Published:Updated:

உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!

உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!
பிரீமியம் ஸ்டோரி
உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!

கார்க்கிபவா

உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!

கார்க்கிபவா

Published:Updated:
உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!
பிரீமியம் ஸ்டோரி
உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!

`கபாலி' படத்துக்காக ரஜினி ரசிகர்கள் காத்திருப்பதைப்போல, `தெறி'க்காக விஜய் ரசிகர்கள் காத்திருப்பதைப்போல... உலகம் எங்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த இயக்குநர்களின் படங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். உலகின் சினிமா ரசனையை மாற்றிப்போடும் கிளாசிக் உலகப்பட இயக்குநர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்... அவர்களின் அடுத்த புராஜெக்ட் என்ன?

கோயன் பிரதர்ஸ்

உலக சினிமா ஆர்வலர்களின் முதல் சாய்ஸ் `கோயன் பிரதர்ஸ்'. இவர்கள் இயக்கிய `ஃபார்கோ' ஆல் டைம் அட்டகாச ஹாலிவுட் படம். கோயன் பிரதர்ஸ் படங்களில் `ஃபார்கோ' இரண்டு ஆஸ்கரும், `நோ கன்ட்ரி ஃபார் ஓல்டு மென்' நான்கு ஆஸ்கரும் அள்ளியிருக்கிறது. `தி நேக்கட் மேன்' என்ற காமெடி கலாட்டாவில் தொடங்கி சென்ற ஆண்டு வெளியான ஸ்பீல்பெர்க் படமான `பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்' வரை திரைக்கதை எழுத்தாளர்களாகவும் கெத்துகாட்டியவர்கள் இந்த கோயன் சகோதரர்கள்.

உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!
உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காமெடிதான் இவர்களின் ஸ்ட்ராங் ஏரியா. அந்த ஜானரில் தற்போது `ஹெய்ல், சீஸர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார்கள். ஜார்ஜ் க்ளூனி, ஜோஷ்புரோலின், ஸ்கார்லெட் ஜோஹன்சன்... என படத்தில் வருபவை எல்லாம் ஹிட் முகங்கள். பிப்ரவரி 5-ல் அமெரிக்காவில் மட்டும் ரிலீஸான `ஹெய்ல், சீஸர்', அங்கு தெறி ஹிட். கோயன் பிரதர்ஸின் டைம்லைன் ரசிகர்களின் பாராட்டுக்களால் நிரம்புகிறது. வெற்றியின் ருசியில் திளைத்துக்கொண்டிருக்கும் கோயன் பிரதர்ஸ், அடுத்து என்ன என்பதை இன்னும் அறிவிக்கவில்லை!

பார்க் சான் வூக்

கொரிய ஆட்கள் இல்லாமல் உலகப் படங்கள் ஏது? கொரிய சினிமாவின் ஜாம்பவான் பார்க் சான் வூக். வயிற்றைக் கலக்கும் வன்முறையும் பிளாக் காமெடியும் இவரது ஸ்பெஷல். இவரின் தீவிர ரசிகர்கள் `சைக்கலாஜிக்கல் அப்ரோச்தான் சான் வூக்கின் பலம்' என்பார்கள்.

உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!

`ஜாயின்ட் செக்யூரிட்டி ஏரியா', `ஓல்டு பாய்', `சிம்பதி ஆஃப் லேடி வெஞ்சன்ஸ்' ஆகியவை உலக சினிமா கலெக்‌ஷனில் இருந்தே ஆகவேண்டிய பார்க் சான் வூக்கின் முத்திரைப் படங்கள். கொரிய சினிமா ஆர்வலர் மிஷ்கினின் `யுத்தம் செய்' படத்தில் `சிம்பதி ஆஃப் லேடி வெஞ்சன்ஸ்' சாயலைக் காண முடியும்.

பார்க் சான் வூக், தற்போது சாரா வாட்டர்ஸ் எழுதிய `ஃபிங்கர் ஸ்மித்' என்ற நாவலைத் தழுவி `தி ஹேண்ட்மேட்' என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். உலகப் பணக்காரர் ஒருவரின் வாரிசு, திருடனுடன் காதல்கொள்ளும் கதை. க்ரைம் திரில்லரான இந்தப் படம் உலகையே உலுக்கும் என சத்தியம் செய்கிறது பார்க்கின் ரசிகப் படை!

மஜித் மஜிதி

உலக கிளாசிக் பட்டியலில் ஈரானியப் படங்களைச் சேர்க்காவிட்டால் தாமஸ் ஆல்வா எடிசனின் ஆவி நம்மை மன்னிக்காது. `சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' என்ற அதி உன்னதப் படைப்பைக் கொடுத்த மஜித் மஜிதி, சர்வதேச அளவில் தவறவிடக்கூடாத முக்கிய இயக்குநர்.

உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!

`சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தை இன்டர்நேஷனல் `காக்கா முட்டை' எனலாம்.  தொடர்ந்து குழந்தை களை மையமாகக் கொண்டு இவர் இயக்கிய `கலர் ஆஃப் பேரடைஸ்' மற்றும் `தி சாங் ஆஃப் ஸ்பேரோஸ்' ஆகியவை நாம் பார்த்தே ஆக வேண்டிய நேர்த்தியான கலைப் படைப்புகள்.

சென்ற ஆண்டு மஜித் மஜிதி இயக்கிய `முஹமது: த மெசெஞ்சர் ஆஃப் காட்' படத்துக்கு இசையமைத்தவர் நம் ஊர் ஏ.ஆர்.ரஹ்மான். இதைத் தொடர்ந்து `காஷ்மீர் ஆஃப்லோட்' என்ற படத்தை இயக்கிவருகிறார். ஐந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் எப்போது வரும் என்பதுதான் சினிமா ஆர்வலர்கள் இடையே மோஸ்ட் வான்ட்டட் பேச்சு!

கை ரிட்ச்சி

க்ரைம் படங்கள்தான் உங்கள் ஃபேவரிட்டா? அப்போ இவருக்குத் தாராளமாக ஒரு ஹாய் சொல்லலாம். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கை ரிட்ச்சிதான் நம்ம ஊர் `ஆரண்ய காண்டம்' புகழ் தியாகராஜன் குமாரராஜாவின் ஏகலைவன் என்பார்கள். நகங்களைக் கடித்துத் துப்பவைக்கும் இவரது க்ரைம் படங்கள் இன்டர்நேஷனல் ஹிட்.

உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!

`ரிவால்வர்', `ஷெர்லாக் ஹோம்ஸ்' சீரிஸ் ஆகியவை உலக கிளாசிக் சினிமா கலெக்‌ஷனுக்கு ரிட்ச்சியின் பங்களிப்புகள். சென்ற ஆண்டு இவர் இயக்கிய `தி மேன் ஃப்ரம் அங்கிள்' உளவாளிகளைப் பற்றிய காமெடிப் படம். ஆவலுடன் பார்த்த ரசிகர்கள் `ப்ச்... ரிட்ச்சி படமாப்பா இது?’ என உதட்டைப் பிதுக்க, சோர்ந்துபோனார் ரிட்ச்சி. தான் யானை அல்ல, குதிரை என நிரூபிக்க `நைட்ஸ் ஆஃப் தி ரவுண்ட்டேபிள்: கிங் ஆர்தர்' என்ற அட்வென்ச்சர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 2017-ம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்!

க்ளின்ட் ஈஸ்ட்வுட்

இவருக்கு வயது என்ன தெரியுமா? 86. இந்த வயதில்தான் `சல்லி' என்ற படத்தை இயக்கிவருகிறார் இந்த சினிமா ஜாம்பவான். IMDB போன்ற பல சினிமா விமர்சனத் தளங்களில் அதிக மார்க் வாங்கிய `குட் பேட் அக்லி',  க்ளின்ட்டின் எவர்கிரீன் கிளாசிக். ஆனால், அந்தப் படத்தில் அவர் நடிகர். அதன் பிறகே ஸ்டார்ட் ஆக்‌ஷன் சொல்ல ஆரம்பித்தார்.

உலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்!

ஈஸ்ட்வுட்டின் டைரக்‌ஷனுக்கும் உலகளாவிய ரசிகர் கூட்டம் உண்டு. இவர் இயக்கிய `மில்லியன் டாலர் பேபி' மாஸ் அண்ட் கிளாஸ் ஹிட். பல ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்துக்கு இசையும் கிளின்ட் ஈஸ்ட்வுட்தான். ஒரு முழுமையான சினிமா கலைஞரான க்ளின்ட்டின் படங்களில் `மில்லியன் டாலர் பேபி', `மிஸ்டிக் ரிவர்' இரண்டும் முக்கியமானவை.

அமெரிக்க பைலட் சல்லி என்பவரின் நிஜ சாகசத்தை மையமாகக்கொண்ட `சல்லி' படம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது.