பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

 ``மன்னா, உங்களைப் பற்றிய கமென்ட் ஒன்று ‘வாட்ஸ் அப்’பில் வைரலாகிவருகிறது?’’

‘‘என்ன அது?’’

‘‘ `மன்னரை தேரில் பார்த்திருப்பீங்க, பதுங்குகுழியில் பார்த்திருப்பீங்க, ஏன் அவையில்கூடப் பார்த்திருப்பீங்க, போர்க்களத்தில் பார்த்திருக்கீங்களா?’னு!

- இளசை விசாகன்

ஜோக்ஸ் - 3

 “படையெடுத்துவரும் எதிரி எப்படிப்பட்டவன் என உமக்குத் தெரியுமா மந்திரியாரே?”

“ ‘வெச்சு செய்வதில் கில்லாடி’ என, பலரும் கூறுகிறார்கள் பிரபு!”

- கே.லக்‌ஷ்மணன்

ஜோக்ஸ் - 3

“தளபதியாரே... நமது படையில் சுமாராக எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?”

“நமது படை வீரர்கள் அத்தனை பேருமே ‘சுமார்’தான் மன்னா!”

- பாப்பனப்பட்டு வ.முருகன்

ஜோக்ஸ் - 3

“சமாதானமா... போரா அமைச்சரே?’’

“கிங்கா, சங்கா... என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் மன்னா!’’

- ஏந்தல் இளங்கோ