Published:Updated:

“லவ் பண்ண நேரம் இல்லை!”

“லவ் பண்ண நேரம் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“லவ் பண்ண நேரம் இல்லை!”

பா.ஜான்ஸன், படம்: தி.குமரகுருபரன்

“லவ் பண்ண நேரம் இல்லை!”

பா.ஜான்ஸன், படம்: தி.குமரகுருபரன்

Published:Updated:
“லவ் பண்ண நேரம் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“லவ் பண்ண நேரம் இல்லை!”

‘நீதான் வேணும்... கல்யாணம் பண்ணிக் கிறியா?’ - `மெட்ராஸ்' படத்தில் மெர்சல் செய்த கேத்ரின் தெரசாவை அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது. விஷாலுடன் ‘கதகளி’ ஆடிவிட்டு, இப்போது அதர்வாவுடன் ‘கணிதன்’ பட ரிலீஸுக்காகக் காத்திருந்தவருடன் ஒரு ஸ்வீட் சேட்டிங்...

``தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, பல மொழிகளில் நடிப்பது எப்படி இருக்கிறது?''

``எனக்கு இதுவே கம்மின்னு தோணுது. மொழிங்கிறது எந்தக் கலைக்கும் தடை கிடையாது. இங்கே கிடைக்காத ஒரு ரோல் அங்கே கிடைக்குது; அங்கே வராத ஒரு ரோல் இங்கே வருது. தமிழ்ல எனக்குக் கிடைச்ச ரோல்ஸ் ரொம்பப் பிடிச்சிருக்கு. `மெட்ராஸ்' கலையரசி, `கணிதன்' அனு... ரெண்டுமே ரொம்ப எனக்கு ஸ்பெஷல். இனி இப்படி முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களைத் தான் தேர்ந்தெடுக்கணும்னு இந்த அனுபவத்தில் இருந்து கத்துக்கிட்டேன்.''

`` `கணிதன்' படத்தில் என்ன ஸ்பெஷல்?''

`` `மெட்ராஸ்'க்குப் பிறகு நான் கமிட் ஆன படம். ஆனா, மூணாவது படமா ரிலீஸ் ஆகுது. இயக்குநர் சந்தோஷ், கதை சொன்ன விதமே நல்லா இருந்தது. ஃப்ரெஷ்ஷான கதை. ரிப்போர்ட்டரா நடிச்சிருக் கேன். `ஒரு சீன்ல, என் தலையை மீன் தொட்டிக் குள்ள மூழ்கவெச்சு எடுக்கணும்'னு சொன்னாங்க. ரொம்பவே பயந்து நடுங்கி, ஒரு வழியா அந்த ஷாட் எடுத்து முடிச்சோம். அந்த சீனை பார்க்கிறதுக்காகவே படத்தை ரொம்ப ஆவலா எதிர்பார்க்கிறேன்.''

“லவ் பண்ண நேரம் இல்லை!”

``ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்துக்கு ஏதேனும் ஹோம்வொர்க் செய்தீர்களா?''

``இல்லை... அந்த மாதிரி எதுவும் பண்ணலை. ஆனா, இயக்குநரோட நிறைய டிஸ்கஸ் பண்ணினேன். அப்புறம் உங்களைப்போல பல ரிப்போர்ட்டர்களைச் சந்திச்சதும், அவங்க கேள்வி கேட்கும் விதத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களும் ரொம்பவே உதவியா இருந்தது.''

``தனி ஹீரோயினாவும் நடிக்கிறீர்கள்... மல்டி ஹீரோயின் சப்ஜெக்ட்லயும் நடிக்கிறீர்களே..?''

``ஒரு படத்துல என்னோட கதாபாத்திரம் என்ன பண்ணுதுங்கிறதுதான் எனக்கு முக்கியம். அதை விட்டுட்டு, `கூட இவங்க இருக்காங்களே, நாம கவனிக்கப்படாமப் போயிடுவோமோ'னு யோசிக்க மாட்டேன். `நான் பண்ற வேலையில என்னோட பெஸ்ட்டைக் கொடுக்கணும்'னு நினைப்பேன். அப்படி, ‘ருத்ரமாதேவி’ படத்துல நடிச்சது ஒரு நல்ல அனுபவம். அனுஷ்கா மாதிரியான திறமையானவங்கக்கூட நடிக்கும் சூழல் அமைஞ்சது. ஸ்வீட்டி ரொம்ப ஸ்வீட்.''

``நடிப்பைத் தவிர வேறு எதில் ஆர்வம்?''

``புத்தகங்கள் படிக்கிறது, ஃப்ரீயான நேரங்கள்ல குட்டித் தூக்கம் போடுறது பிடிக்கும். சுத்தி இருக்கிற பொருட்களை அடுக்கி வைக்கப் பிடிக்கும். அப்புறம் பியானோ. க்ளாஸ் போய்க் கத்துக் கிட்ட விஷயம் அது. நல்லாவே வாசிப்பேன்.''

``அடிக்கடி நினைத்துச் சிரிக்கும் விஷயம்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நான் பிறந்தது கேரளா. ஆனா, மலையாளம் சரியா பேச வராது. இந்தி, தெலுங்குனா பொளந்து கட்டிடுவேன். மலையாளத்தில் பேசினா, எனக்கே சிரிப்பு வந்துடும்.''

``மறக்க முடியாத பாராட்டு?''

`` ‘வரலாறு’ படத்தின் கன்னட வெர்ஷன் ‘காட்ஃபாதர்’ல கனிகா நடிச்ச ரோல்ல நடிச்சிருந்தேன். அந்தப் படத்துக்காக நிறையப் பேர் பாராட்டினாங்க.''

“லவ் பண்ண நேரம் இல்லை!”

``வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல்?''

``வேலன்டைன்ஸ் டேவே ஸ்பெஷலான ஒண்ணுதான். ஆனா, எனக்கு அது அவ்வளவு ஸ்பெஷலா இருக்காது. லவ், நல்ல விஷயம்தான். ஆனா, அதுக்கு இப்போ டைமும் இல்லை; அப்படி ஒரு யோசனையும் இல்லை. இருந்தாலும் எல்லா லவ்வர்ஸுக்கும் `ஹேப்பி வேலைன்டைன்ஸ் டே' சொல்லிக்கொள்கிறேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism