போலிச் சான்றிதழ் நெட்வொர்கை, தன் மீடியா நெட்வொர்க் உதவியுடன் டெலீட் செய்யும் ஒரு ரிப்போர்ட்டரின் கதை.

லோக்கல் டி.வி சேனல் ரிப்போர்ட்டர் அதர்வாவுக்கு, பி.பி.சி-யில் சேர்வது கனவு. அது நனவாகும் தருணத்தில் கல்விக்கடன் வாங்கி மோசடி செய்ததாகக் கைதாகிறார். தனது ஒரிஜினல் சான்றிதழில் இருந்து போலிச் சான்றிதழ் தயாரித்து, அதன்மூலம் நடக்கும் மோசடிக்குப் பின்னால் உள்ள மாஃபியா கும்பலை அழிக்கத் திட்டமிடுகிறார். அந்த ப்ளானிங்கில் வென்றனா இந்தக் ‘கணிதன்’?

சிக்ஸ்பேக் பாடியும் நாலைந்து நாள் தாடியு மாக துறுதுறு அதர்வா, ரிப்போர்ட்டர் கேரக்டருக்கு செம ஃபிட். ‘மெட்ராஸ்’ ஒல்லிபெல்லி கேத்ரீன் தெரேசாவா இது? எக்ஸ்ட்ரா வெயிட் ஏற்றி கிறுகிறுக்கவைக்கிறார். வருகிறார், ஆடுகிறார், போகிறார். வில்லன் தருண் அரோரா... ‘இப்போ வெடிப்பார், அப்போ வெடிப்பார்' எனக் காத்திருந்தால், கடைசி வரை காத்திருக்க மட்டுமே வைக்கிறார். நட்புக்காக உயிரைவிடும் நண்பர்களாக கருணாகரன், பாக்யராஜ்... தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் கேரக்டர்கள்.

‘போலிச் சான்றிதழ் நெட்வொர்க்’ என, புது ஏரியா பிடித்ததிலேயே இயக்குநர் ஹேப்பி. லாஜிக் எல்லாம் சாய்ஸில் போகிறது. அதர்வாவின் வழக்கை அவர் கைதுசெய்யப்பட்ட அன்றே விசாரித்து, தண்டனையும் அறிவித்து, அவரை ஜாமீனிலும் விடுவித்து, யப்பப்பப்பா... 4ஜி ஸ்பீடு. பி.பி.சி இன்டெர்வியூ லெட்டர் திறந்தே வருவது, ஒரு பெண் ரிப்போர்ட்டர், அதர்வாவுக்காக உயிரைக் கொடுக்க அன்று இரவே அதர்வா அண்ட் கோ குடித்துவிட்டு கும்மாளம்போடுவது, அதிகார மையங்களையே தன் கண்ணசைவில் வைத்துள்ள வில்லன், தன்னைத் துரத்துவது அதர்வாதான் எனக் கண்டறிய முடியாமல் திணறுவது... முடியலை ப்ரோ!

புதுமுக இயக்குநர் டிஎன்.சந்தோஷின் ஸ்கிரிப்ட்டில் ஒவ்வொரு சீனிலும் (ஏ.ஆர்.முருகதாஸுக்கு) குருதட்சணை தெரிகிறது. `துப்பாக்கி', `கத்தி', `ரமணா' காக்டெயிலைப் பார்த்த ஃபீல். அரை மணி

நேரத்துக்கு முன்னரே படம் முடிந்த பிறகும், ‘வாடா வாடா... என் ஏரியாவுக்கு வாடா’ என வம்படியாக இழுத்து அடிக்கிறார்கள். ஆங்காங்கே வரும் சேஸிங்கும் ஆக்ஷனும் மட்டுமே என்டர்டெயின்மென்ட்.

டிரம்ஸ் சிவமணி இசையில் அனிருத் பாடிய பாடல் மட்டுமே ஓ.கே. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, படத்துக்கு டெரா பைட் பலம். நைட் எஃபெக்ட், சேஸிங் காட்சிகளில் பரபரக்கவைக்கிறார்.
கால்குலேட்டரைவிட வேகமாகக் கணக்கிடுகிறான் `கணிதன்'. ஆனால், ரிசல்ட்தான் மிஸ்ஸாகிறது!

- விகடன் விமர்சனக் குழு