Published:Updated:

க்ரைம்... த்ரில்... ஆக்‌ஷன்!

க்ரைம்... த்ரில்... ஆக்‌ஷன்!
பிரீமியம் ஸ்டோரி
க்ரைம்... த்ரில்... ஆக்‌ஷன்!

க்ரைம்... த்ரில்... ஆக்‌ஷன்!

க்ரைம்... த்ரில்... ஆக்‌ஷன்!

க்ரைம்... த்ரில்... ஆக்‌ஷன்!

Published:Updated:
க்ரைம்... த்ரில்... ஆக்‌ஷன்!
பிரீமியம் ஸ்டோரி
க்ரைம்... த்ரில்... ஆக்‌ஷன்!

‘‘பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட்னு பட்ஜெட்டை மனசுல வெச்சு படங்கள் பண்றது கிடையாது. நல்ல படம் பண்ணணும், அவ்வளவுதான். ஏன்னா... சினிமா ஜெயிக்கிறது, பட்ஜெட்ல இல்லை; அதோட கன்டென்ட்ல தான்’’ - தெளிவாகப் பேசும் அருள்நிதி, ‘ஆறாது சினம்’ என ஆக்‌ஷன் அவதாரத்துடன் வருகிறார்.

‘‘ ‘டிமான்டி காலனி’ முடிச்சதும், ‘அடுத்து ஒரு நல்ல கதை அமைஞ்சா சேர்ந்து பண்ணுவோம்’னு தயாரிப்பாளர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி சாரும் நானும் பேசிட்டு இருந்தோம். அப்ப, ` ‘மெமரீஸ்’னு ஒரு மலையாளப் படத்தின் ரைட்ஸ் என்கிட்ட இருக்கு. படத்தைப் பாருங்க. உங்களுக்குப் பிடிச்சிருந்தா பண்ணலாம்’னு சொன்னார். பார்த்தேன்... தொடர் கொலைகள், கொலையாளி யார்னு செதுக்கிவெச்ச மாதிரி அப்படி ஒரு பரபர க்ரைம் த்ரில்லர். யோசனையே இல்லாம ஒப்புக்கிட்டேன். அதுதான் இந்த ‘ஆறாது சினம்’. நிச்சயமா இது உங்களுக்குப் பிடிக்கும்.’’

‘‘உங்களின் உடல்வாகுக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் சரியாகப் பொருந்தும். அதில் என்ன ஸ்பெஷல்?’’

‘‘குடிகாரப் போலீஸ் அதிகாரி என்பதுதான் ஸ்பெஷல். கதையில் அதுக்கு ஒரு காரணம் இருக்கும். குடியை மறந்து அவன் மறுபடியும் வழக்கு, விசாரணை பக்கம் திரும்புவான். அது ஏன், எதுக்கு? அதில் வெற்றி அடைஞ்சானா... இல்லையா என்பதே கதை.

‘‘ரீமேக் செய்வது தவறு அல்ல. ஆனால், அது சவாலாயிற்றே. உங்கள் இயக்குநர் அறிவழகன், அதை எப்படிச் சமாளித்தார்?’’

‘‘அவர் இயக்கிய ‘வல்லினம்’ படம், நான் பண்ணவேண்டியது. அப்ப அமையலை. ‘அடுத்த படம் சேர்ந்து பண்றோம்’னு ஒவ்வொரு முறையும் பேசிப்போம். ஆனால், தள்ளிப்போய்க்கிட்டே இருந்தது. அந்தச் சமயத்துலதான், ‘இந்தப் படத்தை அறிவழகன் சார் பண்ணினால் நல்லா இருக்குமே’னு நினைச்சேன். ‘நானே அந்தப் படத்தை தமிழ்ல பண்ணணும்னு நினைச்சேன்ஜி. ஜீத்து ஜோசப்பின் ஒரிஜினல் கதையை டிஸ்டர்ப் பண்ணாம, அதன் அழகைக் கூட்டுறதுக்கு என்ன செய்யணுமோ அதை மட்டும் செஞ்சிருக்கார். அதுக்காக அச்சு அசல் காட்சிக்குக் காட்சி காப்பி அடிச்ச மாதிரியும் இல்லாம, தன் கிரியேட்டிவிட்டியைச் சேர்த்து அழகாக்கியிருக்கார்.’’

க்ரைம்... த்ரில்... ஆக்‌ஷன்!

‘‘ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தானு இரு ஹீரோயின்கள்... என்ன சொல்கிறார்கள்?’’

‘‘பொதுவா ஹீரோயின்ஸ், ‘படத்துல, எனக்கு எவ்வளவு சீன்ஸ் இருக்கும்; எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்’னு கேட்பாங்க. ஆனால், இவங்க ரெண்டு பேரும் ஸ்கிரிப்ட்ல உள்ள முக்கியத்துவத்துக்காக இதுல நடிக்கிறாங்க. ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’ படத்துலேயே தான் யார்னு நிரூபிச்சிட்டாங்க. இதுல ஒரு பொண்ணுக்கு அம்மாவா பண்றது பெரிய விஷயம். சிரிப்பு, அழுகை, வெட்கம்னு எதுவா இருந்தாலும் இயல்பா பண்ணிட்டுப் போயிட்டே இருக்காங்க. அதேபோல் ஐஸ்வர்யா தத்தாவுக்கும் முக்கியமான ரோல். கொஞ்சம் பெரிய டயலாக் பேசும்போது நமக்கே தடுமாறும். ஆனா இவங்களுக்கு மொழி பிரச்னையா இருந்தாலும், எவ்வளவு பெரிய டயலாக் கொடுத்தாலும் அசால்ட்டா பண்ணிடுறாங்க.’’

‘‘ராதாரவி, சார்லினு சீனியர்களும் இருக்கிறார்கள். சிரமம் இருந்ததா?’’

‘‘கதைப்படி ராதாரவி சார் என் நலம்விரும்பி. அதேபோல கேமராவுக்குப் பின்னாலும் என் நலம்விரும்பியே. அடிக்கடி ‘உன் படங்களை எல்லாம் வாட்ச் பண்ணிட்டுத்தான் இருக்கேன். நீயெல்லாம் நல்லா வரணும்ப்பா’னு சொல்வார்.  அதேபோல்தான் சார்லி சாரும். எங்க தயாரிப்புல அப்ப ‘கோபுரவாசலிலே’ படத்துல நடிச்சார். அதை, ‘உங்க அப்பா கம்பெனியில நடிச்சேன். இப்ப உன்கூட நடிக்கிறேன். ரொம்ப சந்தோஷம்’னு சொல்வார். பெரிய மனசுக்காரர்.’’

‘‘ஆக்‌ஷன் படத்தில் ரோபோ சங்கர்... காமெடி உண்டா?’’

‘‘படத்தில் ரோபோ சங்கரும் ஒரு போலீஸ் அதிகாரி. எனக்கும் அவருக்கும் ஈகோ க்ளாஷ் வந்துட்டே இருக்கும். எங்க ரெண்டு பேருக்குமான காம்பினேஷன் காட்சிகள்ல ரீடேக் போகாம எடுக்கிறது அவ்வளவு கஷ்டம். காரணம், ரோபோவின் கவுன்டர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்ரைம்... த்ரில்... ஆக்‌ஷன்!

ஒரு காட்சியில் நான் உயர் அதிகாரி ராதாரவி சாரிடம், ‘இந்த கேஸுக்கு எவிடென்ஸ் இருக்கு. இந்த ரெண்டு போட்டோக்கள்ல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது?’னு சொல்லிட்டு, அந்த ரெண்டு போட்டோக்களைப் புரியவைக்க மூணாவதா வேறு ஒரு போட்டோவைக் காட்டி, ‘இப்ப என்ன தெரியுது?’ம்பேன். அப்ப ரோபோ சங்கர் திடீர்னு ‘ம்... இப்ப மூணு போட்டோ தெரியுது’னு ஸ்கிரிப்ட்ல இல்லாத டயலாக்கைச் சொல்வார். ‘படத்தை சீரியஸா பார்ப்பாங்களா, இல்லை உங்க கவுன்டர் காமெடிக்குச் சிரிப்பாங்களா?’னு செமயா என்ஜாய் பண்ணுவோம். ரோபோவுக்கு எங்க டீமில் எல்லாரும் ரசிகர்கள்.’’

‘‘கல்யாண வாழ்க்கை எப்படிப் போய்க்கொண்டு இருக்கிறது... மனைவி என்ன சொல்கிறார்?’’

‘‘கல்யாணத்துக்குப் பிறகு நடிக்கும் முதல் படம். அவங்க என் சினிமா தொழிலை அடாப்ட் பண்ணிக்கிறதுக்கு, ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டப்பட்டாங்க; ஆனால் புரிஞ்சிக்கிட்டாங்க. அவங்களுக்கு ரொமான்ஸ் காட்சிகள் பிரச்னையே இல்லை. இதுல ‘தனிமையே தனிமையே...’னு செமையான ஒரு பாட்டு. அதை வீட்ல போட்டுக்காட்டினேன். சினிமாவாதான் பார்க்கிறாங்க. என் படங்கள்ல அவங்களுக்கு `மௌனகுரு’, `டிமான்டி காலனி’ பிடிச்ச படங்கள். இப்ப `ஆறாது சினம்’ அந்தப் பட்டியலில் சேரும். `காஸ்ட்யூமில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்க’னு சொல்லியிருக்காங்க. ‘வம்சம்’ தொடங்கி `டிமான்டி காலனி’ வரை நமக்கு அமையிற படங்கள் அப்படியிருக்கு. நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க.''
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism