Published:Updated:

“ரஜினி சாயலை தவிர்க்க முடியாது!”

“ரஜினி சாயலை தவிர்க்க முடியாது!”

பா.ஜான்ஸன்

“ரஜினி சாயலை தவிர்க்க முடியாது!”

பா.ஜான்ஸன்

Published:Updated:
“ரஜினி சாயலை தவிர்க்க முடியாது!”

`` `பெங்களூர் நாட்கள்’ படத்தில் கமிட் ஆகும்போதே, நிவின் பாலிகூட நிச்சயம் என்னை கம்பேர் பண்ணுவாங்கனு தெரியும். அதனால எங்க டார்கெட்டா இருந்தது மலையாளம் வெர்ஷன் பார்க்காதவங்கதான். ப்ளான் பண்ண மாதிரியே புதுசா பார்த்த எல்லாருமே `உங்களை இவ்வளவு க்யூட்டான ரோல்ல பார்க்க சந்தோஷமா இருந்தது’னு சொன்னாங்க’’ உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் பாபி சிம்ஹா.

``ஒரிஜினல்ல நடிச்ச நிவின் பாலி என்ன சொன்னார்?''

``நிவின் இன்னும் படம் பார்க்கலை. ட்ரெய்லர் பார்த்துட்டு `எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’னு சொன்னான். `சென்னை வரும்போது சேர்ந்தே பார்ப்போம்’னு சொல்லியிருக்கான். அவனோட கமென்ட்ஸுக்காகக் காத்திருக்கேன்.''

``ஹீரோக்களே தயாரிப்பாளர் ஆகும் லிஸ்ட்டில் நீங்களும் இணைந்திருக்கிறீர்களே?''

``எனக்கு அப்படி ஒரு யோசனையே இல்லை. `வல்லவனுக்கு வல்லவன்' படத்தின் ஸ்கிரிப்ட் ரெண்டரை வருஷமா ஷூட்டுக்குப் போகாம அப்படியே இருந்தது. படத்தின் இயக்குநர் விஜய் தேசிங் இந்தக் கதையை நான் `ஜிகர்தண்டா’ ஷூட்ல இருந்தப்போ சொன்னார். எனக்கு கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே நான் பண்றேன்னு ஒப்புக்கிட்டேன். இந்தப் படத்துக்கு பட்ஜெட் கொஞ்சம் அதிகம். அதனால் என்னைவெச்சு அவ்வளவு செலவு பண்ணி ஒரு படம் எடுக்க நிறையப் பேர் தயங்கினாங்க. என் ஃப்ரெண்ட் சதீஷ் `நாமளே இதைப் பண்ணலாம்'னு சொன்னான். அப்படி ஆரம்பமானதுதான் `அசால்ட் புரொடக்‌ஷன்'. ''

“ரஜினி சாயலை தவிர்க்க முடியாது!”

`` `வல்லவனுக்கு வல்லவன்' ரஜினி பட டைட்டில் மாதிரி இருக்கே?''

``இந்த டைட்டில் அமைஞ்சதில் எனக்கு அவ்ளோ சந்தோஷம். காலேஜ் படிக்கும்போது ஏதாவது கேள்வி கேட்டா படபடனு பதில் சொல்வேன். அவங்க புரியாம `கேன் யூ ரிப்பீட் அகெய்ன்?'னு சொல்வாங்க. `நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி'னு சொல்வேன். இப்போ நான் நடிக்கும்போதோ, இல்ல பேசும்போதுகூட அவருடைய சாயல் வந்து போகுது. அதைத் தவிர்க்க முடியலை.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`` `மெட்ரோ’, `இறைவி’, `பாம்புசட்டை’, `கோ-2’னு அடுத்தடுத்து உங்களுக்கு நிறையப் படங்கள். இந்த வருஷம் செம ஸ்டார்ட்டா இருக்கும்போலயே?''

`` `இறைவி’ கார்த்திக்கோட ட்ரீட்மென்ட்ல வேற மாதிரி ஒரு படம். `பீட்சா’, `ஜிகர்தண்டா’... எல்லாம் தாண்டி, அதை உடைக்கிற மாதிரி ஒரு படம் பண்ணியிருக்கார். `பாம்புசட்டை’ படத்தில் சென்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ் எல்லாம் இருக்கும். `கோ-2’ ஒரு பொலிட்டிக்கல் சட்டையர். `ஜிகர்தண்டா’வுக்கு அப்புறமா என்னை அடுத்த கட்டத்துக்கு
`கோ -2’ கொண்டுபோகும்.''

