Published:Updated:

பிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்!

பிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்!
பிரீமியம் ஸ்டோரி
பிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்!

விக்னேஷ்வரி, ஓவியம்: ஹாசிப்கான்

பிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்!

விக்னேஷ்வரி, ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
பிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்!
பிரீமியம் ஸ்டோரி
பிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்!

`உங்கலை விரும்பறென்’ என, காதலர் தினத்தன்று ஃபேஸ்புக்கில் தனிச்செய்தி ஒன்று தப்புத்தப்பாகக் கிடைக்கப் பெற்றேன். சின்ன சுவாரஸ்யமாக, அப்போது என் குழந்தைகள், கணவர் சகிதமாக நிற்கும் புகைப் படமே முகப்புப் படமாக இருந்தது.

`பாருங்க, அந்தப் படத்துல இருக்கிற குழந்தைகள் என்னுதுதான். அதாவது எனக்கு ஏற்கெனவே கல்யாணமாகிருச்சு’ என, சந்தூர் மம்மிபோல் வெட்கத்தோடு சொல்ல ஆரம்பித்தால், `இது காதல் இல்லை, நீங்க பயப்பட வேண்டாம். ஒரு மாதிரி க்ரஷ்னு வைங்களேன். கவனிச்சிருப் பீங்களே, நீங்க எதை எழுதினாலும் முதல் ஆளா லைக் போடுவேன்’ என்கிறார். எனக்கு ஏகக்கடுப்பு.
`இல்லைங்க. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. எனக்கு இதுக்கே நேரம் போதல’ என்றதும், சட்டென, `ஏங்க, அந்த ‘...’ பெண் ஐடி., உங்க தோழியா? அவங்களுக்கும் உடனே உடனே லைக் போட்ருவேங்க’ என்றார்.

வெளி உலத்துக்கு சற்றும் குறைவில்லாத சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது இணையம். இங்கேயும் நல்ல காதல், கள்ளக் காதல், டைம்பாஸ் காதல், ஷங்கர் டைப் பளபளக் காதல், பாலா டைப்பிலான `ஐயோ பாவ’க் காதல், கெளதம் மேனன் டைப் `ஸ்டைலிஷ்’ காதல் என எல்லாவிதமான காதல்களும் உண்டு. கூடுதல் சுவாரஸ்யமாக, இங்கே காதல் என்பது மற்றவர் பார்வையில் இரண்டு ஐடி-களுக்கு இடையே ஏற்படும் கஜகஜா. அவ்வளவு ஏன்... இங்கு காதலிப்பவர்களுக்குள் வரும் முதல் சந்தேகமே, `இவர் உண்மையிலேயே எதிர்பாலினம்தானா?' என்பதுதான். கிட்டத் தட்ட காதல்போல ஏதோ ஒன்று வந்து, நேரில் சந்தித்தப் பிறகு `நண்பர்களாக இருப்போம்’ என மனம் மாறும் ‘மாற்றி யோசி’கள் புழங்கும் இடம்.

என் தோழியும் யாரையோ காதலிப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். `எந்த ஐடி-யை' எனக் கண்டுபிடிப்பது எனக்கொன்றும் கஷ்டமாக இல்லை. அதற்கெல்லாம் ஐடியாவும் ஆட்களும் உண்டு. இருவருக்கும் நேரில் சந்தித்ததும் மனம் மாறிவிட்டது. காரணம், என்னென்னவோ சொன்னாள். எனக்குப் புரிந்தது ஒன்றுதான். முகப்புப் படத்துக்கும் நேரில் பார்த்த ஆளுக்கும் சம்பந்தம் இல்லையாம். பெரும்பாலான காதல் நட்பாவதும், நட்பு காதலாவதும் முகப்புப் படத்துக்கும் நேரில் இருப்பதற்குமான ஆறு வித்தியாசங்களில்தான்.

பிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்!

`பெண் ஐடி-யிடம் நம்பர் வாங்கிய பிறகுதான் எதையுமே சொல்ல முடியும்’ என சினிமா டாக்டர் போல சொன்ன நண்பனிடம், ‘அப்ப மட்டும் உனக்குப் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிடுமா?’ என்றேன். ‘அதான் வாட்ஸ்அப் இருக்குல்ல... அதில் அரை நாளுக்கு ஒருமுறை படத்தை மாற்றா விட்டால், `அது பெண்ணே இல்லை'னு முடிவு பண்ணிடுவேன்’ என்கிறான் தீர்மானமாக.

ஃபேஸ்புக்கில், கவிதைகளைக்கொண்டே  காதலை நிறுவுகிறார்கள். வெறும் நான்கு வரி பத்தியைப் பிரித்து உடைத்து எட்டு வரிகளில் எழுதுகையில், `இது கவிதைதானோ?!' என நம் ஞானம் மீதுதான் முதல் சந்தேகம் வருகிறது. ஆயினும், சில வஸ்துக்கள் பரிதாபகரமானவை. `காதலியை வர்ணிக்க நிலவைப் பயன்படுத்தலாம்' என எந்தப் புண்ணியவான் கண்டுபிடித்தானோ. `நீ நிலா... நான் வானம்’, `மஞ்சள் உடையில் வருமா நிலா - ஆச்சர்யக்குறி’, `நிலவுக்காவது கறை உள்ளது, நீ நிலவினும் தூய்மையானவள்’, `வானுக்குப் பொட்டு வைத்தால் அது நிலா... நிலவுக்குப் பொட்டு வைத்தால் அது நீ’ என சுமாராக ஐந்தாயிரம் நிலா கவிஞர்கள் முழு நேரமாகச் சுற்றிவருகிறார்கள்.

ட்விட்டர் வேறு விதம். இங்கே 140 எழுத்துக்களுக்குள் காதலைச் சொல்லியாக வேண்டும். #அவனதிகாரம், #அவளதிகாரம் என ஹேஷ்டேக்கில், தேடுவதற்கு எளிய முறையில் காதல் வரிகள் எழுதப்படுகின்றன. இங்கே காதல், யாவருக்குமானது. பாதி கண், அரை மூக்கு, தலைமுடியின் நுனி, புகை படர்ந்த படம்... என பெண் பெரிய மனது பண்ணிவைக்கும் முகப்புப் படம் பார்த்தே `தடால்' எனக் காதலில் விழும் அதிசயம் எல்லாம் நிகழும் இடம். `கண்களைத் திறந்துகொண்டு நான் கனவுகள் காண்கிறேன். கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்’ என `அவனதிகாரம்’ எழுதுகிறார்கள். `அட...’ என ஆச்சர்யப்பட்டுக்கொண்டே நாள் முழுவதும் அந்த வரியை ஓடவிட்டால், கூடவே ஒரு ட்யூனும் கிட்டுகிறது. `இது பிரபல சினிமா பாடல் அல்லவா? அதனால் என்ன, சினிமா பாடல்கள் பாடித்தானே நாயகிகளும் காதலிக் கிறார்கள்?’ எனக் குழம்பித் தெளிவானேன்.

பெரும்பாலான திரை, சின்னத்திரை பிரபலங்கள் ட்விட்டரில் இருக்கிறார்கள். காதலர் தினம் வந்தால், வாழ்த்துகளோடு மொத்தமாக முத்தத்தையும் பறக்கவிடுகிறார்கள். கடைக்கோடி ரசிகன், தனக்கே சொன்னதுபோல் கிறங்குகிறான். ரசிகையோ மோட்சமே பெறுகிறாள். அதிலும் காதலர் தினம் நெருங்க நெருங்க ஒரு மாதத்தில் எலெக்‌ஷனை எதிர்கொள்ளப்போகும் முன்னணிக் கட்சித் தொண்டனுக்கு இருக்கும் அதே பதற்றமான மனநிலையை இணைய இளைஞர்கள் அடைகிறார்கள். எப்போதும், தட்டில் அள்ளிப் போட்ட சாப்பாடு, சாப்பிட்டதுபோக மிச்சம் இருப்பது, எச்சில் இலை, பாதி குடித்த டீ... எனப் புகைப்படம் பகிர்ந்தே பெரியாளான ஐடி-கூட #அவளதிகாரம், அவன் - அதி - காரம் என, கபீம்குபாம் கவிதையில் இறங்குகிறது. மற்ற நாட்களில், அதிமுக்கிய இணைய வம்பான, ‘எந்த ஐடி-க்கும் எந்த ஐடி-க்கும் கசமுசா?’ எனக் கண்டுபிடிப்பதற்குள் தாவு தீருகிறது.

என் ட்விட்டர் தோழி எமகாதகி. எல்லா வம்புகளையும் விரல் நுனியில் வைத்திருப்பாள். `எப்படி இதை எல்லாம் கண்டுபிடிக்கிறாய்?' எனக் கேட்டதற்கு, ஏகப்பட்ட பிகு செய்தபின், கம்பெனி ரகசியத்தைப் போட்டு உடைத்தாள். சம்பந்தப்பட்டவரின் நேரக்கோட்டுக்குச் செல்ல வேண்டுமாம். அவர் யாரோடு அதிகம் பேசுகிறார் எனப் பார்த்தால் க்ளூ கிடைக்குமாம். அதிலும் ஸ்மைலியின் நீளம், மொக்கை பதிலையும் ரீட்வீட் செய்திருப்பது என நிறையச் சொல்கிறாள். குறிப்பாக, நிறையப் பேசிக்கொண்டிருக்கும் ஐடி-கள் திடீரென இணையத்தில் பேச்சை நிறுத்திவிட்டால், அவர்கள் அடுத்த கட்டமாக, `நம்பர் வாங்கி அலைபேசியில் பேச ஆரம்பித்து விட்டார்கள்’ என அர்த்தமாம். இப்படி ஓர் அறிவுக்கொழுந்தை நண்பியாகப் பெற்றிருக்கா விட்டால், என் பொது அறிவு எப்படி இருந்தி ருக்கும் என நினைக்கவே பயமாக இருந்தது.

மற்றுமொரு டெரரான ‘குரூப்’ இருக்கிறது. இதில் இடம்பெற சில விதிகள் இருக்கின்றன. பெண்களை, குறைவாகப் பின்தொடர்ந்து அல்லது `தொடரவே மாட்டோம்’ என சூளுரைத்து, காதலர் தினம் நெருங்குகையில், ‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ எனத் திட்டி எழுதவேண்டும். `ஹாஃப் பாயில்’ என்பது இந்த விஞ்ஞானிகள் `பெண்களுக்கு' வைத்த செல்லப்பெயர். ஒருநாள் அந்த குரூப்பில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்!

இருக்கும் நண்பர், அவர்களின் ரகசியம் சொன்னார். எந்தப் பெண் ஐடி-யுமே சீண்டாவிட்டால், பெண் ஐடி-யுடன் பேச பயப்படுவதுபோல் காட்டிக்கொள்ள வேண்டுமாம். போய் ஃபேஸ்புக் சுவரில் முட்டிக்கொண்டேன்.

இது ஒரு `நண்பேன்டா’ கதை. நம்ம ஆள் பெயர் செந்தில். (பெயர் மாற்றப்படவில்லை. அதனால் பாதகம் இல்லை. இணையத்தில் இருக்கும் ‘செந்தில்’களை வைத்து ஒரு தனிக்கட்சியே ஆரம்பித்துவிடலாம்.) ட்விட்டரில் அதர்வா டி.பி வைத்திருக்கிறான். பெரும்பாலான இணையப் ‘பிரபலங்கள்’ தொடர்கிறார்கள். மூன்று வருடங்களில் மொத்தம் ஐம்பதாயிரம் ட்வீட் போட்டிருக்கிறான்.

 ஃபேஸ்புக்கிலும் பிரபலம். `ஏன்டா... பாத்ரூம் கீத்ரூம் போவியா, மாட்டியா?’ எனக் கேட்க நினைத்து, கேட்டது இல்லை. போன வருடம் காதலர் தினத்தன்று ஒரே `ஃபீலிங்ஸ்’ ட்வீட்டாகப் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தான். ‘ `மறந்து போ’ எனச் சொல்லாதே.  `மரணித்துப் போ’ என்று சரியாகச் சொல்’ என அடுத்தடுத்த வரிகளில் கிலியூட்ட, `ஏன் மச்சி, உனக்குதான் லவ்வரே இல்லையே...

`காதலி இல்லை'ங்கிறதுக்கும் `விட்டுட்டுப் போயிட் டான்'ங்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. நீ ஏன் ஃபீலாவுற... லூஸாயிட்டியா?’ எனக் (தெரியாத் தனமாக) கேட்டதில் பொங்கிவிட்டான். ‘இங்கே எனக்கு அப்புறம் ஐடி ஆரம்பிச்சவங்களுக்குக்கூட ஆள் இருக்கு. என்னைப் பார்த்தியா, ஒரு பெண் ஐடி-கூட கண்டுக்கலை. `உனக்கு இன்னும் யாரும் செட் ஆகலையா?’னு அங்கிள்ஸ்கூட கிண்டல் பண்றாங்க. தனியொருவனுக்குக் காதலி இல்லையெனில் ஜகத்தினை அழித்திடவேண்டும்’ என என் மொபைல் டேட்டா லிமிட்டை புலம்பியே அழித்துத் தீர்த்தான். ‘ஏன் மச்சி, இணையத்துல காதல் எல்லாம் சரிப்படுமா? ஐடி எல்லாம் ஆணா... பொண்ணான்னு சி.ஐ.டி-க்கே தெரியாது. ஏன் இந்த வீண் வேலை?’ என்றால், ‘ரைமிங் அறிவுரை நல்லா இருக்கு. நாளைக்கு ட்வீட்டா போடு, நான் ரீட்வீட் பண்றேன்’ எனத் துன்பத்திலும் பெரிய மனது பண்ணத் தயாரானான். சரிதான், `நமக்காக எவ்வளவோ செய்திருக்கிறான். பிரதிபலனாக ஏதாவது செய்வோம்' என ஒரு வருடம் அயராது உழைத்ததில், தற்போது அவனுக்கு ஆயிரம் பேர் பின்தொடரும். விகடனில் மூன்று முறை வலைபாய்ந்த `பிரேமம்’ மலர் டி.பி-யுடன் ஒரு காதலி கிடைத்துவிட்டாள். அப்படியே எனக்கு ஆயிரம் பேர் பின்தொடரும், விகடனில் மூன்று முறை வலைபாய்ந்த `பிரேமம்’ மலர் டி.பி-யுடன் ஒரு பிரபல ‘ஃபேக்’ ஐடி-யும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism