Published:Updated:

தமிழ் ரசிகனின் ஆட்டோகிராஃப்!

தமிழ் ரசிகனின் ஆட்டோகிராஃப்!

கார்க்கிபவா, ஓவியங்கள்: ஷண்முகவேல்

தமிழ் ரசிகனின் ஆட்டோகிராஃப்!

கார்க்கிபவா, ஓவியங்கள்: ஷண்முகவேல்

Published:Updated:
தமிழ் ரசிகனின் ஆட்டோகிராஃப்!

காதலும் தமிழ் சினிமாவும் பிரிக்க முடியாதவை. கானகத்தில் துரத்தித் துரத்திக் காதலித்தது முதல், காபி ஷாப்பில் சண்டை போட்டுக் காதலித்தது வரை ஒவ்வொரு காலக் காதலையும் செல்லுலாய்டில் பதிவுசெய்திருக் கிறார்கள் கோடம்பாக்க பிரம்மாக்கள். பல ஜி.பி மெமரி கொண்ட அந்த லிஸ்ட்டில், டெலீட் செய்யவே முடியாத சில காதல்  தேவதைகள் மட்டும் இங்கே...

`கடலோரக் கவிதைகள்' ஜெனிபர் டீச்சர்

அலையடிக்கும் ஈர மணலில் பாரதிராஜா எழுதிய தேவதையின் பெயர், ஜெனிபர். ஐபேட் காலத்திலும் அந்த ஈரம் காயாமல் இருப்பதுதான் மேஜிக். 1986-ம் ஆண்டில் வண்ணக்குடை விரித்த ஜெனிபர் டீச்சர், தமிழகத்தின் எவர்கிரீன் மலர் டீச்சர்.

`மெளன ராகம்' திவ்யா

சிமென்ட் தரையில் பட்டு தெறிக்கும் மழைநீரின் வேகம், திவ்யாவின் கால்களுக்கும் உண்டு. மிஸ்டர்.சந்திரமெளலியின் மகளுக்கு, இன்டெல் i7 புராசஸர் மூளை. அந்த சிஸ்டம் டெல்லியில் ஹேங் ஆகி நின்றதைக் கண்டு கலங்காத இதயங்களே தமிழ்நாட்டில் கிடையாது.

`முதல் மரியாதை' குயிலு

ரவிக்கை இல்லாமல் வந்து ரசிகர்களைக் கொள்ளைகொண்ட குயிலு; பரிசலோட்டியப் பாவை. வெள்ளிமுடி கேட்ட இவளின் எசப்பாட்டு, காதல் காதுகளில் எப்போதும் கேட்கும்.

தமிழ் ரசிகனின் ஆட்டோகிராஃப்!

`காதல் கோட்டை' கமலி

`காதலுக்குக் கண் இல்லை' என ஊரே சொல்லிக்கொண்டிருந்தபோது, `எதற்குக் கண்?' எனக் கேட்டவள் கமலி. `நலம், நலமறிய ஆவல்' என, கடிதங்கள் மூலம் காதல் வளர்த்தவள்; இன்றைய வாட்ஸ்அப் காதல்களுக்கு எல்லாம் முன்னோடி இவள்.

`பருத்தி வீரன்' முத்தழகு

மெய் காதல், பொய் காதல்களுக்கு மத்தியில் முத்தழகின் காதல் `பேய் காதல்'. `டேய் வீரா... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா' எனக் கதறிய முத்தழகை, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை. முத்தழகு, ஒரு ஸ்பெஷல் அழகி!

`விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸ்ஸி

இன்றைய இளசுகளின் டாப் அழகி. `ஊர்ல எத்தனையோ பொண்ணுங்க' இருந்தாலும் கார்த்திக் மட்டும் அல்ல, எல்லோருமே ஜெஸ்ஸியை விரும்பினர். அப்படி என்னவோ இருக்கு ஜெஸ்ஸியிடம்.

`காக்க காக்க' மாயா

ஒரு ஊரில் அழகே உருவாய் இருந்த ஒருத்தி. ஃபேன்டசி டீச்சர். கறார் அன்புச்செல்வனையும் கட்டிப்போட்ட அழகி. பெண்களின் கண்களைப் பார்த்து ஆண்களைப் பேசவைத்ததே மாயாதான். ஏய்... கலாபக் காதலி, வீ லவ் யூ டார்லிங்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ் ரசிகனின் ஆட்டோகிராஃப்!

`காதலுக்கு மரியாதை' மினி

டெரரான மூன்று அண்ணன்களுக்கு மட்டும் அல்ல, நம் தமிழகத்தின் குலவிளக்கு மினி. கடைசி வரை தொட்டுக்கொள்ளாத மினி-ஜீவா காதலில் இருந்தது ஒன்றரை டன் ரொமான்ஸ். அதுதான் மினி ஸ்பெஷல்.

`ஓ காதல் கண்மணி' தாரா

 4ஜி ஜெனரேஷன் தாரா. யெஸ் என்றாலும், நோ என்றாலும் அடுத்த செகண்டே எக்ஸ்பிரஸ் செய்துவிடும் ஜஸ்ட் லைக் தட் நாயகி. ஏய் சினாமிகா... ஹேப்பி வேலன்டைன்ஸ் டே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism