்சி இல்லத்தரசி. நான் ஒரே பொண்ணு. எல்லா சொத்தும் எனக்குத்தான்!''  

''என்னென்ன பிடிக்கும்?''

''குரூப்பா உட்கார்ந்து கிரிக்கெட் பார்க்கப் பிடிக்கும். தனியா உட்கார்ந்து மியூஸிக் கேட்கப் பிடிக்கும்!''

''சாப்பாடு?''

''என் ஆல் டைம் ஃபேவரைட் பொங்கல், மெதுவடைதான்!''

''அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை?''

''முன்னாடி இடியட்... 'களவாணி’க்குப் பின்னாடி... பொறுக்கி!''

''நிஜத்தில் ஓவியா எப்படி?''

''எமோஷனல் கிடையாது. வெட்கம் தெரியாது. கொஞ்சம் ஸ்டிராங்க் ஹார்ட் பொண்ணு!''