‘‘ `கோடீஸ்வரனைத்தான் கட்டிக்குவேன்’னு சொல்லிட்டு, கடைசியில லட்சாதிபதியை மேரேஜ் பண்ணிக்கிட்டியேடி!’’

‘‘நான் லவ் பண்ண ஆரம்பிச்சப்ப, கோடீஸ்வரனாத்தான் இருந்தார்டி!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- பர்வீன் யூனுஸ்
‘‘எனக்குள்ளே ஒரு மிருகம் தூங்கிட்டிருக்கு!’’

``அதுவும் மிருகம்தானா?’’
- எம்.மிக்கேல்ராஜ்
‘‘தலைவரே, எங்கே போனாலும் உங்களை பற்றிதான் பேச்சு.’’

‘‘எங்கெல்லாம் போனீங்க?’’
‘‘புழல், வேலூர், பாளையங்கோட்டை இப்படிப் பல இடங்களுக்கு!’’
- வி.சாரதி டேச்சு
‘`உங்க கணவருக்கு வந்திருக்கிறது வாக்காளர் நோய்!’’

``அப்படீன்னா என்ன டாக்டர்?''
``பத்து நாட்களுக்கு முன்னால நடந்தது எதுவுமே நினைவில் இருக்காது!''
- கி.ரவிக்குமார்
‘‘நீ எந்தத் தைரியத்துல என் பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தே?”

‘‘உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதுங்கிற தைரியத்துலதான்!’’
- வி.சாரதி டேச்சு
‘‘எங்கள் தலைவர் நடைப்பயணம் சொல்லும் வழி முழுவதும் ‘வெட்டி நடைபோடுகிறது’ என போஸ்டர் ஒட்டும் கயவர்களை...’’

- கே.லக்ஷ்மணன்
‘‘ `கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு' என வரச்சொல்லிவிட்டு, ‘உனக்கு நல்ல காமெடி ஃபேஸ். அதைப் பார்த்துட்டே பேச்சுவார்த்தை நடத்தினால் லைவ்லியா இருக்கும். அதான் கூப்பிட்டோம்’ எனச் சொல்லி, எங்கள் தலைவரை வெறுங்கையோடு அனுப்பி வைத்திருக்கிறீர்களே... உங்களுக்கு மனசாட்சி என்பதே கிடையாதா?’’

- கே.லக்ஷ்மணன்
‘‘அந்தப் பொண்ணு உங்களைக் காதலிங்கலைங்கிறதை எல்லாம் 1100-க்கு அடிச்சு சொல்லக் கூடாது சார்!’’

- எம்.விக்னேஷ்