Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்

பா.ஜான்ஸன்

பிட்ஸ் பிரேக்

பா.ஜான்ஸன்

Published:Updated:
பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்

ந்து, கிறிஸ்தவம்... இரு முறைகளிலும் மகள் சாயாவின் திருமணத்தை நடத்திய மகிழ்ச்சியில் இருக்கிறார் ரவீனா டாண்டன். தனது திருமணத்துக்கு முன்னரே 1990-ம் ஆண்டு பூஜா, சாயா என இரு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவந்தார் ரவீனா. சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மகள் பூஜாவுக்குத் திருமணம் முடித்து, ஏற்கெனவே பாட்டியும் ஆகிவிட்டார் ரவீனா!

பிட்ஸ் பிரேக்

வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார் த்ரிஷா. `அரண்மனை-2’ படத்தில் பேய் வேடத்தில் பயமுறுத்தி இருக்கும் த்ரிஷா, அடுத்ததாக தனுஷுடன் நடிக்கும் `கொடி' படத்தில் வில்லியாக நடிக்கிறார். `நீலாம்பரி’ ரம்யா கிருஷ்ணன் போல, த்ரிஷாவுக்கு இந்த ரோல் இருக்குமாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்ஸ் பிரேக்

` `ராஞ்சனா’, `ஷமிதாப்’ படங்களுக்குப் பிறகு ‘அடுத்து எந்த இந்தி படத்தில் நடிக்கிறீர்கள்?’ என அனைவரும் கேட்க, ஹாலிவுட்டை கைகாட்டியிருக்கிறார் தனுஷ். `The Extraordinary Journey Of the Fakir Who Got Trapped In The Ikea Cupboard’ - இதுதான் தனுஷ் நடிக்க இருக்கும் ஹாலிவுட் படத்தின் பெயர். ரோமின் ப்ரியூடோலஸ் எழுதிய பிரெஞ்சு நாவலின் திரைவடிவம்தான் இது. மார்ஜேன் சட்ரபி இயக்கும் இந்தப் படத்தில், தனுஷுடன் 45 வயதான பிரபல ஹாலிவுட் நடிகை உமா துர்மன் நடிக்கிறார்!

பிட்ஸ் பிரேக்

கன்னட சினிமாவின் மாஸ்டர் பீஸ் சினிமா ‘லூசியா’  இயக்குநர் பவன் குமார் இஸ் பேக். ‘என் மகள் லூசியை பள்ளியில் இறக்கிவிட்டு வரும்போது, டிராஃபிக்கில் மூன்று மணி நேரம் மாட்டிக்கொண்டேன். அப்போது தோன்றிய ஸ்கிரிப்ட்தான் யு-டேர்ன்’ என்கிறார் பவன். ஒரு பாலத்தில் நடக்கும் மர்மமான சம்பவம் பற்றி போலீஸிடம் விவரிக்கிறார் பெண் நிருபர். அது என்ன சம்பவம், அவர் சொல்வதை எல்லோரும் நம்புகிறார்களா, அந்தச் சம்பவத்தின் பின்னணியைக் கண்டுபிடித்தாரா... என ஒரு பெண்ணைச் சுற்றி நடக்கும் த்ரில்லரே படத்தின் ஒன்லைன். ட்ரெய்லர் ரிலீஸான முதல் நாளிலேயே பல ஆயிரம் ஹிட்ஸ் அள்ளியிருக்கிறது.

பிட்ஸ் பிரேக்

ஹாலிவுட் என்ட்ரிக்கு பரபரவெனத் தயாராகிறார் தீபிகா படுகோன். `XXX: The Return of Xander Cage' படத்தில் வின் டீசலுடன் இணைந்து நடிக்கும் தீபிகா, பிப்ரவரி முதல் ஷூட்டிங்கில் இணைகிறார். தீவிர உடற்பயிற்சியில் இருக்கும் தீபிகாவின் வீடியோக்களை அவரது ட்ரெய்னர் இன்ஸ்டாகிராமில் வெளியிட, தீபிகாவின் வொர்க்அவுட்ஸ் ட்ரெண்டிங் ஆனது. `எனக்கு இந்த வாய்ப்பு கொஞ்சம் நடுக்கத்தைத் தருகிறது.இருந்தாலும், இந்தப் படத்தில் நடிப்பது எனக்குப் பெருமை' என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் தீபிகா!