
‘‘ `எனக்கு இன்னொரு பேர் இருக்கு’னு தலைவர் சொல்றாரே, அது என்ன பேரு?’’
‘‘ரெளடி!’’
- நா.புனிதவில்லி


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘‘சிம்புக்குப் பிரச்னைன்னா...’’
‘‘விடுங்க தலைவரே, உங்களுக்கு அதுபோல 1008 பிரச்னை!’’
- அ.இராஜப்பன்

‘‘தலைவரே, உங்களை பார்க்க சி.பி.ஐ வந்திருக்கு.’’
‘‘ ‘பார்க்க முடியாது’னு சொல்லு, அப்படியே `நாங்க சி.பி.எம்-மோடு கூட்டணி வைக்கப்போறோம்’னும் சொல்லு!’’
- வி.சாரதிடேச்சு

‘‘ `மரியாதையா கூட்டணிக்கு வரணும்'னு அந்தக் கட்சித் தலைவர்கிட்ட சொல்லியிருக்கேன்’’
‘‘கொன்னுட்டீங்க தலைவரே!’’
‘‘அது, அவர் வரலைன்னா...’’
- எம்.மிக்கேல்ராஜ்