Published:Updated:

அடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி?

அடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி?
பிரீமியம் ஸ்டோரி
News
அடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி?

பா.ஜான்ஸன்

’பாகுபலியை கொன்றது யார்?' என்பதைச் சொல்லவருகிறது `பாகுபலி பார்ட்-2’. இப்படி பல பார்ட்களாக வெளிவரத் தயாராக இருக்கின்றன, உலக அளவிலான பல சீக்வல் சினிமாக்கள்.

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 8:
FAST&FURIOUS  8

அடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி?

கலர் கலராக கார்கள், பரபர சேஸிங் ரேஸிங், இடையில் சின்ன சென்டிமென்ட், அதிரடி ஸ்டன்ட்ஸ் என காக்டெயிலாக ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது, `ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்’. இந்த முறை பனிப்பிரதேசங்களிலும் காரில் சீறிப்பாய இருக்கிறது `எஃப்.எஃப்-8’ குழு. `தி இத்தாலியன் ஜாப்’ புகழ் கேரி கிரேதான் இயக்குகிறார். அடுத்தடுத்து வரவிருக்கும் மூன்று பாகங்களும் தொடர்ச்சியாகப் படமாக்கப்பட்டு ஒரு ட்ரையாலஜியாக வெளியாக இருக்கிறது.

ட்வைலைட் 6:
TWILIGHT 6

அடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி?

ரத்தக்காட்டேரிப் பையனுக்கும் மனித இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையேயான ஆசம் லவ்தான் `ட்வைலைட்’. இது கிட்டத்தட்ட சீரியல்போல நீண்ட கதை கொண்டது. முதல் பாகத்தில் பெல்லா ஸ்வான் (க்ரிஸ்டர்ன் ஸ்டூவர்ட்) - எட்வர்டு இடையே காதல் பூக்க, அடுத்த பாகங்களில் இருவருக்கும் இடையே சின்னப் பிரிவு, ஹீரோ வீட்டில், `மனிதகுலப் பெண் எப்படி நம்ம வீட்டுக்கு சரிவரும்?’ எனக் கேட்டு, பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம்... குழந்தை பிறந்ததும் அது மனித குலத்தைச் சேர்ந்தது அல்ல, ரத்தக்காட்டேரி இனத்தைச் சேர்ந்ததுதான் என அறிந்துகொண்டதோடு முடிந்திருக்கிறது கடைசி பாகம். இதன் அடுத்த பாகமான `ட்வைலைட்: சன்செட் எட்டர்னிட்டி' படத்தில் ரெனிஸ்மீ (பெல்லா - எட்வர்டு மகள்) கதாபாத்திரத்தை மையமாக வைத்துதான் கதை நகருமாம்.
 
ஃபைனல் டெஸ்ட்டினேஷன் 6:
FINAL DESTINATION 6

அடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி?

`ஃபைனல் டெஸ்ட்டினேஷன்’ படத்துக்கு கொலைவெறி ரசிகர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். வில்லன்-ஹீரோ சண்டையின் இறுதியில் ஹீரோ ஜெயிப்பதைப் போல, இந்தப் படத்தின் இறுதியில் வெல்வது மரணம்தான். ஒரு விபத்தில் இருந்து தப்பிக்கும் நபர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிடுவார்கள். அதில் ஒருவருக்கு மட்டும் அடுத்து நடக்கப்போவது எல்லாம் தெரியும். இதுதான் ஐந்து பாகங்களின் கதையும். கடைசி இரண்டு பாகங்களும் 3டி-யில் வெளிவந்து, படம்பார்த்து வெளியே வருபவர்களுக்கு, பார்க்கும் பொருட்களில் எல்லாம் மரண பீதியைக் கொடுத்தது. ஐந்தாம் பாகம் வெளிவந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆறாவது பாகத்திலும் ஒரு விபத்து... அதைத் தொடர்ந்து நிகழும் மரணங்கள்தான் கதை.

மிஷன் இம்பாசிபிள் 6:
MISSION IMPOSSIPLE 6

அடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி?

`எம்.ஐ-5’ படத்துக்கான வேலைகளின்போதே அடுத்த பாகத்துக்கான கதை விவாதமும் நடந்தது. காரணம், ஆறாவது பாகத்தை உடனடியாகத் தொடங்கத்தான். கதை இப்போ ரெடி. படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களை முடிவுசெய்துகொண்டிருக்கிறது படக் குழு. `எம்.ஐ’-யில் மிக முக்கியமான விஷயமே அதிரடி ஸ்டன்ட், சாகசங்கள்தான். இந்தப் பாகத்தில் தெறி பாய், டாம் க்ரூஸ் பறக்கவிட இருப்பது மட்டும் உறுதி. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பம். 

ஐஸ் ஏஜ் 5 கொலிஷன் கோர்ஸ்:
ICE AGE5 COLLISION COURSE

அடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி?

மைக் துர்மியர், கேலன் டி. சூ என்ற இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில் படம் ஆல்மோஸ்ட் ரெடி. அக்கார்ன் பழத்தைப் பாதுகாக்கப் போராடுமே ஓர் அணில், அந்த ஸ்கார்ட் செய்யும் வேலை, எல்லோரையும் சிக்கலில் மாட்டிவிடுகிறது. ஸ்கார்ட் விண்வெளிக்குச் சென்று செய்யும் சேட்டையால் மொத்த விண்வெளி அமைப்பும் மாறி, பூமிக்கே ஆபத்து வரும் சூழல். இதில் இருந்து மேன்னி (யானை), சித் (தேவாங்கு), டியகோ (புலி) போன்றவை எப்படி தங்கள் இனத்தைக் காப்பாற்று கின்றன என்பதுதான் கதை.

3டி-யில் வெளியாக இருக்கிறது படம்.

ராங் டர்ன் 7:
WRONG TURN 7

அடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி?

மனித இறைச்சியைச் சாப்பிட்டு உயிர்வாழும் மூன்று அரக்கர்கள், மிக மறைவான காட்டுப்பகுதிகளில் வசிக்கிறார்கள். அங்கு தங்கள் விடுமுறையைக் கழிக்க வரும் நண்பர்களைக் கொன்று தின்னும் சினிமாவாக உருவானதுதான் `ராங் டர்ன்’ சினிமாவின் ஆரம்பம். ஆலன் பி.மிக்கலோரி எழுதிய இந்த முதல் பாகத்தை அடிப்படையாக வைத்து வந்த ஆறு பாகங்களும் ஹிட். கிட்டத்தட்ட `சா’ படத்தின் கொடூர வதைகள்தான் இதிலும் இடம்பெற்றிருக்கும். இப்போது ஏழாவது பாகம் தயாராகிறது. இந்தப் படம், `இந்த சீரிஸின் கடைசிப் பாகமாக இருக்கும்’ என்கிறார்கள். கதை முழுதாக ரெடியானதும் இயக்குநரை முடிவுசெய்ய இருக்கிறார்கள்.

இண்டியானா ஜோன்ஸ் 5:
INDIANA JONES 5

அடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி?

அட்வெஞ்சர் விரும்பி களுக்கான படம் `இண்டியானா ஜோன்ஸ்’. 90-களின் குழந்தைகள் நிச்சயமாக இதன் ஒரு பாகத்தையாவது பார்த்திருப்பார்கள். இயற்பியல் தொல்பொருள் ஆய்வாளரான ஜோன்ஸை, 10 கட்டளைகள் அடங்கிய பெட்டியைக் கண்டுபிடிக்க அனுப்புகிறது அமெரிக்க அரசாங்கம். அங்கு தொடங்கும் ஜோன்ஸின் பயணம், விலை உயர்ந்த ஸ்படிக மண்டை ஓட்டை தேடிச் சென்று, அங்கு இருந்து தப்புவதோடு முடிந்தது. அந்தப் பயணம் மீண்டும் ஆரம்பிக்கிறது. இந்த முறையும் ஜோன்ஸாக நடிப்பது 73 வயது ஹாரிசன் ஃபோர்டு. முந்தைய நான்கு பாகங்களை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்தான் டைரக்டர்.

அவதார் 2,3,4:
AVATAR 2,3,4

அடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி?

எல்லா ரசிகர்களுக்குமே மோஸ்ட் வான்டட் படமாக இருப்பது `அவதார்’  அடுத்த பாகம்தான். கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இந்தப் படத்தின் உருவாக்கத்திலேயே இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். எதற்காக இவ்வளவு தாமதம்? ஜேம்ஸ் அடுத்த மூன்று பாகங்களையும் தொடர்ச்சியாக வெளியிட இருக்கிறார். அதாவது 2017-ம் ஆண்டு டிசம்பரில் இரண்டாம் பாகத்தையும், 2018-ம் ஆண்டு டிசம்பரில் மூன்றாம் பாகத்தையும், 2019-ம் ஆண்டு டிசம்பரில் நான்காம் பாகத்தையும் வெளியிட இருப்பதால் பரபரப்பு பற்றுகிறது.  `2017-ஆண்டு கிறிஸ்துமஸ், `அவதார் கிறிஸ்துமஸ’்தான்்.