`` `ஜிகர்தண்டா'வுக்குப் பிறகான உங்க நடிப்பு எந்தப் படங்களிலும் பேசப்படலையே... கவனிச்சீங்களா?''

``உண்மை என்னன்னா, சில படங்கள் எல்லாம் `ஜிகர்தண்டா’வுக்கு முன்னாடியே கமிட்டானது. எது எப்படிப் போகும்னு நாம கணிக்க முடியாதே. போன வருஷம் 13 படங்கள் கமிட் பண்ணிட்டு அது எல்லாத்தையும் பண்றதுல பயங்கர பிரஷர் ஆகிருச்சு. காலையில ஒரு ஷூட், நைட் ஒரு ஷூட்னு தூங்கக்கூட நேரம் இல்லாமப் போயிருச்சு. இனிமே `ஜிகர்தண்டா’ பண்ண மாதிரி ஒரு படத்தை முடிச்சிட்டு, அடுத்த படம் பண்ணணும்னு முடிவு பண்ணியிருக்கேன்.''

“ரஜினி சாயலை தவிர்க்க முடியாது!”

``தமிழ்ல நலன், கார்த்திக் சுப்புராஜ் மாதிரியே, மலையாளத்திலும் ஒரு ஃப்ரெண்ட் லிஸ்ட் வெச்சிருக்கீங்களே?''

``நாங்க ஷார்ட் ஃபிலிம் டைம்ல இருந்தே நல்ல ஃப்ரெண்ட்ஸ். `எலி'னு அல்போன்ஸ் புத்திரன் பண்ணின ஒரு ஷார்ட் ஃபிலிம்ல நானும் நிவின் பாலியும் நடிச்சோம். அந்தப் படத்தைத் தயாரிச்சது `தட்டத்தின் மறயத்து' பண்ணின வினித். அவன்கிட்ட `என்னப்பா நிறைய பிளாக் மணி வெச்சிருக்கியா?'னு ஜாலியா கேட்டேன். `ஹேய் பேரு நல்லாருக்கு மச்சி'னு `பிளாக் மணி புரொடக்‌ஷன்'னு தன் கம்பெனிக்கு பேரே வெச்சிட்டான். அப்போ இருந்தே நாங்க பயங்கர க்ளோஸ். `என் கதையை ஒருத்தர் இயக்குறார். நானும் நிவினும் நடிக்கிறோம். நீ வந்து ஒரு கெஸ்ட் ரோல் பண்ணு'னு வினித் கூப்பிட்டான். அப்படி நடிச்சதுதான் `வடக்கன் செல்ஃபி'ல ஒரு சின்ன ரோல். நிவின் `ஜிகர்தண்டா'ல நான் நடிச்ச ரோல் பண்ண ஆசைனு சொல்வான். `டேய், நீ நடிச்ச `தட்டத்தின் மறயத்து' மாதிரி ஒரு ரோல் பண்ணணும்னு எனக்கு ஆசைடா'னு நான் சொல்வேன். ரொம்ப ஜாலியான ஃப்ரெண்ட்ஸ் டீம் இது.''

 ``திருமண வாழ்க்கைக்குத் தயாராகிட்டீங்களா?''

``ரெடியாகிட்டே இருக்கேன். கொஞ்சம் படங்கள் நடிச்சு முடிக்கவேண்டியிருக்கு. அதை எல்லாம் முடிச்சதும் டேட் ஃபிக்ஸ் பண்ணலாம்னு ரேஷ்மியும் நானும் பேசியிருக்கோம். `எங்கே இருக்க?’, `என்ன பண்ற?’னு எல்லா விசாரிப்புகளும் தினமும் இருக்கும். `சும்மா... எப்போ பார்த்தாலும் மூஞ்சியை உர்ருனு வெச்சுக்கிட்டே நடிக்கிறியே...'னு சொல்லிட்டே இருப்பாங்க. `நான் என்ன பண்றது... அப்படிப்பட்ட கேரக்டராதான் வருது'னு சொல்வேன். `பெங்களூர் நாட்கள்' பார்த்துட்டு `இப்போதான் கொஞ்சம் நல்லா சிரிச்ச முகமா நடிச்சிருக்க'னு சொன்னாங்க.''