``அமெரிக்காவில் உள்ள ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடந்த குறும்பட நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஒவ்வொரு குறும்படமும் செம ஃபிரெஷ். அவை புதுப்புதுக் கதைகள் சொல்லின. இங்கேயும் அதுபோல போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தணும்'' என்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். த்ரில் `பீட்சா' கொடுத்து, `ஜிகர்தண்டா'வில் வேற லெவல் தொட்டு, இப்போது `இறைவி' என படத்தின் தலைப்பிலேயே பொறிவைக்கிறார்.

``இறைவனோட பெண்பால்தான் `இறைவி'. நம்மைச் சுற்றி இருக்கும் பெண்களின் கதைதான் படம். எல்லா வேலைகளும் முடிஞ்சு, படம் ரிலீஸுக்குத் தயாரா இருக்கு.''

``எஸ்.ஜே.சூர்யாவையும் நடிக்கவெச்சிருக்கீங்களே... அவருக்கு என்ன ரோல்?’’

``இந்தக் கதையை எழுதும்போதே லீட் ரோலில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்.

எஸ்.ஜே.சூர்யா சார் படங்களுக்கு நான் பெரிய ஃபேன். அவருடைய ஆட்டிட்யூட் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நார்மலா பேசும்போதே செம கிண்டல், கேலி பண்ணுவார். அதை அப்படியே படத்துலயும் காட்டியிருக்கேன். `இதுல அவர் நடிச்சிருக்கார்’னு சொல்றதை விட `அவர் அவராவே வாழ்ந்திருக்கார்’னு தான் சொல்லணும்.''

``உங்க மூன்றாவது படத்திலும் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா தொடர்ந்து நடிக்கிறாங்க. அப்படி என்ன ஸ்பெஷல்?’’

``இன்னொருத்தர் பேரை விட்டுட்டீங்க... கருணாகரன். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கருணாகரன் மூணு பேருமே பிரமாதமான நடிகர்கள். இந்தப் படத்துல இவங்க ஏன் ஸ்பெஷல்னா... இவங்களை ரெஃபெரன்ஸா வெச்சுத்தான் கதையே எழுதினேன். இவங்க ப்ளஸ் என்னன்னு மத்தவங்களைவிட எனக்கு நல்லா தெரியும். அதனாலதான் தொடர்ந்து வொர்க் பண்றோம். உறுத்தல் இல்லாமல் இயல்பா இருப்பது நல்லதுதானே பிரதர்?’’

``செம ஸ்பீடா படங்களை இயக்கி முடிச்சிடுறீங்களே... உங்க வொர்க்கிங் ஸ்டைல் என்ன?’’

``சரியான பிளானிங்தான். நான் இயக்கிய மூணு படங்கள்லயுமே ஸ்பாட்டுக்குப் போன பிறகு, `அப்படி மாத்தலாமா... இப்படி மாத்தலாமா?'னு யோசிச்சதே கிடையாது. ஏற்கெனவே என்ன முடிவு பண்ணியிருந்தேனோ, அதைத்தான் எடுப்பேன். அதுக்கு, ஆர்ட்டிஸ்ட் சப்போர்ட்டும் டெக்னீஷியன்ஸ் உழைப்பும்தான் முக்கியக் காரணம். ஒரு படத்தை வேகமா ஷூட் பண்ணி, ரிலீஸுக்குக் கொண்டுவர்றதுதான் சினிமாவுக்கும் எங்களுக்கும் நல்லது.''

``எந்த மாதிரியான ஜானரில் படங்கள் பண்ண ஆசை? உங்க சினிமாவில் என்னவெல்லாம் சொல்ல ஆசைப்படுறீங்க?’’

``அது ஒரு பெரிய பட்டியலே இருக்கு. ஒவ்வொரு படத்துக்கும் கதை சொல்ற ஸ்டைல் வேற மாதிரி இருக் கணும். அது காமெடியா இருக்கலாம்; த்ரில்லரா இருக்கலாம்; லவ் சப்ஜெக்ட்டா இருக்கலாம். திரையில் எதைச் சொன்னாலும் ஒண்ணுக்கு ஒண்ணு வித்தியாசமா வேற ஒரு வெரைட்டியா சொல்லணும்.''

``குறும்படங்களுக்கு என தனி மார்க்கெட் உருவாக்கணும்னு நினைக்கிறீங்க. பெரிய ஸ்கிரீன்ல குறும்படங்களை ரசிப்பாங்கனு நினைக்கிறீங்களா?’’

