Published:Updated:

குடகு... மதுரை... எர்ணாகுளம்

குடகு... மதுரை... எர்ணாகுளம்
பிரீமியம் ஸ்டோரி
News
குடகு... மதுரை... எர்ணாகுளம்

பா.ஜான்ஸன்

ரன்யா ராவ்:

கர்நாடகாவின் குடகில் இருந்து வந்திருக்கிறார் ரன்யா ராவ். `வாகா' படத்தில் விக்ரம் பிரபுவை இவர்தான் லவ் பண்ணப்போகிறார். ``குடகுல ஸ்கூல், பெங்களூர்ல காலேஜ், மும்பையில் ஆக்டிங்... ஆல்ரெடி இந்தியாவையே ரவுண்டு அடிச்சிட்டுத்தான் இப்போ சென்னை வந்திருக்கேன்'' என ரகளையாகப் பேசத் தொடங்குகிறார்.

``முதல் படத்திலேயே கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப் ஹீரோ, எப்படி இருந்தது?’’

``ஹையோ... அது செம்ம செம்ம செம்ம.  தெலுங்குல ஹிட்டான `மிர்ச்சி' பட ரீமேக்தான் ‘மாணிக்யா’. சுதீப் சார், ரவிச்சந்திரன் சார், ரம்யா கிருஷ்ணன் மேடம்னு பெரிய பெரிய ஸ்டார்ஸ்கூட நடிச்சது பெரிய பிளெஸ்ஸிங்.’’

குடகு... மதுரை... எர்ணாகுளம்

``நடிப்பில் எப்படி இவ்வளவு ஆர்வம்?’’

``குட்டிப் பாப்பாவா இருக்கும்போதே ஸ்கூல்  டிராமாவுக்கு நான்தான் முதல் ஆளா நடிக்கப் போய் நிப்பேன். ஆனா, வீட்ல மம்மி-டாடிக்கு நான் நடிக்கிறதுல விருப்பம் இல்ல. என் ஆர்வத்தைப் பார்த்தவங்க, `சரி போ... பண்ணு. ஆனா, அதுக்கு முன்னால ஒரு டிகிரியாவது வாங்குனு சொல்லி இன்ஜினீயரிங்ல சேர்த்துவிட்டாங்க. `எனக்குப் படிக்கப் பிடிக்கலை’னு சொல்லிட்டே இருப்பேன். நாலு மாசத்துக்குப் பிறகு `சரி... உனக்குப் பிடிச்சதையே செய்’னு சொல்லிட்டாங்க. அப்படியே படிப்புக்கு எண்டு கார்டு போட்டு, ஆக்டிங் கோர்ஸ் சேர்ந்தாச்சு. அப்படியே ‘மாணிக்யா’ படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க.’’

‘` `வாகா’ எப்படி இருக்கு?’’

``எனக்கு தமிழ் தெரியாதுனு முதலில் கொஞ்சம் தயங்கினேன். ஆனா, இப்போ தமிழ் பேசினா புரிஞ்சுக்கிற அளவுக்குக் கத்துக்கிட்டேன். அந்தத் தயக்கத்தைப் போக்கினதே `வாகா' டீம்தான்.  இப்போ குமரவேலன் சார் என் க்ளோஸ் ஃப்ரெண்ட். இந்தியா-பாகிஸ்தான் பார்டர்ல நடக்கும் ஸ்டோரி. அங்க எனக்கும் விக்ரம் பிரபுக்கும் நடக்கும் லவ்தான் விஷயமே. விக்ரம்  பிரபு செம ஜாலியான ஆள். மொத்தமா இந்த டீமே எனக்கு ஒரு ஃபேமிலி மாதிரி.’’

நிவேதா பெத்துராஜ்:

பக்கா மதுரைப் பொண்ணு நிவேதா பெத்துராஜ். போன வருஷம் துபாயின் மிஸ் இந்தியா சாம்பியன். `ஒருநாள் கூத்து' படத்தில் தினேஷுடன் வேஷம் கட்டியிருக்கிறார். 

``பதினோரு வயசு இருக்கும்போது குடும்பத்தோடு துபாய்க்கு ஷிஃப்ட் ஆகிட்டோம்.  ஸ்கூல் காலேஜ் எல்லாம் அங்கேதான். ஃப்ரெண்டு சொன்னதால், சென்னை வந்து ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். இப்போ படமும் நடிச்சு முடிச்சாச்சு...''  என  டூ மினிட்ஸில் ஜிலீர் கதை சொல்கிறார் நிவேதா.

``முதல் பட அனுபவம் எப்படி இருந்தது?’’

``தேங்க் காட்... எப்படி அழணும், எப்படிச் சிரிக்கணும்னு ஷூட்டிங் போறதுக்கு முன்னால மூணு நாட்கள் ட்ரெய்னிங் கொடுத்தாங்க. இல்லாட்டி சொதப்பிருப்பேன். அப்புறம் தமிழ் தெரிஞ்சதால், கொஞ்சம் தைரியமா நடிச்சிட்டேன்.’’

குடகு... மதுரை... எர்ணாகுளம்

``மதுரை Vs. துபாய்?’’

``மதுரையில் எப்பவும் ஃப்ரெண்ட்ஸ், திருவிழா, சொந்தக்காரங்கனு செம ஜாலியா இருந்தது. துபாய்ல அந்த மாதிரி எல்லாம் இல்ல. ஆனா, இங்க என்ன ப்ளஸ் தெரியுமா? மதுரையில் இருந்தப்போ ஆறு மணிக்கு மேல வெளியே போகாத, அங்கே இங்கே சுத்தாதேனு நிறைய கண்டிஷன்ஸ். வளர்ந்ததுக்கு அப்புறம் அதை எல்லாம் உடைக்கணும்னு ஒரு நினைப்பு இருந்தது. இப்போ எனக்கு விருப்பமானது எல்லாம் செய்ய முடியுது. ஸ்கூபா டைவ், ஸ்போர்ட்ஸ் கார் டிரைவ், டிராவல், கன் ஷூட்டிங், மார்ஷியல் ஆர்ட்ஸ்னு நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.  அட்வெஞ்சர்னா அவ்வளவு விருப்பம்.’’

``நடிப்பில் இன்ஸ்பிரேஷன்?’’

``நயன்தாரா. அவங்களோட டைஹார்ட் ஃபேன் நான்.’’

சேத்னா டைட்டஸ்:

கேரளத்தில் இருந்து வந்திருக்கும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்... சேத்னா டைட்டஸ். படிச்சது பி.காம்;  பிடிச்சது தமிழ் சினிமாதான்.

``ரஜினி, விஜய், தனுஷ் எல்லாம் எனக்கு அவ்ளோ பிடிக்கும். ஒரு படம் மிஸ் பண்ண மாட்டேன். முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுவேன்'' என ஸ்டேட்டஸ் போடுகிறார் சேத்னா டைட்டஸ். சசி இயக்கும் ‘பிச்சைக்காரன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்குத் துணை இவர்தான்.

``எனக்கு நடிகை ஆகணும்னு ஆசை இருந்தது. அதுக்காக தனியா எதுவும் க்ளாஸ் போகலை. முதல் நாள் ஷூட்டிங்ல அவ்ளோ பயம். ஆனா, இதுதான் விஷயம்னு தெரிஞ்சதுக்குப் பின்னால ஈஸியா ஆகிடுச்சு. அதுவும் இல்லாம நமக்குத்தான் பார்த்த படங்களில் இருந்து அவ்வளவு ரெஃபரன்ஸ் இருக்கே. ‘தளபதி’ ஷோபனா, `படையப்பா’ ரம்யா கிருஷ்ணன், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ சிம்ரன், ‘அலைபாயுதே’ ஷாலினி, ‘கஜினி’ நயன்தாரானு நிறையப் பேரின் நடிப்பு எனக்கு இன்ஸ்பையர் பண்ணியிருக்கு. தவிர, சசி சார் மாதிரி ஒரு இயக்குநர் என்னை நடிக்க வெச்சிடுவார்னு ஒரு நம்பிக்கைதான்.’’

``தமிழ் ஆட்களா சொல்றீங்களே... மலையாள சினிமாவில் யாரும் பிடிக்காதா?’’

``அதுக்குக் காரணம் நான் மலையாளப் படங்களைவிட தமிழ்ப் படங்கள் அதிகம் பார்த்ததுதான். மலையாளத்திலும் நிறையப் பேர் பிடிக்கும். ப்ருத்விராஜ் சாரின் எல்லா படங்களும் ரொம்பப் பிடிக்கும். இப்போ நிவின் பாலி, கேரளாவில் செம மாஸ் ஆகிட்டார், அவரையும் பிடிக்கும். சென்னையில ‘பிரேமம்’ பயங்கர ஹிட்டாமே?’’

குடகு... மதுரை... எர்ணாகுளம்

``விஜய் ஆண்டனி என்ன சொன்னார்?’’

``எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். க்ளாசிக்கல் தெரியும்; வெஸ்டர்னும் ஆடுவேன். கேரளாவில் தமிழ்ப் பாட்டு நிறைய ஹிட்டாகும். அதில் சில பாடல்களுக்கு நான் டான்ஸ் பண்ணியிருக்கேன். அதில் விஜய் ஆண்டனி சார் இசையமைச்ச பாடல்களும் இருக்கு. ஆனா, எனக்கு இங்க வந்த அப்பறம்தான் தெரியும். நான் அவர்கிட்ட சொன்னதும், `ஓ அப்பிடியா!’னு சிரிச்சார். சின்னத் தாமரை, `முளைச்சு மூணு இலையே விடல’ பாட்டு எல்லாம் என் ஃபேவரிட். நடிப்பிலும் சில டிப்ஸ் கொடுத்தார்.’’

``ரியல் லைஃப்ல சேத்னா எப்படி?’’

``ரொம்ப ஃப்ரெண்ட்லியான பொண்ணு. ஃபேமிலியோட அதிக நேரம் செலவழிக்கப் பிடிக்கும். ஜாலியான கேரக்டர்தான். ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ், சினிமா, ஊர்சுத்தறது இதுதான் சேத்னா!’’