Published:Updated:

லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள்

லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள்

Published:Updated:
லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

காதலர் தினத்துல லவ்வர் பாய் யார்... ட்ரீம் கேர்ள் யார்னு தெரிஞ்சுக்காம இருந்தா எப்படி பாஸ்?

லவ்வர் பாய்

`லவ்வர் பாய், ட்ரீம் கேர்ள் சர்வே'னு சொன்னதும்  `நான், நீ'னு போட்டி போட்டுக்கிட்டு வர்ற பொண்ணுங்களையும் பையன்களையும் பார்க்கும் போது, `இவ்ளோ நாளா நீங்க எல்லாம் எங்கய்யா ஒளிஞ்சிருந்தீங்க?'னுதான்  கேட்கத் தோணுது. கடந்த வருடம் லவ்வர் பாய் ஆர்யா, ட்ரீம் கேர்ள்  ஸ்ரீதிவ்யா எனத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த வருடம் யார், யார்?

தமிழ்நாடு முழுக்க 3,601 கல்லூரி மாணவர்களிடமும், 3,688 கல்லூரி மாணவிகளிடமும் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் இவை. திருமணம் ஆன நடிகர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற முடியாததால் பல இளம் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இல்லை. 

முதலில் கல்லூரி மாணவிகளிடம், `` `லவ்வர் பாய்' செலெக்ட் பண்ணுங்க?'' என சர்வே ஷீட்டை நீட்டினோம். சிலர் கண்களை மூடிக்கொண்டு தங்கள் ஆதர்ச ஹீரோவை டிக் அடிக்க, பலர் கண்ணும் கருத்துமாக ஆலோசனை செய்தார்கள். சில மாணவிகள், `என்னங்க, ஒரே போரிங்கா இருக்கு!' என `போர்'க்கு சொன்ன லாஜிக்தான் முக்கியம். `ஹீரோயின் மட்டும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுசுப் புதுசா வர்றாங்க. ஆனா, ஹீரோக்கள் அதே பழைய முகங்களைக் காட்டி ஏமாத்துறீங்களே ப்ரோ' என ஹீரோ பஞ்சத்தைத் தீர்க்க, கோடம்பாக்கத்துக்குப் பெட்டிஷன் போட்டார்கள். இருந்தாலும் கொடுத்த சாய்ஸில் இளம் பெண்களின் மனம் கவர்ந்த காதல் மன்னனாக இடம்பிடித்தவர், அதர்வா. கடந்த ஆண்டு ‘லவ்வர் பாய்’ பட்டம் வென்ற ஆர்யாவை இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட்டு முதலிடம் பிடித்துவிட்டார் அதர்வா.

லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

`பரதேசி'-யில் `நியாயமாரே...' எனக் கதறித் துடித்துக் கதற விட்டவர், `சண்டிவீரன்', `ஈட்டி' என அடுத்தடுத்த படங்களில் செம ஃபிட், செம ஸ்டைலிஷ் ஆக மாறி, பெண்களின் ஃபேவரிட்டாக மாறிவிட்டார். ``ஹோம்லி ஹீரோ, செம ஸ்மார்ட், சிக்ஸ் பேக் வேற'' எனக் கண்ணடித்துச் சிரிக்கிறார்கள் அதர்வா ரசிக கோடிகள். ``அவர் கன்னத்துல குழி விழும் பாருங்க. செமயா இருக்கும். இப்ப இருக்கும் எந்த ஹீரோவுக்கும் இல்லாத ஸ்பெஷல் அது” என அதர்வா ஸ்பெஷல் சொல்கிறார் சென்னை மாணவி அபி. `` `அலுங்குறேன்... குலுங்குறேன்...' பாட்டு ஒண்ணு போதுங்க அவரை செலெக்ட் பண்ண. அந்தப் பாட்டுல வர்ற மாதிரி எங்களையும்  எங்க பாய் ஃப்ரெண்ட் தோள்ல தூக்கிட்டுப் போகணும்” எனக் குஷியாகிறார் மதுரை ப்ரியா. இப்படியாக, 34.16 சதவிகிதம் ஓட்டுகளைப் பெற்று சக்சஸ் கோட்டைத் தொட்டுவிட்டார் இந்தச் சண்டிவீரன்.

இரண்டாவது இடத்தில் இருந்தாலும் ஆர்யாவின் மவுசு கொஞ்சமும் குறையவில்லை. “அவரை மாதிரி சிரிச்சுக்கிட்டே இருக்கணும். எதையுமே ஜாலியா எடுத்துக்கிற பையனைத்தான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்'' என்று சொல்லும் பல பெண்களுக்கு, ஆர்யா நடித்த `ராஜா ராணி', `மதராசபட்டினம்', `பாஸ் என்கிற பாஸ்கரன்'தான் ஃபேவரிட் படங்கள். சாக்லேட் பாய் இமேஜ் ஆர்யாவிடம் இன்னும் அப்படியே இருக்கிறது. சீக்கிரம் பழைய ஃபார்முக்கு வாங்க பாஸு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

போன வருடம் இரண்டாம் இடத்தில் இருந்த ஜெய், இந்த வருடம் மூன்றாம் இடத்துக்குப் பின்னேறி இருக்கிறார். அப்பாவித்தனமான இவரது `ராஜா ராணி' நடிப்பை, பெண்கள் இன்னும் மறக்கவில்லை. “அவரோட வாய்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று சொல்லி வாக்களித்த ரசிகைகளும் உண்டு.

பல முன்னணி நடிகர்களையே பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தைப் பிடித்துவிட்டார் அசோக் செல்வன். `ஆரஞ்சு மிட்டாய்', `சவாலே சமாளி', `144' என, கடந்த ஆண்டு இவர் நடித்து ரிலீஸான மூன்று படங்கள், வசூலைக் குவித்ததோ இல்லையோ, இவருக்கு ரசிகைகளைக் குவித்திருக்கின்றன. `நம்ம ஏரியா பையன் லுக்' இவரது பலம். “ரொம்ப அமைதியான, நல்ல பையன் லுக்தான் அவர்கிட்டப் பிடிச்சது” என்கிறார்கள் திருச்சி பெண்கள்.

பல்வால் தேவனுக்கும் லவ்வர் பாய் இமேஜ் உண்டு என நிரூபித்துவிட்டார் ராணா. அஜித்துடன் `ஆரம்பம்' படத்தில் தமிழில் அறிமுகமானாலும் `பாகுபலி'யில் வீரவாள் சுழற்றி பெண்கள் மனதைக் கொள்ளைகொண்டிருக்கும் ராணா, ஐந்தாவது இடத்தைப் பிடிக்கிறார். பீப் சாங் பாடி, தனக்கு இருந்த இமேஜை டேமேஜ் செய்துகொண்டார் சிம்பு. சர்வே ஷீட்டில் சிம்பு பெயரைப் பார்த்ததுமே திட்டித்தீர்த்தனர் பல பெண்கள். ``இருந்தாலும் சிம்பு, சிம்புதான். நாங்க எப்பவும் அவருக்கு ஃபேன்தான்'' என்று சொன்ன பெண்களும் உண்டு.

லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

“நானும் கறுப்பு அவரும் கறுப்பு. அதனால், என் ஓட்டு அவருக்குத்தான்” என்று ‘கறுப்புப் பேரழகன்’ பட்டத்தோடு 5.34 சதவிகித ஓட்டுகளைப் பெற்றுள்ளார் விஷால். கடந்த ஆண்டு ஏழாவது இடத்தில் இருந்த கெளதம் கார்த்திக், இந்த முறை எட்டாவது இடத்தில். ``இன்னமும் கொஞ்சம் நல்ல படங்களாக செலெக்ட் பண்ணுங்கஜி'' என நம்பிக்கை தருகிறார்கள் கெளதம் ரசிகைகள். `அட்டகத்தி' தினேஷ் கடந்த ஆண்டு ஒன்பதாவது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டும் அதே இடம். `கிருமி' படத்தில் முரட்டு உடம்புடன் களம் இறங்கிய கதிர், பத்தாவது இடத்துடன், லவ்வர் பாய் வண்டியில் ஏறுகிறார். 

பட்டியலிலேயே இல்லாத துல்கர் சல்மான், நிவின் பாலி, சித்தார்த், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு... எனப் பல பெயர்களை தாங்களாகவே எழுதி டிக் அடித்துக் கொடுத்தது சர்வேயின் சைட் டிஷ் ஹிஸ்டரி.
 
ட்ரீம் கேர்ள்

``ஒருத்தரை மட்டும் எப்படி பாஸ் ட்ரீம் கேர்ளா சொல்ல முடியும்? கீர்த்தி சுரேஷின் க்யூட் சிரிப்புப் பிடிக்கும். `ஊதாக்கலர் ரிப்பன்' ஸ்ரீதிவ்யாவை இன்னும் மறக்க முடியலை. நயன்தாராவை எப்படி பாஸ் விட்டுக்கொடுக்க முடியும்?'' என்று பஞ்சாயத்து செய்தவர்கள் 26.6 சதவிகித வாக்குகளுடன் `ட்ரீம் கேர்ள்' பட்டத்தைக் கொடுத்தது,  நயன்தாராவுக்கு.

`தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே...' என உருகிமருகி நயனுக்கு ஓட்டு போடுகிறார்கள். `ராஜா ராணி' படத்தில் ரொமான்டிக் ஹீரோயின் ரூட் பிடித்து அப்டேட் வெர்ஷன் எடுத்தவர், `நானும் ரெளடிதான்' படத்தில் `காதும்மா'வாக லைக்ஸ் குவித்தார். சென்னையைச் சேர்ந்த சுரேஷ், ``நானும் ரெளடிதான்' படத்துக்காகவே நான் நயனுக்கு வாழ்நாள் ரசிகனாக இருப்பேன்'' என பாடிகார்டு முனீஸ்வரன் கோயில் வாசலில் வைத்து சத்தியம் செய்கிறார். ட்ரீம் கேர்ள் நயன்... ஆர் யூ ஓ.கே பேபி?

லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

`ட்ரீம் கேர்ள்’ பட்டியலில் புது வரவான, கீர்த்தி சுரேஷ் இரண்டே படத்தில் நடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டார். “பக்கத்து வீட்டுப் பொண்ணு லுக் அவங்ககிட்ட இருக்கு” என டிக் அடிக்கிறார்கள் இளைஞர்கள்.           ```ரஜினிமுருகன்' ரொமான்ஸ் சீன் ஹிட் அடிக்க காரணம், கீர்த்தியோட க்யூட்னஸ்தான்'' என்ற சேலம் சுரேஷ், சர்வே ஷீட்டின் பின் பக்கம் கீர்த்திக்காக ஒரு கவிதையும் எழுதித் தந்தார். 

மூன்றாவது இடத்துக்குக் கடும் போட்டி. ஸ்ரீதிவ்யா பெற்றது 11.86 சதவிகிதம் ஓட்டு. சமந்தா வாங்கியதோ 11.89 சதவிகிதம். 0.3 சதவிகிதம் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டார் சமந்தா. ``அவங்க சிரிப்பு எல்லாம் சான்ஸே இல்லை. செம க்யூட்ல'' என்று கமென்ட் கொடுக்கிறார் ஒரு சென்னை ட்யூட். ``பக்கா பல்லாவரம் பொண்ணு. அழகும் நடிப்பும் சேர்ந்த தேவதை அவங்க'' என்று பூரிக்கிறார்கள் சமந்தா ரசிகர்கள்.

போன வருடம் முதல் இடத்தில் இருந்து சரசரவெனச் சரிந்து நான்காவது இடத்துக்கு வந்துவிட்டார் ஸ்ரீதிவ்யா. ``உம்முனு இருந்தாக்கூட அழகா தெரியுது பொண்ணு” என்பது பையன்கள் தரும் கமென்ட்.  `வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `ஈட்டி' என கிராஃப் ஏறும் ஸ்ரீதிவ்யாவுக்கு ஏற்ற ஜோடி சிவகார்த்திகேயன் என்பது ரசிகர் சாய்ஸ்.

லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

க்யூட் ஸ்மைலி கொடுத்தே ரசிகர்களை ம்யூட் செய்யும் ஹன்சிகா 6.8 சதவிகிதம் ஓட்டுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். `அவங்க எல்லா படங்கள்லயும் ஒரே மாதிரி நடிக்கலாம். ஆனா, ஹன்ஸிகாவைப் பிடிக்கிறது நடிப்புக்காக இல்லை; அவங்க சிரிப்புக்காக' எனக் கண்ணடித்துக்கொண்டு டிக் அடிக்கிறார் கோவை பிரசன்னா.
 
போன முறை பத்தாவது இடத்தைப் பிடித்த கேத்ரின் தெரசாவுக்கு, இந்த முறை கிடைத்திருப்பதோ ஆறாவது இடம். `மெட்ராஸ்', `கதகளி' என இரண்டே படங்களில் இவரது  காதல் சீன்களுக்காகவே டிக் அடித்திருக்கிறார்கள். ``தெரசா, கொஞ்சம் கெத்தா இருக்காங்க. பொண்ணுன்னா அப்படித்தான் இருக்கணும்'' என்கிறார் தூத்துக்குடி பாலு.

லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

`லவ்லி மாடல், செம கலர்' என மெர்சல் செய்கிறார்கள் ஏமி ஜாக்சன் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் கிளாமர் ஏரியாவை குத்தகைக்கு எடுத்திருக்கும் ஏமிக்குக் கிடைத்திருப்பது ஏழாவது இடம். ``தமிழ்ப் படங்களுக்கு இந்த மாதிரி ஃபாரின் பொண்ணும் அவசியம் வேணுங்க'' என்கிறார்கள் ஏமி ஃபேன்ஸ்.
 
ஸ்ருதிஹாசன் எட்டாவது இடத்தைப் பிடிக்க, குண்டு கண்ணு லட்சுமி மேனனுக்குக் கிடைத்திருப்பது, ஒன்பதாவது இடம். `பாகுபலி'யில் கொஞ்சம் கிளாமர் + கொஞ்சம் வீரம் என கெத்து காட்டிய தமன்னா, 10-வது இடம் பிடித்து ட்ரீம் கேர்ள் பட்டியலில் இணைந்திருக்கிறார்.

நிறைய இளைஞர்கள், ``என்ன த்ரிஷாவைக் காணோம்? எங்க செலின்? மலர் டீச்சர் எக்கட போய்? மதி, உங்க ஆப்ஷன்லயே இல்லையே? அனுஷ்காவை மறந்துட்டீங்களே பாஸு... `கயல்' ஆனந்திக்கு ரசிகர்கள் இல்லைன்னு நினைச்சுட்டீங் களா? காஜல் லிஸ்ட்டில் இல்லாத காரணம் என்ன?'' எனக் கொதித்து எழுந்தார்கள்.

லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா
லவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா

ஹீரோயினும் ஹீரோவும் புதிது புதிதாக கோலிவுட்டுக்கு வந்தாலும், இளம் மனதில் இடம்பிடிப்பது யார் என்பதுதான் இருப்பதிலேயே சவால். அந்தச் சவாலில் சக்சஸ் ஆகியிருக்கும், `லவ்வர் பாய்' அதர்வாவுக்கும், `ட்ரீம் கேர்ள்'  நயன்தாராவுக்கும் வாழ்த்துகள்! மற்றவர்கள், அடுத்த சீஸனில் ஹிட் அடிக்க இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துகள்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism