பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்

பிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
பிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்

பிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்

கோடீஸ்வர மகன், அம்மாவுக்காக பிச்சைக்காரனாகும் டென்ட்கொட்டாய் காலக் கதை.

ஒரு விபத்தில் கோமாவுக்குச் சென்றுவிடுகிறார் விஜய் ஆண்டனியின் அம்மா. எந்த மருத்துவத்தாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ‘பணம் துறந்து, அடையாளம் மறைத்து 48 நாட்கள் பிச்சைக்காரனாக வாழ்ந்தால், உன் அம்மா பிழைப்பார்’ என்கிறார் ஒரு சாமியார். `அது நடக்கும்’ என்ற நம்பிக்கையுடன் பிச்சைக்காரனாகிறார் விஜய் ஆண்டனி. சொத்துக்களைக் கைப்பற்ற நினைக்கும் பெரியப்பா, துரத்தும் ரௌடிகள் என அந்தத் தலைமறைவு வாழ்க்கையில் அரை டஜன் வில்லன்கள். கூடவே ஒரு காதலும். அத்தனையையும் சமாளித்து மீண்டும் கோடீஸ்வர கோட் மாட்டினாரா... அம்மா உயிர் பிழைத்தாரா என்பதே ‘பிச்சைக்காரன்’.

இன்னோர் ‘அடையாளம்’ மறைக்கும் கதையில் ஜம்மெனப் பொருந்துகிறார் விஜய் ஆண்டனி. ஆனாலும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாத்துவீங்க? கொஞ்சம் நடிங்க ப்ரோ. ஹீரோயின் சாட்னா டைட்டஸ் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

பிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்

ஆடி கார் ஓட்டும் மோகன் ராமின் `ராயல் ஃபேமிலி' கலாட்டா, இந்தியா வல்லரசாக ஒரு பிச்சைக்காரர் சொல்லும் ஐடியா, பிச்சை போடுபவரிடம் எகத்தாளம் செய்யும் பிச்சைக்காரரின் லாஜிக்... என ஆடியன்ஸ் பல்ஸ் பிடித்து வெடிச்சிரிப்பு மேட்டர்களை சரியான இடைவெளிகளில் புகுத்துகிறார் இயக்குநர் சசி.

‘ஏந்துற கை என்னைக்கும் ஓங்காது’, ‘நம்பிக்கையின் பலமே முழுசா நம்புறதுல தான் இருக்கு’, ‘தலை வாரும்போது ஒரு முடி விழுந்ததா நினைச்சுக்கோ’, ‘அவங்க உள்ளே போய் முதல்ல சாமிகிட்ட பிச்சை எடுப்பாங்க. பிறகு, வெளியே வந்து நமக்குப் பிச்சை போடுவாங்க’... `பிச்சைக்கார'னில் நிஜ பணக்காரன் சசியின் வசனம்தான்.

பிச்சைக்காரனாக மாறும் ஆரம்பத் தருணத்தில் மட்டுமே அந்த வலி பதிவாகிறது. பிச்சை எடுக்க

பிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்

வருபவருக்கு எதற்கு அந்த கோட் சூட், சூட்கேஸ்? தவிர, அடுத்தடுத்த காட்சிகளில் ‘பிச்சை’யை சாய்ஸில் விட்டுவிட்டு காதல், ஆக்‌ஷன், சேஸிங், பீட்சா ஷாப்... என, படம் மாஸ் மசாலாவுக்குள் விழுந்துவிடுகிறது.

விஜய் ஆண்டனி நடித்த படங்களில் இதில்தான் இசை ஏமாற்றியிருக்கிறது. அந்தப் பிச்சைக்காரன் தீம் மட்டும் எனர்ஜெட்டிக். பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு, சரியான டோன் பிடித்திருக்கிறது.
கோடீஸ்வரனும் அல்ல; பிச்சைக்காரனும் அல்ல... மிடில் கிளாஸ்.

- விகடன் விமர்சனக் குழு