##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எரிகிற தீ, பெட்ரோல் கதையாக 'வானம்’ பட இயக்குநர் க்ரிஷ் என்கிற ராதாகிருஷ்ணன் 'க்ரிஷ் ஃபால்ஸ் இன் லவ்’ என்று ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தட்ட... யூகங்கள் றெக்கை முளைத்துடுத்து! 'அனுஷ்காதானே அது?’ என்ற கேள்விகளுக்கு, 'என் ஸ்க்ரிப்ட்டைக் காதலிக்கிறேன்!’ என்று சிரித்துச் சமாளித்தார் க்ரிஷ்.

'' 'வானம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பு 'வேதம்’ படத்தின் இயக்குநரும் இதே க்ரிஷ்தான். அப்பவே அனுஷ்காவுக்கும் க்ரிஷ§க்கும் காதல் பத்திகிச்சு. தமிழ் ரீ-மேக்கிலும் அனுஷ்காவையே நடிக்கவைத்ததற்கு அந்தக் காதல்தான் காரணம்!''என்று கசமுசா சமோசா கடிக்கிறார்கள் சினிமா ரிப்போர்ட்டர்கள்.
''வானம்’ பட இயக்குநர் க்ரிஷிடம் பேசினேன். 'வானம்’ படம் பண்ண ஆரம்பிச்சதில் இருந்தே வதந்தி மழைதான். சிம்புவுக்கும் எனக்கும் சண்டைன்னு எழுதினாங்க. இப்போ அனுஷ்காவுக்கும் எனக்கும் காதலா? ஓ.கே ஃபைன்! ஆனா, அனுஷ்கா எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவரை 'அம்மா’ன்னுதான் கூப்பிடுவேன். ஓ.கே கூல்..!'' என்றார்.
அம்மாடி... ஆத்தாடி!