Published:Updated:

ஆறாது சினம் - சினிமா விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆறாது சினம் - சினிமா விமர்சனம்
ஆறாது சினம் - சினிமா விமர்சனம்

ஆறாது சினம் - சினிமா விமர்சனம்

பிரீமியம் ஸ்டோரி

`அந்நியன்' படத்தின் கிறிஸ்தவ வெர்ஷனான மலையாள `மெமரீஸ்'ஸின் தமிழ் வெர்ஷன்.


பயம் அறியா போலீஸ் அருள்நிதி, தன் மனைவி மற்றும் மகளை எதிரி கொன்றபின் சரக்குக்கு அடிமையாகிறார். அப்போதும் அவரை நம்பும் மேலதிகாரி, தொடர்கொலைகள் வழக்கு ஒன்றை அவர் வசம் ஒப்படைக்க, ஆரம்பிக்கிறது ஆபரேஷன். மூன்று கொலைகளிலும் கொலையாளி விட்டுச்செல்லும் `கபீம் குபாம்' கனெக்‌ஷனைக் கண்டுபிடிப்ப தோடு, தன்னையும் ஆல்கஹாலில் இருந்து மீட்கிறார் அருள்நிதி.

கொஞ்சம் கொஞ்சமாக செட்டிலாகும் கதை, செகண்ட் ஹாஃபில் பரபரக்கிறது. முகம் தெரியாத அந்த வில்லனை, அருள்நிதி நெருங்க நெருங்க டென்ஷன் எகிறுகிறது. கொலைகளுக்குக் காரண மான அந்த ஃப்ளாஷ்பேக் சின்னப் புள்ளத்தனம் என்றாலும், கதை சொல் லலில் அட்டென்ஷனில் நிற்கவைக்கிறார் இயக்குநர் அறிவழகன். `பாபநாசம்' புகழ் ஜீத்து ஜோசப்பின் கதையில் காதல் மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா. தனது நேர்த்தியான மேக்கிங்குக்கு, இந்த எமோஷனல் கதை சரியாக இருக்கும் என்ற அறிவழகனின் ஐடியாவுக்கு லைக்ஸ். ஆனால், காஸ்டிங்கில்தான் பிரச்னை.

ஆறாது சினம் - சினிமா விமர்சனம்

பிளாக் அண்ட் வொயிட்டாக இரண்டு கேரக்டர்கள் அருள்நிதிக்கு. நடிப்பில் சமாளித்திருக்கிறார். கதைக்கும் பாடலுக்கும் என இரண்டு ஐஸ்வர்யாக்கள். அந்த ஹைபர் டென்ஷன் வில்லன், `இவரா?' என நம் பிபி-யை ஏற்றுகிறார் கெளரவ். சிரிப்புக்கா சீரியஸுக்கா... எனத் தெரியாமல் ரோபோ சங்கரும் சார்லியும் படத்தின் அன்லைக் பட்டன்கள். `பண்ணையாரும் பத்மினியும்' புகழ் துளசி, கமர்ஷியல் கதைகளுக்கு ஏற்ற புது அம்மா.

அருள்நிதி, குடிகாரர் என்பதற்காக எல்லா சீன்களிலும் குடித்துக்கொண்டேவா இருப்பார்? டாஸ்மாக்கின் தீபாவளி கலெக்‌ஷனைத் தாண்டுகிறது அருள்நிதியின் மதுச் செலவு. கொலைகாரனும் கொலைக்கான காரணமும் தெரிந்த பின்னர், அரை மணி நேரம் கதையை இழுப்பது

ஆறாது சினம் - சினிமா விமர்சனம்

ஏன்? ஒருவன் பிணத்தை, தனி ஆளாக செல்போன் டவர் மீது தூக்கிச்சென்று கட்டுவது எப்படி? ரீமேக்கும்போது இதைத்தான் சரிசெய்திருக்க வேண்டும் இயக்குநர்.

தமனின் இசை, பாடல்களுக்கு ஓ.கே; பின்னணி இசைக்குத்தான் போதவில்லை. ராஜேஷ் கண்ணனின் எடிட்டிங், அரவிந்த் சிங்கின் லைட்டிங்கும் ஆங்கிள்களும் த்ரில்லர் உணர்வைக் கச்சிதமாக உருவாக்குகின்றன.

இன்னும்கூட சூடாக இருந்திருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு