Published:Updated:

ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்!

ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்!

பா.ஜான்ஸன்

ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்!

பா.ஜான்ஸன்

Published:Updated:
ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்!

விரைவில் திரைக்கு வரவிருக்கும் சினிமாக்களின், க்யூட் அண்ட் ஷார்ட் காதல் `கட்'கள் இங்கே..

ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்!


இயக்குநர்: பிரசாந்த்

காட்சி: காதல் கடிதத்தில் புதுமை காட்டும் நாயகன்.

கதாபாத்திரங்கள்: புரூஸ் லீ (ஜி.வி.பிரகாஷ்), சரோஜா (க்ரித்தி).

புரூஸ் லீ, கையில் லவ் லெட்டரோடு தினமும் சரோஜாவை ஃபாலோ செய்கிறான். ஆனால், ஒருநாள்கூட லெட்டரைக் கொடுக்கவில்லை.

புரூஸ் லீ, ஒருநாள் யாரும் இல்லாத இடத்தில் சரோஜாவின் பின்னாடியே செல்ல, அவள் அவனைக் கவனித்துவிட்டு திடீரென நிற்கிறாள். அவன் பயந்து திரும்பிக்கொள்கிறான். அவள், அவனை நோக்கி நடக்கிறாள். அதைக் கவனித்த அவன், அங்கு இருந்து எஸ்கேப் ஆக நினைக்க, அவள் ஓடி வந்து அவனைக் கழுத்தோடு பிடிக்கிறாள்.

சரோஜா: என்னடா வேணும் உனக்கு?

புரூஸ் லீ:
ஏங்க விடுங்க... ப்ளீஸ்... விடுங்க வலிக்குதுங்க.

சரோஜா: லவ் லெட்டரா? இனிமே டெய்லியும் நீ எனக்கு ஒரு லெட்டர் கொண்டுவந்து தர்ற.

புரூஸ் லீ: குடுத்தா படிப்பீங்களா?

சரோஜா: ம்ம்ம்... கிழிப்பேன்.

எனச் சொல்லி, லெட்டரைக் கிழிக்கிறாள்.

புரூஸ் லீ தினமும் அவளிடம் லெட்டரைத் தர, அவளும் கிழித்துப் போடுகிறாள். வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு கெட்டப்புகளில் சோகமாக வந்து லெட்டர் தர, அவள் லெட்டரைப் பார்க்காமலேயே கிழித்துக் கிழித்துப் போடுகிறாள்.

அப்படி ஒருநாள், அவளிடம் வந்து முகத்தை `உம்' என வைத்துக்கொண்டு லெட்டரைத் தருகிறான். சரோஜா, புரூஸ் லீயின் கண்களைப் பார்த்துக்கொண்டே லெட்டரை வாங்குகிறாள்; கிழிக்க முயற்சி செய்கிறாள். ஆனால் முடியவில்லை. அப்போதுதான் லெட்டரைக் குனிந்து பார்க்கிறாள். அது லேமினேஷன் செய்யப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து அவள் சிரிக்கிறாள்; அவனும் சிரிக்கிறான். இருவருக்குள் காதல் வளரத் தொடங்குகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்!

இயக்குநர்: ரஞ்ஜித் ஜெயக்கொடி

காட்சி: சொல்லாததும் காதலே.

இடம் / காலம்: மீராவின் அப்பார்ட்மென்ட் / நள்ளிரவு.

கதாபாத்திரங்கள்:
கதிர் (விஜய் சேதுபதி), மீரா (காயத்ரி).

நள்ளிரவு, அப்பார்ட்மென்ட் கேட் வாசலில் பைக்கில் மீராவை இறக்கிவிடுகிறான் கதிர்.

மீரா: bye கதிர்.

கதிர், பைக்கில் இருந்து இறங்கியபடி

கதிர்: மீரா...

மீரா, `என்ன?' என்பதைப்போல திரும்பிப் பார்க்கிறாள்.

கதிர்: (வழிந்தபடி) நான் வேணா... ஃப்ளாட் வரைக்கும் வந்து டிராப் பண்ணவா?

மீரா: (ஏதோ புரிந்தவள்போல் சிரித்தபடி) இது என் ஃப்ளாட்தான் கதிர். நான் போய்க்கிறேன்.

கதிர்: (சமாளித்தவனாக) ஒரு காபி?

மீரா : (அவன் குழைவதை ரசித்தபடி) காலையில சாப்பிடலாம், இப்ப நீ கிளம்பு.

[கஜல் இசையில், மெல்லியச் சத்தத்தில் `சில நாழிகைகூட உன்னைப் பிரியவே மனமும் தவிக்குதே ஏனடி... ஏனடி?...' பாடல் ஒலிக்கிறது.]

கதிர்: (எச்சரிப்பதுபோல்) போயிடுவேன்!

மீரா: (புன்னகையுடன் அலட்சியமாக) போ...

கதிர்: (போலியான கோபத்துடன்) உன்னை எனக்குப் பிடிக்கல, bye.

என, பைக் இக்னீஷியனை உசுப்புகிறான். அவன் கிளம்ப, மீரா அவசரமாக...

மீரா: கதிர்... ஒரு நிமிஷம்.

கதிர்: சொல்லு மீரா.

அவள் தயங்கியபடி மெள்ள அருகில் வந்து பைக் மீது கை வைத்து, அவன் முகத்தைப் பார்த்தவாறு...

மீரா: நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.

கதிர் `என்ன?' என்பதைப்போல் பார்க்கிறான். மீரா தயங்க, அவளைப் புரிந்துகொள்ளும் கதிர், அவள் கைகளைப் பிடித்து, தன் கைளுக்குள் வைக்கிறான்.

கதிர்: (மெல்லிய குரலில்) நீ ஒண்ணும் சொல்லவேணாம் மீரா. சொல்லாம இருக்கிறதுதான் நல்லா இருக்கு.

மீரா புன்னகையுடன் தலையாட்ட, கதிர் கிளம்புகிறான். பின்புலப் பாடல். (சில நாழிகைகூட உன்னைப் பிரியவே மனமும் தவிக்குதே.)

ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்!

இயக்குநர்: டி.என்.சந்தோஷ்

காட்சி: கௌதம், தான் வசதியானவன் எனப் பொய் சொல்லிப் பழகியது அனுவுக்குத் தெரியவர, `கௌதமின் காதல் வேண்டாம்' என அனுவின் தோழிகள் அவளுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.
இடம் / காலம்: மீடியா அலுவலகம்.

கதாபாத்திரங்கள்: கௌதம் (அதர்வா), அனு (கேத்தரின் தெரசா) மற்றும் அனுவின் தோழிகள்.

தோழி 1: நேத்திக்கு கௌதம் இங்க வந்திருந்தானாமே... நீ அவனைப் பார்த்தியா?

அனு: இல்லை.

தோழி 1: என்ன முடிவு பண்ணியிருக்க?
 
அனு: தெரியலை, ஒரே குழப்பமா இருக்கு.

தோழி 1: இதுல என்ன கன்ஃபியூஷன்?

நீ இந்த சேனல் ஓனரோட ஒரே பொண்ணு. ஆனா, அவன் உன்கிட்ட வேலைபார்க்கிற, சாதாரண ஒரு ரிப்போர்ட்டர்.

தோழி 2:
பேசாம, தூக்கிப்போடுடி அவனை.

தோழி 3: கௌதம் எங்களுக்கும் ஃப்ரெண்டுதான், இல்லைன்னு சொல்லலை. அதுக்காக, நாம அவனுக்கு ஹெல்ப் பண்ணலாம்; லவ் பண்ண முடியாது.

தோழி 4:
கொஞ்சம் செல்ஃபிஷா யோசிச்சு முடிவுபண்ணுடி. அதுதான் உனக்கு சேஃப்.

அனு: கரெக்ட்.

தோழிகள் அனைவரும்: ஹே... லெட்ஸ் ஹேவ் எ பிரேக்அப் பார்ட்டி.

தோழிகள் அனைவரும் கொண்டாட்டத்துக்குத் தயாராகிறார்கள். கௌதம், அவர்களைப் பின்னால் இருந்து பார்த்தபடி நிற்கிறான்.

அதைப் பார்க்கும் தோழிகள் அதிர்கிறார்கள்.

அனு: பார்த்தியா கௌதம், உன்கூட இருக்கிறவங்களே, உன்னை வேண்டாம்னு சொல்றாங்க. ஏன் தெரியுமா? உன்னைச் சுத்தி பிரச்னை மட்டும்தான் இருக்கு. அதனாலதான் எல்லாரும் உன்னை அவாய்ட் பண்றாங்க.

தோழி 1: ஹே... பார்ட்டி கன்ஃபார்ம்டி! (மற்ற தோழிகளிடம் சொல்கிறாள்)

அனு: ஆனா, இப்பத்தான் உனக்கு எல்லாருடைய சப்போர்ட்டும் தேவை. முக்கியமா, என் சப்போர்ட். ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலினு யார் என்ன சொன்னாலும் சரி, கடைசி வரைக்கும் உன்கூட இருக்கிறதா நான் முடிவுபண்ணிட்டேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?

தோழி 3: என்னடி இவ இப்டி சொல்றா?

தோழி 2: `இந்தப் பொண்ணுங்களையே நம்பக் கூடாது'னு, பாய்ஸ் சும்மாவா சொல்றாங்க?

அனு, கௌதமுக்கு முத்தம் கொடுக்கிறாள்.

ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்!

இயக்குநர்: எழில்

இடம் / காலம்:
அர்ச்சனாவின் ஹோட்டல் / காலை.

கதாபாத்திரங்கள்:
முருகன் (விஷ்ணு விஷால்), அர்ச்சனா (நிக்கி கல்ராணி).

காட்சி: அர்ச்சனாவை வம்புக்கு இழுக்க, அவளுடைய ஹோட்டலுக்குச் செல்கிறான் முருகன்.

ஹோட்டலில் சாமி கும்பிட்டு, கல்லாவில் அமர்கிறாள் அர்ச்சனா. முருகன், அர்ச்சனாவைப் பார்த்தவாறே தன் நண்பர்களுடன் ஹோட்டலுக்குள் நுழைந்து, தூரத்தில் அமர்ந்தபடி அர்ச்சனாவை சைட் அடிக்கிறான். முருகனின் நண்பன் குமார், கானா பாட ஆரம்பிக்கிறான்.

குமார்
: ஃபிகர் ஒன்றைப் பார்த்தாய் பின்னாலேயே போனாய்... அவ உன்னைப் பார்க்கவில்லை. ஹோய்..!

அர்ச்சனா: (டென்ஷனில்) “மணி...” என்று கத்த, `சர்வர்' மணி ஓடி வந்து இட்லி தட்டுகளை வைக்கிறார்.

முருகன்: இட்லி வேண்டாம்... தோசை இருக்கா?

மணி: கல்லு சூடு இல்லை சார், அரை மணி நேரம் ஆகும்.

முருகன்: பரோட்டா?

மணி: பரோட்டா ஈவ்னிங்தான் சார் போடுவோம்.

முருகன்: அப்ப பரோட்டாவே கொண்டு வா. நாங்க வெயிட் பண்றோம்.

மணி டென்ஷனாக நகர,

அர்ச்சனா: மணி, என்னவாம் அவங்களுக்கு?

மணி: அவங்களைப் பார்த்தா சாப்பிட வந்த மாதிரி தெரியலை.

என்று நகர்கிறான். டென்ஷனான அர்ச்சனா கோபத்தில் எழ, அர்ச்சனாவின் அப்பா அங்கு வருகிறார். 
அர்ச்சனாவின் அப்பா: கஸ்டமரைப் பகைச்சிக்கக் கூடாதும்மா.

என அவளைச் சமாதானப்படுத்துகிறார்.

முருகன்:
சரி... சரி. பரோட்டா கேன்சல்.

எனக் கூற, அர்ச்சனா முறைத்துப் பார்க்கிறாள். முருகன் குறும்பாகச் சிரிக்க, டூயட் ஆரம்பிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism