Published:Updated:

களவாணிக்கு கல்யாணம்!

களவாணிக்கு கல்யாணம்!

களவாணிக்கு கல்யாணம்!

களவாணிக்கு கல்யாணம்!

Published:Updated:
##~##
''ந
ம்ம 'களவாணி’ ஹீரோ விமலுக்குக் கல்யாணம் சார். ரகசியமா ரெஜிஸ்டர் மேரேஜ்...காதல் கல்யாணம் சார்!'' - நம் மாணவ நிருபர்தான் தகவல் சொன்னார். 'கிசுகிசுகூடக் கிளம்பவில்லையே!’என்று விமலைத் தேடினால்... கும்பகோணத்தில் 'எத்தன்’ படப்பிடிப்பில் இருந்தார். ''புது மாப்பிள்ளை விமலுக்கு வாழ்த்துக்கள்'' என்று கூக்ளி வீசியதுமே விழுந்தது விக்கெட்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தலைவா... இன்னும் பொண்ணோட அப்பா அம்மாவுக்கே விஷயம் தெரியாது. லஞ்ச் பிரேக்ல என் பார்ட்னரை அறிமுகப்படுத்துறேன்!'' என்று நல்ல பிள்ளையாக வழிக்கு வந்தார்.

லஞ்ச் பிரேக். ''ஹலோ... நான்தாங்க ப்ரியதர்ஷினி விமல். போன வாரம்தான் எனக்கும் அவருக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்துச்சு!'' என்று ஒரு கூடை வெட்கம், ஒரு கூடை கூச்சமுமாக நம் முன் அமர்ந் தார் அந்தப் பெண்.

''என் மாமா பொண்ணுதான் ப்ரியா. எனக்கு மணப்பாறை. அவங்களுக்கு திண்டுக்கல். சின்ன வயசுல ஒண்ணா கண்ணாமூச்சிலாம் ஆடுவோம். அப்பல்லாம் அறியாத வயசு, புரியாத மனசு. அப்புறம் தடார்னு 10 வருஷம் பார்த்துக்கவே இல்லை. அப்பப்போ திடீர்னு மனசுல க்ராஸ் பண்ணுவாங்க. அவ்வளவுதான்!'' என்று காதல் உரைக்கத் தொடங்கினார் விமல்.

களவாணிக்கு கல்யாணம்!

''சினிமாதான்னு முடிவு பண்ணி நான் சென்னைக்கு வந்த நேரம், எம்.பி.பி.எஸ்., படிக்க ப்ரியாவும் சென்னை வந்திருக்காங்க. திடீர்னு ஒரு நாள் தற்செயலா சந்திச்சோம். பார்த்ததுமே பரவசம் பல்லாங்குழி ஆடுச்சு எனக்கு. 'விமலு... இவதான்டா உன் மயிலு’ன்னு உள்ளே ஒரு குரல். மொபைல் நம்பர் கேட்டு வாங்கிட்டேன். சும்மா ஃபார்வர்ட், மொக்கை மெசேஜ்னுதான் போயிட்டு இருந்துச்சு. அவங்க பக்கம் இருந்து மஞ்சள் சிக்னல்கூட விழலை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்து, நானே சட்டுனு ஒருநாள் காதல் உடைச் சேன். அப்பவும் எனக்குத்தான் 'ஙே’! அவங்க பக்கம் இருந்து அப்பவும் நோ ரெஸ்பான்ஸ்.

களவாணிக்கு கல்யாணம்!

ஆனாலும் விடலையே! விடாது போராடி அடுத்தடுத்துக் களவாடி அவங்க மனசைக் கொள்ளை அடிச்சுட்டேன். இதுக்கு நடுவுல 'பசங்க’ ஹிட்டாகி, அடுத்தடுத்து ஷூட்டிங்னு பிஸி ஆகிட்டேன். 'இங்கிட்டு ப்ரியா... அங்கிட்டு மீனாட்சியா?’ன்னு லந்தடிப்பாங்க மேடம். அன்னிக்கு ஷூட்டிங்ல என்ன நடந்துச்சுன்னு தினமும் மேடம் கிட்ட ஒப்பிக்கணும். ரொமான்ஸ் ஸீன்ல நடிச்சு இருந்தா, எத்தனை டேக்னு கணக்கு சொல்லணும். இல்லைன்னா... பனிஷ்மென்ட்தான். அதுலயும் 'களவாணி’யில் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்த அன்னிக்கு ஓவர் பனிஷ்மென்ட்!'' என்று கலகலத்த விமல் முதுகில் செல்லமாக மொத்துகிறார் ப்ரியா.

''நல்லவர் மாதிரியே பேசுறார். ஆனா, பயங்கர வாலு சார். நான் விமலைக் காதலிக்கிறேன்னு என் கல்லூரித் தோழிகளுக்குத் தெரியும். டி.வி-யில் 'களவாணி’ பாட்டு வர்றப்பலாம் கிண்டலடிப் பாங்க!'' என்று விமல் முகம் பார்க்கிறார்.

'குறிப்பறிந்து’ தொடர்கிறார் கணவன். ''நான் நல்ல பையனா பொண்ணு கேட்டு அவங்க அப்பாகிட்ட போனேன். 'என் பொண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கேன். சினிமா நடிகனுக்குப் பொண்ணு தர மாட்டேன்’னு சொல்லிட்டார். அதோட ப்ரியாவுக்கு வேற வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டார். எங்களுக்கு வேற வழியே இல்லை. 'எத்தன்’ ஷூட்டிங்ல டைரக்டர் சுரேஷ்கிட்ட ஒரு மணி நேரம் பெர்மிஷன் வாங்கிட்டு, அரக்கப்பறக்க பறந்தோடிப் போயி சுவாமிமலை கோயிலில் கல்யாணம்

களவாணிக்கு கல்யாணம்!

கட்டிக்கிட்டு  திரும்ப வந்து நடிச்சேன். அதே மாதிரி, ரெஜிஸ்டர் ஆபீஸ் மூடுறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி அவசர அவசரமாப் போய் கல்யாணத்தைப் பதிவு பண்ணோம். 'களவாணி’ கல்யாணம் மாதிரியேதான் நிஜக் கல்யாணமும் பரபரன்னு முடிஞ்சது. எங்க வீட்ல முதல்ல திட்டிட்டு, பிறகு ஏத்துக்கிட்டாங்க. ப்ரியா வீட்டை நினைச்சாத்தான் கொஞ்சம் யோசனையா இருக்குது. டைரக்டர் பாண்டிராஜ் மாதிரி நெருக்கமானவங்களுக்கு மட்டும் விஷயம் தெரியும். சீக்கிரம் ரிசப்ஷன் ட்ரீட் கொடுக்கணும் நண்பா. அதுக்கு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விகடன்தான் இன்விடேஷன்!'' - ப்ரியாவின் கைகளை அழுத்த மாகப் பற்றிக்கொள்கின்றன விமலின் விரல்கள்!

எஸ்.ஷக்தி, ந.வசந்தகுமார் , படங்கள் : கே.குணசீலன்