பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“இது வேற லெவல் படம்!”

  “இது வேற லெவல் படம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இது வேற லெவல் படம்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

``நாம சந்திக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனும் பலவித பரிமாணங்கள்ல இருக்காங்க. அதுல சில பரிமாணங் களை மட்டுமே நாம பாக்குறோம். பல பரிமாணங்கள் நமக்குத் தெரியறதே இல்லை. அப்படி நாம பார்க்காத பல பரிமாணங்களை காதலோடு சேர்த்து ‘முப்பரிமாண’மா பரிமாறி யிருக்கேன்’’ - டீஸர் கட் செய்கிறார் அறிமுக இயக்குநர் அதிரூபன். பாலா, கதிர்... என சீனியர்களிடம் சினிமா பயின்றவர்.

‘‘ ‘முப்பரிமாணம்’ அப்படி என்ன கதை?’’

‘‘இரண்டு கேரக்டர்கள், கதிர், அனு. இவங்களோட 8 வயதுல இருந்து 25 வயது வரை ஏற்படக்கூடிய அழகான சம்பவங்களின் தொகுப்பே `முப்பரிமாணம்'. காதல் கதைதான். ஆனா, இது வேற லெவல். இன்னைக்கு `காதல்'ங்கிறது ஒருத்தரோட எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் களமா மாறிடுச்சு. இந்த 4ஜி தலைமுறையின் காதலை வெரைட்டியான திரைக்கதையில் சொல்லியிருக்கேன்.’’

  “இது வேற லெவல் படம்!”
  “இது வேற லெவல் படம்!”

‘‘இங்கே வாராவாரம் காதல் படம்தானே வருது. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்?’’

``எப்பவும் எல்லாருக்கும் காதல்தான் எவர்கிரீன். நம்ம முன்னோர்கள் நிறையவே காதலிச்சிட்டாங்கங்கிறதால, நாம என்ன காதலிக்காமலா இருக்கோம்? எப்படி உண்மை யான காதல் அதோட இலக்கை சென்றடையுதோ, அதே உயிர்ப்போடு காதலை சொல்லிட்டோம்னா எந்தப் படமும் வெற்றியடையும். இயக்குநர் வெற்றி மாறன்கிட்ட இந்தக் கதையைச் சொன்னப்ப, `இதுல எல்லாருக்கும் நெருக்கமான ஒரு எமோஷன் இருக்கு. நிச்சயமா இந்தப் படம் பண்ணு'னு சொன்னார். அப்படி இந்தப் படத்தை ஒவ்வொருத்தரும் தங்களோட கனெக்ட் பண்ணிப்பாங்க.’’

  “இது வேற லெவல் படம்!”
  “இது வேற லெவல் படம்!”

``சாந்தனு-சிருஷ்டி டாங்கே, இந்தக் கதைக்கு எப்படிப் பொருந்தியிருக்காங்க?’’

``ஷூட்டிங்குக்கு முன்பே, ‘இந்தக் கதையை சாந்தனு தாங்குவாரா?’னு பலரும் டவுட்டா கேட்டாங்க. ஆனா, இப்ப சாந்தனுவின் நடிப்பைத்தான் ஹைலைட்டா சொல்றாங்க. என் ஹீரோங்கிறதுக்காக சொல்லலை. சாந்தனு உண்மையிலேயே ஒரு மல்டி டேலென்ட்டடு ஆர்டிஸ்ட். அவர் திறமைக்கும் உழைப்புக்கும் பெரிய இடம் காத்திருக்கு. சிருஷ்டி டாங்கேவுக்கு, சாந்தனுவுக்குச் சமமான கேரக்டர். இந்தப் படத்துக்குப் பிறகு அவங்களும் பரபரப்பாகி ருவாங்க.''

  “இது வேற லெவல் படம்!”
  “இது வேற லெவல் படம்!”

``படத்துல வேற என்ன ஸ்பெஷல்?''

``இசை, ஜி.வி.பிரகாஷ். வெற்றி மாறன்தான் ஜி.வி-கிட்ட இன்ட்ரொ கொடுத்தார். ஜி.வி-க்கும் கதை பிடிச்சிருந்தது. ஆனா, நாங்கதான் படத்தை ஆரம்பிக்க லேட் பண்ணிட்டோம். இதற்கிடையில் அவரே ஹீரோவாகி பரபரப்பாகிட்டார். இருந்தாலும் சொன்ன டைமுக்கு முடிச்சிக்கொடுத்தார். ஜி.வி-யோட இந்த ஆல்பம் நிச்சயம் பேசப்படும். கவிஞர் அறிவுமதி சாரின் மகன் ராசாமதிதான் ஒளிப்பதிவு. கதைக்கான கேமராமேன். தேசிய விருது வாங்கின எடிட்டர் விவேக் ஹர்ஷன்னு பக்காவான டீம். படம் ஹிட்டடிக்கும்ங்கிற நம்பிக்கை, மனசு முழுக்க நிறைஞ்சு இருக்கு ப்ரோ.’’