
“நான் முதலமைச்சரானால் நல்லது செய்வேன் மக்களே!”
“பெரியவனுக்கா... சின்னவனுக்கா தலைவரே?”
- சி.சாமிநாதன்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``வர்ற தேர்தல்ல தோத்துட்டா என்னய்யா ஆகும்?”
“உங்களை இன்னும் நிறைய வெச்சு செய்வாங்க தலைவரே!”
- பர்வீன் யூனுஸ்

``எங்கள் தலைவர் பேச ஆரம்பிக்கும் சமயத்தில், `பக்கத்து தெருவில் நக்மாவும் குஷ்புவும் சேர்ந்து வருகிறார்கள்’ என வதந்தி கிளப்பி, கூட்டத்தைக் கலைக்க நினைக்கும் விஷமிகளின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்!’’
- எஸ்.கோபாலன்

``நாம் விரும்பும் சென்னை...’’
``நம்மை விரும்பலை தலைவரே!’’
- அம்பைதேவா