``டவுட்டே இல்லை, நிச்சயம் ரசிப்பாங்க. குறும்படங்களை ரசிக்க இங்கே பெரிய குரூப் இருக்கு. இதுக்கு நாம தரமான படங்களைத் தரணும்... அவ்வளவுதான். குறும்படங்கள் கான்செப்ட் தொடர்ந்து வந்தால், இன்னமும் நிறையத் திறமைசாலிகள் லைம்லைட்டுக்கு வர வாய்ப்பு இருக்கு. பெரிய திரையில் சொல்ல முடியாத கதைகளை எல்லாம் குறும்படங்கள் மூலமா சொல்லலாம். எங்கள் இலக்கு, சினிமா ரசிகர்கள் எல்லாரும் குறும்படங்கள் பார்க்க தியேட்டருக்கு வரணும் என்பதுதான். எல்லாரும் வருவாங்கங்கிற நம்பிக்கை இருக்கு.''

``சரி... ரெண்டாவது முயற்சியா `அவியல்' என்கிற பெயரில் குறும்படங்களைத் தயாரிச்சிருக்கீங்க. இதில் என்ன ஸ்பெஷல்?’’

``ஆங்கிலத்தில் `Anthology film’னு சொல்வாங்க. ஒரே தீம்கொண்ட வேற வேற குறும்படங்களைச் சேர்த்துப் பண்றதுதான் இது. `அவியல்'-ல ஐந்து குறும்படங்கள் இருக்கு. ஐந்துக்கும் ஒரு சின்னத் தொடர்பு இருக்கும். ஆனா, ஐந்துமே வேற வேற மாதிரி இருக்கும். இது முழுக்க டார்க் காமெடி படம். அஞ்சு பேர்ல நாலு பேர் புது இயக்குநர்கள். ஒருத்தர் `பிரேமம்' பட இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன். இவர் எடுத்த படத்துல பாபியும் நிவின் பாலியும் நடிச்சிருக்காங்க. மற்ற நாலு படங்களையும் லோகேஷ் கனகராஜ், குரு சமரன், சமீர் சுல்தான், மோஹித் மெஹ்ரானு நாலு இயக்குநர்கள் இயக்கியிருக்காங்க.''

``ஆனா, கடந்த வருடம் இதேபோல் ரிலீஸ் ஆன `பெஞ்ச் டாக்கீஸ்' சரியா போகலையே?’’

``போன முறை யாருமே முதலில் ரிலீஸ் செய்ய முன்வரலை. சென்னையில் உள்ள ரெண்டு பெரிய தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செஞ்சோம். ஆனா, அவங்களே `வாரத்துக்கு ஒரு ஷோ மட்டும்தான் போட முடியும்'னு முதல்ல சொன்னாங்க. நாங்கதான் `ஒரு படம் ரிலீஸ் பண்ற மாதிரியே பண்ணுங்க. நிறைய ஷோ போடுங்க'னு சொன்னோம். முதலில் ஒரு வாரம்தான்னு சொன்னவங்க, நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சதும் மூணு வாரம் ஓட்டினாங்க. இப்ப `அவியல்'-ஐ தமிழ்நாடு முழுக்க 60 முதல் 70 ஸ்கிரீன்ஸ்ல ரிலீஸ் பண்ணப்போறோம். ''

``உங்க அப்பா கஜராஜ் முழுநேர நடிகராகிட்டாரே?’’

``அப்பா, இப்போ ரொம்ப பிஸி. முதலில் என் குறும்படங்களில்தான் நடிச்சிட்டிருந்தார். இப்ப பெரிய படங்களில் நடிக்க ஆரம்பிச்சுட்டார். ரஜினி சார்கூட `கபாலி' படத்துல நடிச்சிட்டிருக்கார். அப்பா, தீவிரமான ரஜினி ரசிகர். இப்ப அவர்கூடவே நடிப்பதில் அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம்.''

``சமீபத்தில் பார்த்ததில் பிடித்த தமிழ் சினிமா?’’

`` `இறுதிச்சுற்று', `விசாரணை' ரொம்பப் பிடிச்சிருந்தது. `விசாரணை’ ரொம்ப போல்டான முயற்சி. போன வருஷம் வந்ததில் `கிருமி' நல்லா இருந்தது.''

``உங்களுக்குப் பிறகு வந்திருக்கும் இயக்குநர்களில் யார் உங்களை இம்ப்ரெஸ் பண்ணியிருக்காங்க?’’

`` `சேதுபதி' அருண், `இன்று நேற்று நாளை' ரவி, `ஜில் ஜங் ஜக்' தீரஜ்னு நிறையப் பேர் இருக்காங்க. இன்னும் ஒரு பெரிய படையே வந்துட்டிருக்கு!''