Published:Updated:

வில் அம்பு - சினிமா விமர்சனம்

வில் அம்பு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
வில் அம்பு - சினிமா விமர்சனம்

வில் அம்பு - சினிமா விமர்சனம்

வில் அம்பு - சினிமா விமர்சனம்

வில் அம்பு - சினிமா விமர்சனம்

Published:Updated:
வில் அம்பு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
வில் அம்பு - சினிமா விமர்சனம்

ம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றுக்கும் காரணம், விதி அல்ல; இன்னொரு மனிதனின் செயல்தான் என்கிறது `வில் அம்பு'.

சின்னச் சின்னத் திருட்டு, பொய் புரட்டு, அடிதடி, அடாவடி... என ஏரியாவில் அசால்ட் கை ஸ்ரீ. நிறுத்தி நிதானமாகவும் நேர்மையாகவும் செயல்படும் சாஃப்ட் குட்பாய் ஹரிஷ் கல்யாண். இருவரும் ஒரே ஏரியா; ஆனால் முன்பின் அறிமுகம் இல்லாத இளைஞர்கள். இருவரின் வாழ்க்கையிலும் நடக்கும் முக்கியமான சம்பவங்களுக்கு, ஒருவருக்கொருவர் தெரியா மலேயே மற்றவர் காரணமாகிறார்கள். இந்த பட்டர்ஃப்ளை விளைவினால் ஏற்படும் குழப்பங்களும் குதூகலமுமே கதை.

இரு கிளைக் கதைகளைக் குழப்பாமல் தெளிவாகக் கையாண்ட விதத்துக்காகவே அறிமுக இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியமைப் பாராட்டலாம். வித்தியாச ஐடியா, வெரைட்டியான இரண்டு கதைகள் எனக் கவனிக்கவைக்கிறார்.

வில் அம்பு - சினிமா விமர்சனம்

பாடி லாங்வேஜிலும் பேசும் லாங்வேஜிலும் ஸ்ரீயிடம் அவ்வளவு தெனாவெட்டு. நண்பர்களுடன் சேர்ந்து சேட்டு வீட்டில் திருடி மாட்டிக்கொண்டு கலகலக்க வைப்பதில் தொடங்கி, ‘என்னை ஏம்மா அடிச்சு, ஒழுங்கா வளர்க்கலை?’ எனக் கலங்கவைப்பது வரை... ஸ்ரீ, நீ கலக்கு ப்ரோ! தன் ஆர்வம் எது எனத் தெரியாமல் ‘ஏதோ ஒரு வேலைக்குப் போ’ என்ற  கெடுபிடி அப்பாவிடம் மாட்டிக்கொண்டு திணறுவதிலும், செய்யாத தப்புக்கு சிறை சென்று கலங்குவதிலும் ஹரிஷ் கல்யாண் செம!

சம்ஸ்க்ருதி, சிருஷ்டி டாங்கே, சாந்தினி என மூன்று ஹீரோயின்கள். கண்களாலேயே பேசுவது, அப்பாவிடம் அடிவாங்கித் தவிப்பது... என பள்ளி மாணவி கேரக்டரில் சம்ஸ்க்ருதி குட் சாய்ஸ். படத்தின் கலகல ஏரியாவுக்கு கான்ட்ராக்ட் யோகிபாபு. ‘ஏன்டா கார்த்தி கலவரம் பண்ற?’, ‘என்னைக் கௌரவம் செஞ்சிட்டடா கார்த்தி’ என மல்ட்டி ரியாக்‌ஷன் களில் அதிரவைக்கிறார். அதுவும் அந்த போலீஸ் ஸ்டேஷன் போர்ஷன் அதிர்வேட்டு.

ஹரிஷ் போலீஸில் சிக்க ஸ்ரீதான் காரணம் எனத் தொடங்குகிறது படம். ஆனால், திரைக்கதையில் அதற்காகச் சொல்லப்படும் காரணம் அவ்வளவு வீக். `இரண்டு கதைகள், அது இணையும் புள்ளி எது?' என்ற கேள்வி, ரசிகனைத் துரத்தும் அளவுக்கு திரைக்கதை பறக்கவேண்டாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வில் அம்பு - சினிமா விமர்சனம்‘ஆளை சாச்சிப்புட்ட கண்ணால...' என்ற பாடலின் இளமை ட்யூனில் ரொமான்டிக் மோடுக்கு போகவைக்கும் நவீன், மற்ற பாடல்கள், பின்னணி இசையில் சைலன்ட் மோடிலேயே இருக்கிறார். மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவில், குறுக்கு மறுக்கு சந்துகள், கேண்டிட் ஷாட்கள் என்பது தெரியாத அளவுக்கு நேர்த்தி.

வில்லை இன்னும் வளைத்து, நாணை சற்று முறுக்கேற்றியிருந்தால், அம்பு தன் இலக்கைச் சரியாக  அடைந்திருக்கும்!

- விகடன் விமர்சனக் குழு