பிரீமியம் ஸ்டோரி

‘‘எதிர்க்கட்சியினரை நான் ஒன்று கேட்கிறேன்...’’

ஜோக்ஸ் - 3

‘‘கேட்டது எதுவுமே கிடைக்கலைன்னுதானே அந்தக் கூட்டணியில் இருந்து விலகி வந்தோம் மறந்துட்டீங்களா தலைவரே!’’

- கொளக்குடி சரவணன்

‘‘நம்ம தலைவர் எப்படியாவது ஒரு கூட்டணி சேர்க்கணும்னு துடியாத் துடிக்கிறார்?”

‘‘ஏன்?’’

ஜோக்ஸ் - 3

‘‘தேர்தலுக்குப் பிறகு ஒரு கட்சிக்கு ஒரு கட்சி ஆறுதல் சொல்ல வசதியா இருக்கும்னுதான்!''

- சாயம் வெ.ராஜாராமன்

‘‘நம்ப தலைவர் எலெக்‌ஷன்ல நிக்கிறதுக்காக அவர் குடியிருந்த வீட்டையே வித்துட்டாரு!’’

‘‘சரி, இதுல என்ன தப்பு இருக்கு?’’

ஜோக்ஸ் - 3

‘‘நீங்க வேற அவர் குடியிருந்தது வாடகை வீடு!’’

- வி.சாரதி டேச்சு

‘‘ `மூணு லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்'னு செய்தியைப் படிச்சதும், தலைவர் தலையில் கைவெச்சு உட்கார்ந்துட்டாரே ஏன்?”

ஜோக்ஸ் - 3

‘‘கட்சியையே காலி பண்ணிட்டாங்களேனுதான்!’’

- கி.ரவிக்குமார்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு