Published:Updated:

'இது அவரது தனிப்பட்ட கருத்து!' - பா.ஜ.க மட்டுமில்ல, நாமளும் இதை அடிக்கடி சொல்றோம்!

'இது அவரது தனிப்பட்ட கருத்து!' - பா.ஜ.க மட்டுமில்ல, நாமளும் இதை அடிக்கடி சொல்றோம்!
'இது அவரது தனிப்பட்ட கருத்து!' - பா.ஜ.க மட்டுமில்ல, நாமளும் இதை அடிக்கடி சொல்றோம்!

'இது அவரது தனிப்பட்ட கருத்து!' - பா.ஜ.க மட்டுமில்ல, நாமளும் இதை அடிக்கடி சொல்றோம்!

இப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் ஏதேனும் கருத்தைச் சொல்வதும், அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் அக்கருத்தை `அது அவர்களின் தனிப்பட்ட கருத்து’ என்று மறுப்பதும் வழக்கமாயிடுச்சு. சுப்பிரமணியம் சாமியிலிருந்து செல்லூரார் வரைக்கும் அப்பப்ப இப்படி தனிப்பட்ட கருத்து சொல்றது தான் இப்போ ஃபேஷனே! என்னடா அரசியலில்  மட்டும்தான் இப்படி தனிப்பட்ட கருத்து சொல்வாங்களா? நம்ம நடைமுறை வாழ்க்கையில் இல்லையா என்ன? அப்படி எங்கெல்லாம் தனிப்பட்ட கருத்து சொல்றாங்கன்னு பார்க்கலாமா?

'இது அவரது தனிப்பட்ட கருத்து!' - பா.ஜ.க மட்டுமில்ல, நாமளும் இதை அடிக்கடி சொல்றோம்!

பசங்க வளர்ந்து பொண்ணு பார்க்கற வயசு வந்துட்டாலே நம்ம வீட்டுக்கு தரகர்கள் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க ஸ்ட்ரெயிட்டா அப்பாவைத்தான் போயி பார்ப்பாங்க... ஏன்னா அவர் தான படியளக்குறவர். அவர்கிட்ட போயி பொண்ணு எப்படி இருக்கணும், எவ்ளோ படிச்சிருக்கணும், எந்த ஊர்ப்பக்கமா பார்க்கட்டும்னு விசாரிப்பார்... அப்பாவுக்கு பொண்ணு சுமாரா படிச்சிருந்தா போதும், சொல்ற பேச்சை கேக்குறதா இருக்கணும்பார்... அம்மா அவங்க பங்குக்கு, கொஞ்சம் வசதியான குடும்பமா பாருங்க, ஒரு நூறு பவுனாவது போடுற குடும்பமா பாருங்க.. எங்க பையனுக்கு என்ன குறைச்சல்னு அவங்க பங்குக்கு சொல்வாங்க... சரி, நம்மகிட்ட கருத்து கேட்பாங்கன்னு பார்த்தால் பையனை தரகர் கண்டுக்க மாட்டார். பிறகு பையன் தானாக என்ட்ரி கொடுத்து, ``அவங்க சொல்றதெல்லாம் கேக்காதிங்க.. எனக்கு டிகிரி படிச்சு வேலைக்கு போற பொண்ணுதான் வேணும். கொஞ்சம் செவப்பா இருக்கணும். வசதியான குடும்பம்னெல்லாம் தேவையில்லை’’ன்னு மனசுல பட்டதை சொல்லுவான். உடனே அப்பா, ``அவன் கெடக்கான்... அவன் சொல்றதெல்லாம் காதுல போட்டுக்காதிங்க... நீங்க நான் சொல்ற மாதிரி பாருங்க... அந்தப் பொண்ணு வந்து சம்பாதிச்சு கொடுத்துதான் குடும்பம் நடத்தணும்னு இல்ல... நீங்க நான் சொல்ற மாதிரி பாருங்க.. அவன் சின்னப்பையன்...’’ என்று பையனோட கருத்தை `அவனோட தனிப்பட்ட கருத்தா’ மாத்திடுவாரு!

'இது அவரது தனிப்பட்ட கருத்து!' - பா.ஜ.க மட்டுமில்ல, நாமளும் இதை அடிக்கடி சொல்றோம்!

சில ஹோட்டல்களுக்கு நம்ம ஃப்ரண்ட வலுக்கட்டாயமா இழுத்துட்டு போய் உட்கார்ந்ததும், வெங்காய தோசை வேணும், சோலாப்பூரி வேணும், மஸ்ரூம் ஃப்ரைட்ரைஸ் வேணும்னு மெனு கார்டைப் பார்த்து இஷ்டத்துக்கு ஆர்டர் பண்ணுவோம். சர்வரும் சரின்னு கேட்டுட்டு உள்ள போயி மாஸ்டரைப் பார்த்த கையோட வந்து, சார், ரொம்ப லேட்டாயிடுச்சு, கல் தோசையும், கெட்டிச்சட்னியும் மட்டும்தான் இருக்குன்னு சொல்வாப்ல பாருங்க. நம்ம சொன்ன ஆர்டர் எல்லாமே தனிப்பட்ட கருத்துதான்! 

மனைவியோட ஷாப்பிங் போறப்ப, ``இந்த முறையாவது தேவையில்லாததா வாங்கிக் குவிச்சு துட்டை வேஸ்ட் பண்னாமல் பார்த்துக்கோ. நீயே அழகாத்தான் இருக்குற... பிறகெதுக்கு மேக்கப்புக்குன்னு கண்டதை வாங்கி செலவு பண்ணணும்?"னு கேட்கவும், சரிங்க சரிங்கன்னு கேட்டுட்டு, அங்க கடைக்குள்ள நுழைஞ்சதும் அள்ளிட்டு வர்றதுல பாதி ஐட்டம் மேக்கப் கிட்ஸ்தான் இருக்கும். ஆக, அங்க நம்ம கருத்து நமளோட தனிப்பட்ட கருத்துதான்.

'இது அவரது தனிப்பட்ட கருத்து!' - பா.ஜ.க மட்டுமில்ல, நாமளும் இதை அடிக்கடி சொல்றோம்!

கல்யாணம் ஆனதும் ஹனிமூன் போலாம்னு ப்ளான் பண்றப்ப, இவன் ஊட்டி போலாம், கொடைக்கானல் போலாம்னு பக்கத்துல தமிழ்நாட்டுக்குள்ள இருக்குற `சீப் அண்ட் பெஸ்ட்’ இடமா நினைச்சு வச்சிருப்பான்! ஆனால், ஆசையா கட்டிக்கிட்ட மனைவி ஆசைப்பட்டு சிம்லா போலாங்கன்னு சொல்லிட்டால் மறுபேச்சு கிடையாது! `என்னடா ஊட்டி போறதா சொல்லிட்டு இப்போ சிம்லான்னு சொல்ற?’ன்னு அம்மா கேட்கறப்பவே அப்பாவுக்கு புரிஞ்சுபோகும், இனி இவனோட பேச்சும் `தனிப்பட்ட கருத்தா’தான் இருக்கும்னு...! 

குழந்தை பிறக்குமுன்பே குழந்தைக்கு ஆணென்றால் இந்த பெயர் வைக்கணும், பெண்ணென்றால் இந்த பெயர் வைக்கணும்னு கணவன் யோசிச்சு வச்சிடுவான். மனைவிகிட்டயும் பெருமையா பீத்திக்கிட்டு இருப்பான். ஆனால், குழந்தை பிறந்ததும் முதலில் ஜாதகம் எழுதுவாங்க.. அடுத்தே அந்த ஜோசியர் கிட்ட என்ன பெயர் வைக்கலாம்னு கேட்பாங்க... அவர் சம்மந்தமே இல்லாத ஒரு பத்து எழுத்தை கொடுப்பார். இவனோட ஆசையெல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆயிடும். நான் இந்த பெயர் வைக்கணும்னு ஆசைப்பட்டேன்னு எவ்ளோ சொல்லிப்பார்த்தாலும் சபையில் எடுபடாது. அது அவனோட தனிப்பட்ட கருத்தா மட்டும்தான் இருக்கும்.

குழந்தை பிறந்ததும் ஒரு கொள்கைப்பிடிப்போட அரசு பள்ளியில்தான் சேர்க்கணும், தமிழ் மீடியத்தில்தான் சேர்க்கணும்னு சொல்ற ஆண்களோட கருத்தெல்லாம் தனிப்பட்ட கருத்தாதான் கண்டுக்கப்படாமல் போகும். மனைவி சீரியல் பார்க்கறப்ப நாம என்னதான் பேசினாலும் அம்புட்டும் தனிப்பட்ட கருத்தாதான் போகும்.

ஃப்ரண்ட்ஸோட ரவுண்டு கட்டி உக்காந்து சரகக்டிச்சுக்கிட்டே பேசுறப்ப... ``மச்சான், நாம சாதிச்சுக்காட்டுறோம்டா... நாம யாருன்னு காட்டுறோம்டா! என்கிட்ட சொல்லிட்டேல்ல, கவலைய விடுடா மச்சான்! மச்சான், உன்ன மாதிரி ஒருத்தன் போதும்டா, நாம எல்லாரும் எங்கயோ போயிடுவோம்டா...’’ என்றெல்லாம் பேசப்படும் கருத்துகள் அனைத்துமே போதை இறங்கும்வரைக்கான தனிபட்ட கருத்துகளே!

'இது அவரது தனிப்பட்ட கருத்து!' - பா.ஜ.க மட்டுமில்ல, நாமளும் இதை அடிக்கடி சொல்றோம்!

மாசக்கடைசியில டிராஃபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டால், நாம, லைசன்ஸ் இருக்கு... இன்சூரன்ஸ் இருக்குன்னு என்னதான் சொன்னாலும் அவர் நம்மகிட்ட எதாவது வசூல் பண்ணியாகணும்னு முடிவு பண்ணிட்டா பண்ணினதுதான்! `ஏன் ஒழுங்கா தலை வாரல’ன்னு கேட்டுக்கூட ஃபைன் போடுவாரு. ஆக, அந்த மாதிரி சிச்சுவேஷனில் நம்மளோட அனைத்து கருத்துக்களுமே தனிப்பட்ட கருத்துகள்தான் பாஸ்!

ஜவுளிக்கடையில துணி எடுக்குறப்ப, ஏதோ கட்டைப்பையை சுமக்கப்போறவராச்சே, பில்லுக்கு பணம் கட்டப்போறவராச்சேங்கற மரியாதை நிமித்தமா, நம்மையும் சேலை செலக்ட் பண்ணச் சொல்வாங்க. நாமளும் ஆர்வமா `இந்த சேலை உனக்கு நல்லா இருக்கும், அந்த சேலை உனக்கு நல்லா இருக்கும்’னு எடுத்துக் காட்டுவோம்.. ஆனால், உடனே `நீங்களும் உங்க செலக்சனும்’னு கேவலமா ஒரு பதில் வரும் பாருங்க. நம்ம கருத்து இங்கயும் தனிப்பட்ட கருத்துதான்!

அலுவலகத்தில் நாம என்னதான் மாங்குமாங்குன்னு வேலை பார்த்தாலும் நம்ம டீம்லயே சோப்பு போடுற கேஸ் ஒருத்தன் இருப்பான்... எதாவது மீட்டிங்ல கருத்து கேட்கறப்ப, நாம ரொம்ப யோசிச்சு தப்பு, சரியெல்லாம் அலசி ஆராய்ந்து கருத்து சொல்வோம், ஆனால், அந்த சோப்பு பார்ட்டி மொக்கையா ஒரு ஐடியாவ கொடுத்து நல்ல பெயர் எடுத்துட்டு போயிடுவான்! `அவனை பார்த்து எல்லாரும் கத்துக்கணும்’னு அட்வைஸ் வேற சொல்வாய்ங்களே பார்க்கணும். நம்ம கருத்து எந்த காலத்துலயும் தனிப்பட்ட கருத்துதான் பாஸ்!

`முகநூலிலிருந்து விடைபெறுகிறேன்’னு  அதே முகநூலில் பதிவு போட்டு சிம்பதி தேடுறவங்களோட பதிவுகள் பெரும்பாலும் தனிப்பட்ட கருத்தாத்தான் இருக்கும். சொல்லிட்டு ரெண்டு நாள் முகநூலுக்கு வராம இருப்பாங்க... மூணாவது நாள் விடிஞ்சதும் முகநூலுக்கு வந்து வணக்கம் போட்டுட்டு முதல் பதிவுலயே `என்ன ஃப்ரண்ட்ஸ் என்னைக் காணும்னு தவிச்சு போயிட்டிங்களா’னு ஒரு சீன் போடுவாங்களே பார்க்கணும். ஆக, உலகம் முழுவதுமே தனிப்பட்ட கருத்து சொல்பவர்களோட தான் பாஸ் இயங்கிகிட்டு இருக்கு! இப்போ இந்த கட்டுரை கூட என்னோட தனிப்பட்ட கருத்துதான்னு சொல்லிட்டு முடிச்சுக்கறேன்! 

அடுத்த கட்டுரைக்கு