பிரீமியம் ஸ்டோரி

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு, வரும் சம்மரில் டும்டும்டும். வழக்கம்போல அமெரிக்க மாப்பிள்ளைதான். `என் திருமணப் படங்கள் எங்கேயும் வெளியாகாது. திருமணம் முடிந்தவுடன் படங்களை நானே ஏலத்தில் விடப்போகிறேன். அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக்கும், முதியோர்களுக்கான உதவிகளும் செய்ய இருக்கிறேன்’ என அறிவித்திருக்கிறார் ப்ரீத்தி!

பிட்ஸ் பிரேக்

புலிக்கு புட்டிப் பால் ஊட்டி ஆன்லைனை அலறவிட்டிருக் கிறார் ஏமி ஜாக்சன். புலிக் குட்டியை கட்டி அணைத்தபடி `என் பப்லோ(வீட்டு நாய்)வுடன் விளையாட பார்ட்னர் கிடைத்துவிட்டார்' என ட்விட்டரில் ஏமி போட்டோ போட, `புலியையே பூனையா டீல் பண்ணும் உண்மையான ஆக்‌ஷன் ஸ்டார்' என கமென்ட்ஸால் களைகட்டு கிறது ஏமியின் ட்விட்டர் பக்கம்!

பிட்ஸ் பிரேக்

யக்குநர் பால்கி `கி அண்ட் கா' பட புரொமோஷனில் பிஸியாக இருக்க, அவரது மனைவி கெளரி ஷிண்டே, ஷாரூக் கான் படத்தில் பிஸி. `இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஸ்ரீதேவியை இயக்கிய கெளரி, அடுத்து இயக்கும் படம் பெண்களின் `ஆட்டோகிராஃப்' வெர்ஷன் என்கிறார்கள். அலியா பட்டும் அவர் காதலிக்கும் மூன்று ஆண்களும் படத்தின் கதை. முதல் காதலாரக நடித்திருப்பவர் ஷாரூக் கான்.

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

``இளைஞர்களிடம் அதிகரித்துவரும் செல்ஃபி மோகம் என்னை அச்சப்படவைக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். அங்கே அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைகிறேன் நான்கைந்து இளைஞர்கள் என்னிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். `இங்கேயா?!' எனக் கேட்டேன். `ஆமாம் இங்குதான்' எனக் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்கள். அவர்களை, `எல்லோரும் எங்கே நின்று போட்டோ எடுக்கிறார்களோ... அங்கே செல்லுங்கள்' என விரட்டி விட்டேன். எங்கே, எதைச் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு யார் சொல்லிக்கொடுப்பது'' என ஆதங்கப்படுகிறார் அமிதாப்!

பிட்ஸ் பிரேக்

`பிரேமம்' படத்தின் தெலுங்கு வெர்ஷன் `மஜ்னு'. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் டோலிவுட்டின் லேட்டஸ்ட் வைரல். நிவின் பாலி கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடிக்க, மலர் டீச்சராக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் மலர் டீச்சர் பெயர் என்ன தெரியுமா? சித்தாரா டீச்சர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு