Published:Updated:

பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

Published:Updated:
பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

 கலகல `கசின்ஸ் குரூப்'பில் ஆளுக்கு ஒரு எமோஷனல் என்கவுன்டர்.  `பெங்களூர் (டேஸ்) நாட்கள்’ ஆனதைத் தவிர்த்து, அப்படியே சுட்டுப்போட்ட அதே வட்ட ஜிலேபி!

ஜோசியப் பித்து பெற்றோரால் மணமகள் ஆகும் ஸ்ரீதிவ்யாவுக்கு, புகுந்த ஊர் பெங்களூரு. அம்மாவின் ஆசைக்காக பெங்களூரில் ஐடி  வேலைக்குப் போகிறார் பாபிசிம்ஹா. செல்ஃபி மேனியா ஆர்யாவும் இவர்களோடு பெங்களூரில் இணைய, ஜில் ஜங்காகப் போகும் கொண் டாட்டம், ஒரு கட்டத்தில் ஜக் ஆகி ஜெர்க் ஆகிறது. எல்லா சிக்கல்களும் சுகமாக முடிகிறது ஜிலீர் க்ளைமாக்ஸில்.

பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

நட்சத்திரங்களின் கொண்டாட்டத்தில், ஆர்யாவில் தொடங்கி பார்வதி வரை ரீலுக்கு ஒருவர் என்ட்ரி தருகிறார். சில நிமிட கேரக்டருக்கே சமந்தா. இவருக்கு அப்பா பிரகாஷ்ராஜ் என ஃப்ளாஷ்பேக் வரை கலர்ஃபுல் காஸ்ட்டிங். அத்தனை பேருக்குமான கேரக்டர் ஸ்கெட்ச்தான் காங்கிரீட் அடித்தளம்; அலட்டாமல் எப்போதும்போல் ‘`பாஸ்... பாஸ்...’’ என ஸ்மார்ட் பாயாகப் பாஸாகிறார் ஆர்யா. `அசால்ட் சேது' பாபி, படிய வாரிய தலையோடு அம்மாஞ்சிப் பையன் பாத்திரத்திலும் தேறுகிறார். ப்ளேஸர் போட்ட பல்வாள் தேவனாகவே ராணா. மொத்த படத்தையும் சுமக்க முடியாமல் தள்ளாடினாலும், அப்ளாஸ் அள்ளுகிறார் ஸ்ரீதிவ்யா. ஆனால், எல்லோரையும் ஓரங்கட்டி விக்டரி ஸ்மைல் கொடுப்பது என்னவோ பார்வதிதான்; “சமைக்கலையாம்மா?” எனக் கேட்கும் மகனிடம், “பீட்சா ஆர்டர் பண்ணிக்கடா” என, அமெரிக் காவுக்கு கூலிங் கிளாஸோடு  கிளம்பிப்போவது சரண்யாவின் இனிமை இன்னிங்ஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

`இது யாருடைய கதை, எங்கே போகிறது?' என ஐபேடில் நோட்ஸ் எடுக்கும் அளவுக்குப் திரைக்கதை முடிச்செல்லாம் குழப்பக் கும்பமேளா. நினைத்த நேரத்தில் நினைத்த பிரச்னையை எழுப்புவதும், அதை ஈஸியாக முடிப்பதும் என ஃபேன்டசியான சம்பவங்கள் செயற்கை.

கோபி சுந்தர் பின்னணியில் பிரமாதப்படுத் தினாலும், பாடல்களில் `நான் மாட்டிக் கொண்டேன்' மட்டும்தான் மனதோடு மாட்டிக்கொள்கிறது. கே.வி.குகனின் ஒளிப்பதிவில் பெங்களூரு குளிர். தீபாவளியை, கார்த்திகை தீபம் அளவுக்கு ரீமேக்கியிருக்கிறார் இயக்குநர் `பொம்மரில்லு' பாஸ்கர். இருந்தாலும், வாட்ஸ்அப்பில் `கலக்கல் கசின்ஸ்' என, புது குரூப் ஆரம்பித்து விடுவார்கள் ரசிகர்கள்.

- விகடன் விமர்சனக் குழு
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism