Published:Updated:

“அப்பாகூட நடிக்க வெயிட்டிங்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“அப்பாகூட நடிக்க வெயிட்டிங்!”
“அப்பாகூட நடிக்க வெயிட்டிங்!”

பா.ஜான்ஸன், படம்: சு.குமரேசன்

‘ஒரு பக்க கதை’, ‘மீன் குழம்பும் மண்பானையும்’ என அடுத்தடுத்து இரண்டு படங்கள் காளிதாஸ் கையில். நடிகர் ஜெயராமின் மகன். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், இப்போது மில்லினியல் ஹீரோ!

`‘ `ஒரு பக்க கதை’ டப்பிங் பேசும்போது முழுப் படமும் பார்த்தேன்.

‘அட... நாமளும் ஹீரோ ஆகிட்டோம்’கிற ஃபீல் ரொம்ப சந்தோஷமா இருந்தது” - அடக்கமாகப் பேசுகிறார் காளிதாஸ்.

``ரொம்பச் சின்ன வயசுலயே ஹீரோ ஆகிட்டீங்களே?''

``இந்த வயசுலதான், நிறைய பரிசோதனை முயற்சிகள் பண்ண முடியும்; நிறைய டிராவல் பண்ணலாம். கொஞ்சம் தடுமாற்றம் வந்தாலும் மறுபடியும் எழுந்து வர டைம் இருக்கும்.  இப்போதைக்கு வயசுதான் என் பெரிய ப்ளஸ்.''

``முதல் படம் மலையாளத்துல பண்ணியிருக்கலாம்னு தோணுச்சா?''

``பாஸ், எனக்கு சென்னைதான் சொந்த ஊரு. ஸ்கூல், காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாமே இங்கேதான். அதனால், தமிழ்ல நடிக்கிறதுதான் வசதியா இருக்கு.''

“அப்பாகூட நடிக்க வெயிட்டிங்!”

``பிரபுவும் உங்க அப்பாவும் நல்ல நண்பர்கள். அவரோடு நடிச்ச  அனுபவம் எப்படி இருந்தது?''

``அவர்கூட நடிக்கிறது ஒரு ஸ்கூல் டீச்சர்கூட இருக்கிற மாதிரி. என்ன பண்ணணும்... எவ்வளவு பண்ணணும்னு எல்லாமே சொல்லிக்கொடுப்பார். அவர்கூட ஸ்கிரீன் ஷேர் பண்றது பெரிய கிஃப்ட். பொதுவா அப்பா பத்தி யார் பேசினாலும் `ஜெயராம், ரொம்ப அமைதியானவர்’னு சொல்லிட்டுத்தான், அடுத்த வார்த்தையே பேசுவாங்க.

பிரபு சார் ஒருநாள் அப்பாகூட பேசிட்டிருந்தப்போ ‘ஜெயராம்... நீங்கதான் அமைதினு பார்த்தா, உங்க பையன் அதைவிட அமைதி’னு சொன்னார். எனக்கு அதில் ரொம்பப் பெருமை.''

``மிமிக்ரி ஆர்வமும் அப்பாகிட்ட இருந்து வந்ததுதானா?''

``ஆமா... நான் ஸ்கூல் டைம்லயே மிமிக்ரி பண்ணுவேன். ஸ்கூல்ல எல்லா டீச்சர்ஸ் மாதிரியும் பேசுவேன். காலேஜ் வரும்போது அது இன்னும் டெவலப் ஆகிருச்சு. இருபத்திரண்டு வாய்ஸ்கள் பேசுவேன். சூர்யாண்ணா, அஜித்ண்ணா வாய்ஸ் ரொம்பப் பிடிக்கும். என் மிமிக்ரிதான் இயக்குநர் பாலாஜி என்னைக் கவனிக்கக் காரணம்.''

``ஷூட்டிங் ஸ்பாட்ல நீங்க செம கலாட்டா பார்ட்டியாமே?’’

`` `ஒரு பக்க கதை' படத்துல எனக்கு ஜோடி மேகா ஆகாஷ். அவங்களை காலேஜ் டேஸ்ல இருந்தே எனக்குத் தெரியும். நடுவுல டச் விட்டுப்போச்சு. நான் முன்னாடி 110 கிலோ எடை இருந்தேன். முதல் படம் கமிட் ஆகுறதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் எடையைக் குறைச்சேன். எடை குறைஞ்சதால என்னை அவங்களுக்கு அடையாளம் தெரியலை.

`நீங்க காளிதாஸ் தம்பியா?'னு கேட்டாங்க. `அய்யோ... அந்தக் குழந்தையே நான்தான்'னு சொன்னேன். அவங்க நம்பவே இல்லை. ஒருநாள் செட்ல நான் மிமிக்ரி பண்ணிட்டிருந்தேன். அவங்க வந்து பார்த்தாங்க. அவங்க வந்ததும், டக்குனு அவங்களை மாதிரியே மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சுட்டேன்... மிரண்டுட்டாங்க.’’

``அந்த சாக்லேட் விளம்பரம்?’’

``என் ஃபேஸ்புக் போட்டோக்களைப்  பார்த்துட்டு மும்பையில் இருந்து கேட்பரி சாக்லேட்  விளம்பரத்தில் நடிக்கக் கேட்டு கால் பண்ணினாங்க. ஃப்ரெண்டு யாரோ கலாய்க்கிறாங்கனு நினைச்சுட்டு, `டேய் காமெடி பண்ணாதீங்கடா’னு கட் பண்ணிட்டேன். மறுபடியும் கால் வந்தப்போதான் மும்பை நம்பரை வெச்சு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன். ரெண்டு ரவுண்ட் ஆடிஷன் வெச்சு செலெக்ட் பண்ணாங்க. சாக்லேட் விளம்பரத்துல நடிக்க ஆரம்பிச்சு, இப்போ சாக்லேட் பாயா மாறிட்டேன். சூப்பர்ல?’’

“அப்பாகூட நடிக்க வெயிட்டிங்!”

``எப்போ அப்பாகூட சேர்ந்து நடிக்கப்போறீங்க?’’

``நிறைய ஆஃபர்ஸ் வருது. ஆனா, நல்ல ஸ்கிரிப்ட் அமையலை. நான் சின்னப் பையனா இருந்தப்போ அப்பாவோடு சேர்ந்து நடிச்சது. நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்சா நாளைக்கே நான் ரெடி.’’

``அப்பாகூட மறக்க முடியாத ஒரு சம்பவம்?’’

``அப்பாவும் நானும் சமீபத்துல அமெரிக்கா போயிருந்தோம். மிச்சிகன் பார்டர்ல முதல்முறையா இந்தியர் ஒருத்தர் ஒரு மியூஸிக் ஷோ பண்ணினார். அந்த ஷோ பார்த்தோம். ஷோ முடிஞ்சதும் நானும் அப்பாவும் அவங்க இசைக் கருவிகளை எடுத்துட்டு ரோட்ல நின்னு சும்மா வாசிச்சோம். அப்போ அந்தப் பக்கமா வந்த ஒருத்தர் எங்க முன்னாடி காசைப் போட்டுட்டுப் போயிட்டார். `அட இது நல்லா இருக்கே’னு, ஜாலியா மூணு மணி நேரம் வாசிச்சோம்... செம கலெக்‌ஷன். அந்த ட்ரிப் முழுக்க அந்தக் காசைவெச்சுத்தான் என்ஜாய் பண்ணினோம்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு