Published:Updated:

காத்திருப்பு

காத்திருப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
காத்திருப்பு

பா.ஜான்ஸன்

துபாய் சர்வதேசத் திரைப்பட விழாவில் லைக்ஸ் வாங்கியிருக்கிறது, `வெயிட்டிங்' இந்தி படம். இது, `லண்டன், பாரிஸ், நியூயார்க்' படத்தின் இயக்குநர் அனு மேனனின் இரண்டாவது படம். நஸீருதின் ஷாவும் கல்கி கோச்சலினும் முக்கியமான கதாபாத்திரங்கள்.

பேராசிரியர் ஷிவ் நட்ராஜ் (நஸீருதின் ஷா), எட்டு மாதங்களாக கோமாவில் இருக்கும் தன் மனைவி பங்கஜா (சுஹாசினி மணிரத்னம்) மீண்டு வருவாள் எனக் காத்திருக்கிறார். அதே மருத்துவ மனையில் தாரா கபூரும் (கல்கி கோச்சலின்), விபத்து ஒன்றில் அடிபட்டு கோமாவுக்குச் சென்றுவிட்ட தன் கணவன் ரஜத் (அர்ஜுன் மதுர்) குணமாவதற்காகக் காத்திருக்கிறாள். இந்த இருவரும் சந்தித்துக்கொண்ட பின்னர் நடக்கும் நிகழ்வுகளே ‘வெயிட்டிங்’.

படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களான நஸீருதினும் கல்கியும் இரண்டு எக்ஸ்ட்ரீம் வயதுக்காரர்கள். முதுமையில் நஸீருதின். புதிதாக மணமுடித்து, கணவன் கோமாவில் இருந்து வந்த பின்னர் புதிய வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் கல்கி. இந்த இருவரும் சந்தித்துக்கொண்ட பின்னர் அவர்களுக்குள்ளான உரையாடல்களாக நகர்கிறது கதை. அந்த உரையாடல் அவர்களை எந்தவிதமான உறவுக்குள்ளும் அழைத்துச் செல்லவில்லை. தனிமையில் இருந்து மீட்கும் சக உயிராக மட்டுமே காட்சிப்படுத்துவது, படத்தின் க்ளாஸிக் ப்ளஸ்.

காத்திருப்பு

மனைவியின் உடல்நலன் எவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை, படித்த மருத்துவ இதழ்களில் இருந்து கேள்விகளாக  டாக்டரிடம் கேட்டு, குடைச்சல் கொடுக்கிறார் நஸீருதின். தன் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது, அடுத்து என்ன என்ற அதிர்ச்சியில் இருக்கிறார் கல்கி. இருவரின் உணர்வுகளாக விரியும் கதை, இருவரும் சந்தித்துப் பேச ஆரம்பித்ததும், தலைமுறை இடைவெளியைப் பற்றி பேசும்போது ஈர்க்கிறது அனு மேனனின் திரைக்கதை.

‘ஆமா, இந்த ட்விட்டர்னா என்ன?’ என நஸீருதினும், அவர் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் கல்கியும் நடிப்பில் அசர வைத்திருக்கிறார்கள். கடைசியில் இருவரின் துணையும் கோமாவில் இருந்து மீண்டு வந்தார்களா? நஸீருதின் - கல்கியின் நட்பு என்ன ஆகிறது? வெயிட்...  ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகிறது ‘வெயிட்டிங்’.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz