
‘‘போர்க்களத்தில் இருந்து ஓடிய மன்னர், திருநெல்வேலியைச் சுற்றி வந்திருக்கார்னு எப்படிக் கண்டுபிடிச்சே?’’
‘‘ `யாரங்கே?’னு கேட்பதற்குப் பதில் `யார்லே அங்கே?’னு கேட்கிறாரே!’’
- அஜித்
‘‘வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இன்னொரு அவதூறு வழக்கு போடாம இருப்பாங்கன்னா சொல்றேன் யுவர் ஆனர்!’’
- பர்வீன் யூனுஸ்
‘‘எதிரி போர் முரசு கொட்டும்போது, நம் மன்னர் இன்விடேஷன் கொடுத்துக்கொண்டிருக்கிறாரே!’’

‘‘அது... புது குழி புகுவிழா இன்விடேஷன்!’’
- கிணத்துக்கடவு ரவி
‘‘ `நான் ஒரு ஆங்கிரி பேர்டு’னு எதிரி கோபமாக ஓலை அனுப்பியுள்ளான் மன்னா!’’

‘‘போகட்டும் விடும். நான் டெம்பிள் ரன்னில் கில்லாடி என்பதை அவன் தெரிந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது!’’
- கிணத்துக்கடவு ரவி