பிரீமியம் ஸ்டோரி

``என்னய்யா... நான் இவ்வளவு பேசுறேன்.

ஜோக்ஸ் - 1

என் மேல ஒரு அவதூறு வழக்குக்கூட போட மாட்டேங்கிறாங்க?’’

``மைண்ட் வாய்ஸுக்கு எல்லாம் வழக்கு போட மாட்டாங்க தலைவரே!’’

- அவ்வை கே.சஞ்சீவிபாரதி

ஜோக்ஸ் - 1

``நம்ம படத்துல வர்ற பேய், கடைசியில் என்னாகுது?’’

``கண்ணாடி முன்னாடி நின்னு, அதைப் பார்த்தே அது பயந்து ஓடிருது.’’

- யுவகிருஷ்ணா

ஜோக்ஸ் - 1

``சார்... என் பையன் இந்த மாசம், இருபது நாள் டியூஷனுக்கு வரலை. அதனால...’’

``அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லீங்க. ஃபீஸ் கொடுக்கிறதுக்கு மட்டும், ஒரு நாள் வந்துட்டுப் போனா போதுங்க.’’

- ஆர்.ராஜ்குமார்

ஜோக்ஸ் - 1

``ரிப்போர்ட் என்ன சொல்லுது டாக்டர்?’’

``எல்லாமே `எனக்குத்தான்'னு சொல்லுது!’’

- அவ்வை கே.சஞ்சீவிபாரதி

ஜோக்ஸ் - 1 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு